முதலாம் டேரியஸ்
முதலாம் டேரியஸ் (Darius I) داریوش (கிமு 550 – 486) அகாமனியப் பேரரசின் நான்காம் பேரரசர் ஆவார். இவரை மகா டேரியஸ் என்பர். உச்சநிலையில் இருந்த அகாமனியப் பேரரசின் கீழ் பாரசீகம், அனதோலியா, வடக்கு மற்றும் பண்டைய எகிப்து, பண்டைய அண்மை கிழக்கு, நடு ஆசியா, காக்கேசியா மற்றும் பண்டைய ஐரோப்பாவின் பால்கன் குடா பகுதிகளை ஆட்சி செய்தவர்.[4][5][6]
முதலாம் டேரியஸ் | |||||
---|---|---|---|---|---|
அகாமனிசியப் பேரரசர்[1] பாபிலோனின் மன்னர் எகிப்தின் பார்வோன் | |||||
பெர்சப்போலிசில் முதலாம் டேரியஸ்சின் உருவச்சிலை | |||||
பாரசீகப் பேரரசர் | |||||
ஆட்சி | கிமு 522 முதல் கிமு 486 முடிய (36 ஆண்டுகள்) | ||||
முடிசூட்டு விழா | பசர்கடே | ||||
முன்னிருந்தவர் | பார்த்தியா | ||||
பின்வந்தவர் | முதலாம் செர்கஸ் | ||||
எகிப்தின் பார்வோன் வார்ப்புரு:Ancient Egyptian royal titulary case[2] | |||||
அரசுப்பிரதிநிதி | கிமு 522 கிமு 486 (36 ஆண்டுகள்) | ||||
முன்னிருந்தவர் | பார்த்தியா | ||||
பின்வந்தவர் | முதலாம் செர்கஸ் | ||||
துணைவர் |
| ||||
வாரிசு(கள்) |
] | ||||
| |||||
அரச குலம் | அகாமனிய வம்சம் | ||||
தந்தை | ஹிஸ்டேச்பீஸ் | ||||
தாய் | ரோடோக்குன் | ||||
பிறப்பு | கிமு 550 | ||||
இறப்பு | கிமு 486 (64 வயது) | ||||
அடக்கம் | நக்ஸ் ருஸ்தம், ஈரான் | ||||
சமயம் | சொராட்டிரிய நெறி[3] |
முதலாம் டேரியஸ் தன் பேரரசை மாகாணங்களாகப் பிரித்து, அதனை சத்திரபதிகள் எனும் ஆளுநர்களின் கீழ் கொண்டு வந்தார். அரமேய மொழியை அரச மொழியாக்கியவர். பேரரசு முழுவதும் ஒரே நாணய முறை மற்றும் எடை மற்றும் அளவுகோள்கள் முறைகளை நடைமுறைப்படுத்தினார்.[7]
சூசா, பசர்கடே, பெர்சப்பொலிஸ், பாபிலோன் மற்றும் எகிப்திய நகரங்களில் புதிய கட்டுமானப் பணிகள் தொடங்கினார். பழைய பாரசீக மொழி, ஈலமைட்டு, பபிலோனிய மொழி ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட ஒரே உரையைக் கொண்ட பெஹிஸ்ட்டன் கல்வெட்டுகளில், தனது போர் வெற்றிகளையும், தன் வாழ்க்கை வரலாற்றையும் சுருக்கமாகக் குறித்துள்ளார்.
பழைய ஏற்பாட்டின் தானியேல் (நூல்), ஆகாய் (நூல்), செக்கரியா நூல்களில் பாரசீகப் பேரரசர் முதலாம் டேரியஸ்சின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது.
கிரேக்க வரலாற்று அறிஞர் எரோடோட்டசு, தனது வரலாற்று நூலின் மூன்றாம் பகுதியில், அகாமனியப் பேரரசர் கௌதமன் எனும் பார்த்தியாவிடமிருந்து பேரரசை முதலாம் டேரியஸ் பறித்துக்கொள்வது முதல், டேரியசின் ஆட்சிக் காலம் முடியும் வரை விளக்கப்பட்டுள்ளது.[8]
படையெடுப்புகள்
தொகுதனது அகாமனியப் பேரரசை நன்கு வலுப்படுத்திக் கொண்ட டேரியஸ், எகிப்திய மன்னர் பார்வோன், முதலாம் காம்பிசஸ் உடனான போரில் வென்று, எகிப்தை அகமானியப் பேரரசில் இணைத்தார். [9]
டேரியசின் தொடர் படையெடுப்புகளால் மேற்கில் பால்கன், திரேசு, மாசிடோனியா, பல்கேரியா பகுதிகளையும், கிழக்கில் சிந்து சமவெளி வரை தனது அகாமனியப் பேரரசை விரிவுபடுத்தினார்.
