தாலமி சோத்தர்
தாலமி முதலாம் சோத்தர் (Ptolemy I Soter) (கிமு 367 – 283/282) பண்டைய கிரேக்க மாசிடோனியப் பேரரசர் அலெக்சாந்தரின் போர்ப்படைத்தலைவர்களில் ஒருவர்.[1][2][3][4][5]
தாலமி சோத்தர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முதலாம் தாலமி சோத்தரின் சிற்பம், இலூவா அருங்காட்சியகம், பாரிசு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பார்வோன் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | கிமு 305 – 283/282 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | நான்காம் அலெக்சாண்டர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | இரண்டாம் தாலமி பிலடெல்பியஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
தாலமி சோத்தர் | |
---|---|
பிறப்பு | கிமு 367 மக்கெடோனியா |
இறப்பு | கிமு 283/2 BC (வயது 84) அலெக்சாந்திரியா, தாலமைக் எகிப்து |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் | 13 |
உறவினர்கள் | மெலெனஸ் (சகோதரர்) |
கிமு 323ல் பாபிலொனில் பேரரசர் அலெக்சாந்தரின் மறைவிற்குப் பின்னர், கிரேக்கப் பேரரசின் தியாடோச்சி எனும் வாரிசுமைப் போரில், அலெக்சாந்தரின் ஐந்து போர்ப்படைத்தலைவர்களான, தாலமி சோத்தர், டயடோட்டஸ், செலூக்கஸ் நிக்காத்தர், ஆண்டிகோணஸ் சசாண்டர் மற்றும் லிசிமச்சூஸ் ஆகியோர் கிரேக்கப் பேரரசை தமக்குள் பிரித்து ஆண்டனர். இக்கிரேக்கப் படைத்தலைவர்கள் கிரேக்கப் பேரரசை ஆண்ட காலத்தை ஹெலனிய காலம் என்பர்.
தாலமி சோத்தர் (கிமு 323–283/2) நிறுவிய தாலமி வம்சத்தின் எகிப்தை மையமாகக் கொண்டு நிறுவப்பட்ட தாலமைக் பேரரசின் இறுதி காலத்தில் தற்கால எகிப்து, லிபியா மற்றும் துனிசியா நாடுகள் அடங்கியிருந்தது.
முதலாம் தாலமி சோத்தர், தாலமைக் வம்சத்தை நிறுவி தாலமைக் பேரரசை கிமு 323 முதல் கிமு 283 வரை ஆண்டார். இவரது வழித்தோன்றல்கள் கிமு 30 வரை மூன்று நூற்றாண்டுகள் ஆண்டனர். ஹெலனிய காலத்திய தாலமி சோத்தர் ஆட்சியில் எகிப்து பிரதேசத்தில் கிரேக்கப் பண்பாடு பரவியது. எகிப்து கடற்கரையில் அலெக்சாந்திரியா நகரம் சிறப்புடன் விளங்கியது.
தாலமி சோத்தரின் தாலமைக் பேரரசின் கிரேக்கப் பண்பாட்டு மையமாக அலெக்சாந்திரியா நகரம் விளங்கியது. இருப்பினும் பண்டைய எகிப்து மன்னர்களின் பெயரான பார்வோன் எனும் பட்டத்தை கிமு 305 முதல் இவரது வழித்தோன்றல்கள் சூட்டிக் கொண்டனர்.
