போரஸ், பர்வதேசுவரர் அல்லது புருவேந்தன், புருசோத்தமன் (Porus), பண்டைய இந்தியாவின் பஞ்சாப் பகுதிகளை ஆண்டவர் ஆவார். மாமன்னர் யயாதியின் மகன் புருவின் வழித்தோன்றலான பௌரவ ( பாண்டவ மற்றும் கௌரவர்கள்) அரச மரபினர் ஆவார்.[1]இவருக்கு பிறகு இவரது மகன் மலயகேது அரசரானார். [2]

போரஸ்
மன்னர் போரஸ்
Surrender of Porus to the Emperor Alexander.jpg
அலெக்சாண்டரிடம் சரணடையும் போரஸ், ஓவியம் ஆண்டு, 1865
பௌரவ மன்னர்கள்
ஆட்சிகி மு 340–317
முன்னிருந்தவர்பமினி
பின்வந்தவர்மலயகேது
மரபுபௌரவ அரசமரபு
தந்தைபமினி
தாய்அனுசுயா
பிறப்புபஞ்சாப்
இறப்புகி மு அண். 321 – அண். 315
பஞ்சாப்
சமயம்பிற்கால வேதகால சமயம்
யாணையின் மீது போரஸ் மன்னர், 16ஆம் நூற்றாண்டின் ஓவியம்
அலெக்சாண்டரிடம் சரணடையும் மன்னர் போரஸ்

ஜீலம் ஆற்றாங்கரையில் ஹைடஸ்பேஸ் என்ற இடத்தில், யானைப்படையையே பார்த்திராத அலெக்ஸாண்டரின் படைகள் முதல் முறையாக போரஸின் யானைப்படையை பார்த்ததில் பிரமித்து பயந்து பின்னோக்கி அடியெடுத்து வைத்தனர். பின்னர் கி.மு.326-ல் நடந்த போரசுக்கு எதிரான போர்களில் வெற்றி கொண்ட அலெக்சாண்டர் போரஸ்சின் வீரத்தை கண்டு வியந்து போரஸிடம் நட்பு பாராட்டி, தான் வென்ற பகுதிகளுக்கு போரஸ் மன்னரையே சத்ரபதியாக நியமித்து கௌரவித்தார்.

ஹைடஸ்பஸ் போர்தொகு

அலெக்சாண்டர் கி மு 326இல் படகுப்பாலம் அமைத்து சிந்து ஆற்றை கடந்தார். அங்கு தக்சசீலா மன்னரும், போரசின் எதிரியுமான அம்பியை எதிர்கொண்டார். அப்போது ஜீலம் ஆற்றை கடந்து பஞ்சாபின் ஹைடஸ்பேஸ் என்ற இடத்தை அடைந்தார். இந்திய மன்னர் போரசின் யானைப்படைகளை எதிர்த்து யாராலும் எதிர்த்து போரிட இயலாது என அலெக்சாண்டரிடம் தெரிவித்தனர். ஆனால் அலெக்சாண்டர் அத்தனை தடைகளையும் மீறி தந்திரமாக மன்னர் போரஸ்சின் யானைப் படைகளை வென்றார்.

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

ஆதார நூற்பட்டியல்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போரஸ்&oldid=3409346" இருந்து மீள்விக்கப்பட்டது