அம்பி, மன்னர்

தச்சசீல மன்னர்

அம்பி (Taxiles) (கிரேக்க மொழி: Tαξίλης or Ταξίλας); கி.மு. நான்காம் நூற்றாண்டில், பேரரசர் அலெக்சாந்தர் இந்தியாவின் மீது படையெடுத்த போது, பரத கண்டத்தின் மேற்கே தற்கால செனாப் ஆறு மற்றும் ஜீலம் ஆறுகளுக்கிடையே, உள்ள பகுதியான தக்சசீலா இராச்சியத்தை ஆண்ட இந்து சமய அரசன் ஆவார்.[1] பண்டைய இந்தியாவில் இம்மன்னரை அம்பி (Ambhi) என்பர்.[2] இம்மன்னர் தக்சசீலா பகுதிகளை ஆண்டதால், கிரேக்க வரலாற்று குறிப்புகளில் இம்மன்னரின் பெயர் தக்சில்ஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[3][4]

பேரரசர் அலெக்சாந்தருக்கு பரிசு வழங்கும் மன்னர் அம்பி
மன்னர் அம்பியுடன் மன்னர் போரஸ் போர் புரிதல்

வரலாறு

தொகு

கிமு 327ல் பேரரசர் அலெக்சாந்தர் இந்தியாவின் மீது படையெடுத்த போது முதலில் காந்தார நாட்டின் தலைநகரான தட்சசீலத்தை தாக்கினார். அலெக்சாந்தரின் படைகளை எதிர் கொள்ள இயலாத மன்னர் அம்பிராஜின் மகனான அம்பிகுமார்[5]என்ற அம்பி, அலெக்சாந்தரிடம் சமாதானம் பாரட்ட, 200 இராத்தல் வெள்ளி, 3,000 காளைகள், 10,000 ஆடுகள், 30 போர் யானைகள், 7,00 போர்க் குதிரைகளை அலெக்சாந்தருக்கு பரிசளித்தான். மேலும் அலெக்சாந்தரின் படைகள், சிந்து ஆற்றை கடந்து பஞ்சாப் பகுதிகளுக்குச் செல்ல உதவி செய்தார். [5] அம்பியின் இச்செயலை, பஞ்சாப் பகுதி மன்னர் புருசோத்தமன் இகழ்ந்துரைத்தார்.[6][7] மன்னர் அம்பியின் வழிகாட்டுதலின் படி, 50,000 கிரேக்கப் படைகள் சிந்து ஆற்றைக் கடந்து ஹைடாஸ்பெஸ் போரில் பஞ்சாப் மன்னர் புருசோத்தமனை, அலெக்சாந்தரின் படைகள் வெற்றி கண்டது. [8][9]

இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Taxiles, RULER OF TAXILA
  2. Waldemar Heckel (2002). The Wars of Alexander the Great, 336-323 B.C. Taylor & Francis. p. 48. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-96855-3.
  3. Diodorus Siculus, Bibliotheca, xvii. 86
  4. Curtius Rufus, Historiae Alexandri Magni, viii. 12
  5. 5.0 5.1 Sastri 1988, ப. 55.
  6. Sastri 1988, ப. 46.
  7. Jonathan Mark Kenoyer; Kimberly Burton Heuston (1 October 2005), The Ancient South Asian World, Oxford University Press, p. 110, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-522243-2
  8. Arrian, v. 8, 18, 20
  9. Curtius, viii. 14, ix. 3

மேற்கோள்கள்

தொகு

  This article incorporates text from a publication now in the பொது உரிமைப் பரப்புWilliam Smith (1870). "Taxiles". Dictionary of Greek and Roman Biography and Mythology.  

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பி,_மன்னர்&oldid=3760384" இலிருந்து மீள்விக்கப்பட்டது