எலனியக் காலம்

கிமு 323 முதல் 31 வரையிலான மத்திய தரைக்கடல் வரலாற்றின் காலம்

ஹெலனிய காலம் (Hellenistic period) (கிமு 323 – கிபி 31) என்பது கிமு 323இல் பேரரசர் அலெக்சாண்டரின் இறப்பிற்கும், கிபி 31இல் உரோமைப் பேரரசின் எழுச்சிக்கும் இடையே, பண்டைய கிரேக்க நாட்டிலும், மத்தியதரைக் கடல் ஒட்டியப் பகுதிகளின் வரலாறுகளை கூறும் காலமாகும். மேலும் இக்கால கட்டத்தின் இறுதியில் பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்கர்களின் தாலமைக் பேரரசு ரோமனியர்களால் வீழ்த்தப்பட்டது[1] [2]ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் கிரேக்க காலனி ஆதிக்கத்தை நிறுவப்பட்டதே ஹெலனிய காலத்தின் சிறப்பம்சம் ஆகும். [3]

பேரரசர் அலெக்சாந்தர் காலத்திய கிரேக்கப் பேரரசின் பகுதிகள்
அலெக்சாண்டரின் மறைவிற்குப் பின்னர் கிரேக்கப் பேரரசின் வாரிசுரிமைப் போருக்குப் பின் கிரேக்க பேரரசை, கிரேக்கப் படைத்தலைவர்கள் பங்கிட்டு ஆண்ட ஹெலனியக் கால பகுதிகளின் வரைபடங்கள்
கி மு 200இல் ஹெலனிய காலத்திய மாசிடோனியாவும், ஏஜியன் கடல் கிரேக்க காலனிகளும்
ஹெலனிய கலையின் உச்சாணியாக விளங்கும் சிற்பம்
ஹெலனிய காலத்திய சிற்பம்

வரலாறு

தொகு

அலெக்சாண்டரின் இறப்பிற்குப் பின்னர், கிரேக்கப் பேரரசை, அவரது ஐந்து படைத்தலைவர்களான செலுக்கஸ் நிக்கோடர், தாலமி சோத்தர், லிசிமச்சூஸ், ஆண்டிகோணஸ் மற்றும் சசாண்டர் ஆகியோர் பங்கிட்டுக்கொண்டு தனி உரிமையுடன் ஆண்டனர். ஹெலியனியக் காலத்தில், ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களில் கிரேக்கப் பண்பாட்டின் தாக்கம் அதிகரித்து இருந்தது. குறிப்பாக கிரேக்க நுண்கலைகள், கட்டிடக் கலை, சிற்பக் கலை, இசை, இலக்கியம், தத்துவம், கணிதம், சமயம், மொழி, அறிவியலின் தாக்கம் கிரேக்க படைத்தலைவர்கள் ஆண்ட ஹெலனிய நாடுகளில் குறிப்பாக தற்கால எகிப்து, துருக்கி, சிரியா, ஈரான், ஈராக், பாக்திரியா மற்றும் ஆப்கானித்தான் நாடுகளில் பரவியது.

அலெக்சாண்டரின் படையெடுப்பால் கி மு 330இல் அகண்ட பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசு வீழ்ச்சிக்குப் பின் இறந்து போன அலெக்சாண்டரின் கிரேக்கப் பேரரசின் பகுதிகளை கிரேக்கப் படைத்தலைவர்கள், ஐந்து தனித்தனி நாடுகளாக பங்கிட்டு ஆண்டனர். அந்நாடுகளை ஹெலனிய கால நாடுகள் என்பர். ஹெலனிய கால நாடுகளில் முக்கியமானது தென்மேற்கு ஆசியாவின் செலூக்கியப் பேரரசு, நடு ஆசியாவின் கிரேக்க பாக்திரியா பேரரசு, வடகிழக்கு ஆப்பிரிக்காவின், மத்திய தரைக்கடல் ஒட்டிய தாலமைக் பேரரசு, கிரேக்கம் மற்றும் துருக்கி உள்ளடக்கிய பெர்காமோன் இராச்சியம் மற்றும் இந்தோ கிரேக்க நாடு என ஐந்தாகும்.[4]

ஹெலனிய கால நாடுகளின் வீழ்ச்சி

தொகு

கி மு 146இல் கிரேக்கர்களின் தாயகமான மக்கெடோனியா மற்றும் கி மு 31இல் கிரேக்க தாலமைக் பேரரசு, உரோமைப் பேரரசால் வெற்றி கொள்ளப்பட்டது. பின்னர் கிரேக்கப் பேரரசின் ஐரோப்பா மற்றும் துருக்கி பகுதிகளை வென்று, கி மு 33இல் உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் இசுதான்புல் நகரத்தை தலைநகராகக் கொண்டு உரோமைப் பேரரசை ஆண்டார். [5][6]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Hellenistic Age.Encyclopædia Britannica, 2013. Retrieved 27 May 2013.
  2. Art of the Hellenistic Age and the Hellenistic Tradition.Heilbrunn Timeline of Art History, Metropolitan Museum of Art, 2013. Retrieved 27 May 2013.
  3. "Professor Gerhard Rempel, Hellenistic Civilization (Western New England College)". Archived from the original on 2008-07-05. பார்க்கப்பட்ட நாள் 2016-10-16.
  4. Green, p. xvii.
  5. "Hellenistic Age". Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica, Inc. பார்க்கப்பட்ட நாள் 8 September 2012.
  6. Green, P. Alexander The Great and the Hellenistic Age. p. xiii. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7538-2413-9.

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலனியக்_காலம்&oldid=4057342" இலிருந்து மீள்விக்கப்பட்டது