யூக்ளிடு
தொகுதாலமி சோத்தர் பேரரசில் வாழ்ந்த யூக்ளிடு எனும் கிரேக்க கணிதவியல் அறிஞர் புதிய வடிவவியல் மற்றும் எண்ணியல் கோட்பாட்டை கண்டுபிடித்தார்.[6]
தாலமி வம்ச ஆட்சியாளர்கள்
தொகு- தாலமி சோத்தர் -ஆட்சிக் காலம் கிமு 303 – 282
- இரண்டாம் தாலமி - கிமு 285 – 246
- மூன்றாம் தாலமி - கிமு 246 – 221
- நான்காம் தாலமி - கிமு 221 – 203 - (சகோதரி & மனைவி முதலாம் கிளியோபாட்ரா)
- ஐந்தாம் தாலமி - கிமு 203 – 181
- ஆறாம் தாலமி - கிமு 181–164 மற்றும் 163 – 145 (சகோதரி & மனைவி இரண்டாம் கிளியோபாட்ரா)
- ஏழாம் தாலமி - ஆட்சி செய்யவில்லை
- எட்டாம் தாலமி - கிமு 170 – 163 மற்றும் 145 – 116)
- ஒன்பதாம் தாலமி - கிமு 116 –107 மற்றும் கிமு 88 – 81
- பத்தாம் தாலமி - கிமு 107 – 88 (சகோதரி & மனைவி நான்காம் கிளியோபாட்ரா)
- பதினொன்றாம் தாலமி - கிமு 80
- பனிரெண்டாம் தாலமி - கிமு 80–58 மற்றும் கிமு 55–51 (சகோதரி மற்றும் மனைவி ஐந்தாம் கிளியோபாட்ரா)
- பதிமூன்றாம் தாலமி - கிமு 51 - 47 (சகோதரி மற்றும் மனைவி ஏழாம் கிளியோபாட்ரா)
- பதினான்காம் தாலமி - கிமு 47 – 44 (சகோதரி மற்றும் மனைவி ஏழாம் கிளியோபாட்ரா)
- சிசேரியன் - கிமு 44 – 30 (ஏழாம் கிளியோபாட்ரா-ஜூலியஸ் சீசரின் மகன்)
கிளியோபாட்ராக்கள்
தொகு- முதலாம் கிளியோபாட்ரா
- இரண்டாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 145 – 116
- மூன்றாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 81 – 80
- நான்காம் கிளியோபாட்ரா
- ஐந்தாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 58 – 57 மற்றும் 58 – 55
- ஆறாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 58
- ஏழாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 51 – 30
படக்காட்சியகம்
தொகு-
தாலமி சோத்தர் உருவம் பொறித்த நாணயங்கள்
-
இந்தியாவைக் கைப்பற்றும் போரில் அலெக்சாந்தர் அணிந்த யாணைத் தோலினால் ஆன தலைக்கவசத்துடன் தாலமி சோத்தரின் நாணயம்
-
தாலமி சோத்தரின் யாணை உருவம் பொறித்த தங்க நாணயம்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Jones, Prudence J. (2006). Cleopatra: A Sourcebook. University of Oklahoma Press. p. 14.
They were members of the Ptolemaic dynasty of Macedonian Greeks, who ruled Egypt after the death of its conqueror, Alexander the Great.
- ↑ Pomeroy, Sarah B. (1990). Women in Hellenistic Egypt. Wayne State University Press. p. 16.
while Ptolemaic Egypt was a monarchy with a Greek ruling class.
- ↑ Redford, Donald B., ed. (2000). The Oxford Encyclopedia of Ancient Egypt. Oxford University Press.
Cleopatra VII was born to Ptolemy XII Auletes (80–57 BCE, ruled 55–51 BCE) and Cleopatra, both parents being Macedonian Greeks.
- ↑ Bard, Kathryn A., ed. (1999). Encyclopedia of the Archaeology of Ancient Egypt. Routledge. p. 488.
Ptolemaic kings were still crowned at Memphis and the city was popularly regarded as the Egyptian rival to Alexandria, founded by the Macedonian Greeks.
- ↑ Bard, Kathryn A., ed. (1999). Encyclopedia of the Archaeology of Ancient Egypt. Routledge. p. 687.
During the Ptolemaic period, when Egypt was governed by rulers of Greek descent...
- ↑ Robinson, Victor (2005). The Story of Medicine. Kessinger Publishing. p. 80. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4191-5431-7.[தொடர்பிழந்த இணைப்பு]
- இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Ptolemies". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 22. (1911). Cambridge University Press. 616–618.
ஆதார நூற்பட்டி
தொகு- Walter M. Ellis: Ptolemy of Egypt, London 1993.
- Christian A. Caroli: Ptolemaios I. Soter - Herrscher zweier Kulturen, Konstanz 2007.
- Waterfield, Robin (2011). Dividing the Spoils - The War for Alexander the Great's Empire (hardback). New York: Oxford University Press. pp. 273 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-957392-9.
வெளி இணைப்புகள்
தொகு- Ptolemy Soter I at LacusCurtius — (Chapter II of E. R Bevan's House of Ptolemy, 1923)
- Ptolemy I (at Egyptian Royal Genealogy, with genealogical table)
- Livius, Ptolemy I Soter by Jona Lendering
- Ptolemy I Soter entry in historical sourcebook by Mahlon H. Smith
- A genealogical tree of Ptolemy, though not necessarily reliable Alexander the Great