செலூசியா

செலூசியா (Seleucia), பேரரசர் அலெக்சாந்தரின் படைத்தளபதியான செலூக்கஸ் நிக்காத்தர், (கிமு 305–281) எலனியக் காலத்தில் செலூக்கியப் பேரரசின் தலைநகரமாக புதிய செலூசிய நகரத்தை, தற்கால ஈராக் நாட்டின் பாக்தாத் ஆளுநகரத்தில் பாயும் டைகிரிஸ் ஆற்றின் மேற்கு கரையில் கிமு 305ல் நிறுவப்பட்டது. செலூசியா நகரம் 5.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. செலூக்கியப் பேரரசில் பொழிவுடன் விளங்கிய செலூசியா நகரம் படிப்படியாக வீழ்ச்சி அடைந்து கிபி 165ல் முற்றிலும் சிதைந்து போனது. சிதைந்த இந்நகரத்தை 1927–1932, 1936–1937, 1964–1968 மற்றும் 1985–1989 ஆகிய ஆண்டுகளில் லெராய் வாட்டர்மென், கிளார்க் ஹோப்கின்ஸ், அந்தோனியா இன்வெர்நிஸ்சி மற்றும் ஜியோர்சியா குல்லினி போன்ற தொல்லியல் அறிஞர்களால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.

செலூசியா
ஈராக்கின் நடுவில் செலூசியா நகரம்
ஈராக்கின் நடுவில் செலூசியா நகரம்
Shown within Iraq
இருப்பிடம்பாக்தாத் ஆளுநகரம், ஈராக்
பகுதிமெசொப்பொத்தேமியா
ஆயத்தொலைகள்33°5′40″N 44°31′20″E / 33.09444°N 44.52222°E / 33.09444; 44.52222
வகைகுடியிருப்பு
பரப்பளவு5.5 km2 (2.1 sq mi)
வரலாறு
கட்டுநர்செலூக்கஸ் நிக்காத்தர்
கட்டப்பட்டதுகிமு 305
பயனற்றுப்போனதுகிபி 165
காலம்எலனியக் காலம்
கலாச்சாரம்பண்டைய கிரேக்கம், பார்த்தியம், சாசானியம்
பகுதிக் குறிப்புகள்
அகழாய்வு தேதிகள்1927–1932, 1936–1937, 1964–1968, 1985–1989
அகழாய்வாளர்லெராய் வாட்டர்மென், கிளார்க் ஹோப்கின்ஸ், அந்தோனியா இன்வெர்நிஸ்சி, ஜியோர்சியா குல்லினி
ஹெர்குலீசின் வெண்கலச் சிற்பம், செலூசியா தொல்லியல் களம்
ஹெர்குலீசின் வெண்கலச் சிற்பத்தின் தொடைப் பகுதிகளில் கிரேக்க மற்றும் பார்த்திய மொழிகளில் குறிப்புகள், செலூசியா தொல்லியல் களம்

வரலாறுதொகு

செலூக்கியப் பேரரசின் ஆட்சியில்தொகு

எலனியக் காலத்தில் செலூக்கியப் பேரரசர் செலூக்கஸ் நிக்காத்தர் கிமு நான்காம் நூற்றாண்டின் துவக்கத்தில் தனது இரண்டாவது தலைநகராக செலூசியா நகரத்தை நிறுவினார். புதிய செலூசிய நகரத்திற்கு பாபிலோன் நகரத்து குடிமக்கள் குடியேற்றப்பட்டனர்.இருப்பினும் இவரது முதன்மை தலைநகரம், தற்கால சிரியா-துருக்கியில் எல்லையில் இருந்த அந்தியோக்கியா நகரம் ஆகும்.[1]

 
நிர்வாணப் பெண்ணின் சிறிய சிலை, டைகிரிசு ஆறு, காலம் கிமு 3 அல்லது 2ம் நூற்றாண்டு

பார்த்தியப் பேரரசின் ஆட்சியில்தொகு

பாரசீகத்தின் பார்த்தியப் பேரரசர் முதலாம் அர்தசிர் (கிபி 211/2–224) ஆட்சிக் காலத்தில் செலுசியா நகரத்தில் தேவாலயங்கள் கட்டப்பட்டு கிறித்துவர்களின் வாழ்விடமாக மாறியது.

 
நான்காம் நூற்றாண்டில் செலூசிய நகரம்

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1.    "Seleucia". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 24. (1911). Cambridge University Press. 
பிழை காட்டு: <ref> tag with name "aper" defined in <references> is not used in prior text.

உசாத்துணைதொகு

மேலும் காண்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செலூசியா&oldid=3732942" இருந்து மீள்விக்கப்பட்டது