சிந்து சமவெளி மீதான படையெடுப்புகள்
தொகுகிமு 516ல் டேரியஸ் நடு ஆசியாவின், பாக்திரியா, ஆப்கானித்தான், தற்கால பாகிஸ்தானின் தக்சசீலா மீது போர் தொடுத்து வென்றார்.
கிமு 516 - 515 குளிர்காலத்தில் பேரரசர் டேரியஸ் காந்தாரத்தில் தங்கி, சிந்து சமவெளியைக் கைப்பற்றி ஆயத்தப் பணிகளை மேற்கொண்டார். கிமு 515ல் சிந்து சமவெளியையும்; அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் வென்றார்.[10] பின்னர் தற்கால பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திலிருந்து, எகிப்திற்கு கடல் வழிப் கப்பல் பாதைக்கு வித்திட்டார்.
பின்னர் போலன் கணவாய் வழியாக பாரசீகதிற்கு திரும்பினார்.
பாபிலோன் கிளர்ச்சி
தொகுகௌதமா என்ற பார்த்தியாவின் கொலைக்குப் பின் கிழக்கு அகாமனிசியப் பேரரசு முழுவதும், குறிப்பாக அனதோலியா மாகாணத்தின் ஐயோனியாவின் கிரேக்கர்களின் பெருங்கிளர்ச்சிகள் பரவியது. எனவே பேரரசு முழுவதும் படைகளை அனுப்பி கலவரங்களை ஒடுக்கி தன்னை பாரசீகத்தின் பேரரசர் என்பதை டேரியஸ் நிலைநாட்டினார்.
பாபிலோனில் மூன்றாம் நெபுகத்நேசர் தலைமையில் நடைபெற்ற கிளர்ச்சிகள் குறிப்பிடத்தக்கவை. இக்கிளர்ச்சிகளின் போது, டேரியசின் படைகள் பாபிலோன் நகரத்திலிருந்து பின்வாங்கியது.
பின்னர் பெரும் படைகளை திரட்டி வந்து பாபிலோனை முற்றுகையிட்டார். ஒன்றரை ஆண்டுக்களுக்குப் பின்னரே, பேரரசர் டேரியசின் படைகள் தந்திரமாக பால்பிலோனை கைப்பற்றி கிளர்ச்சிகளை அடக்க முடிந்தது. [11]
டேரியசின் பாரசீகப் படைகள் பாபிலோன் கிளர்ச்சியை அடக்கச் சென்ற நேரத்தில், நடு ஆசியாவின் நாடோடி மக்களான சிதியர்கள், பாரசீகத்தைக் கைப்பற்றி சேதங்களை விளைவித்தனர்.
அசிரியா, பாபிலோன், ஈலாம் பகுதிகளில் நடைபெற்ற பெருங் கிளர்ச்சிகளை அடக்கிய டேரியஸ் தனது படைகளுடன் பாரசீகத்திற்கு திரும்பி வந்து, சிதியர்களை அடித்துத் துரத்தினார். [12]
ஐரோப்பிய சிதியர்களுக்கு எதிரான படையெடுப்புகள்
தொகுகிழக்கு பாரசீகத்தின் கால்நடைகளை மேய்க்கும் நாடோடி மக்களான சிதியர்கள், சிறிது காலம் பாரசீகத்தை கைப்பற்றி சூறையடியாவர்கள். மேலும் நடு ஆசியாவின் தன்யூப் ஆறு மற்றும் கருங்கடலிற்கிடையே உள்ள வணிகப் பாதையை அடைத்து, பாரசீகத்தின் வணிகத்தை சீர்குலைத்தனர். [8][13] கிமு 513ல் பாரசீகப் பேரரசர் முதலாம் டேரியஸ் கருங்கடலைக் கடந்து கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றி சிதியர்களை ஒடுக்கினார்.[14] மேலும் சிதியர்களின் கோட்டைகளையும், வாழ்வாதரங்களையும் அழித்தார். சிதியர்களின் பெரும்பகுதியை தேசப்படுத்திய களைப்படைந்த டேரியசின் படைகள் நோய்களால் துன்பமுற்றது. படைகளின் உயிர் சேதத்தை தவிர்க்க டேரியசின் படைகள், வால்கா ஆற்றின் கரையிலிருந்து, பண்டைய கிரேக்கத்தின் திராசு நகரை நோக்கி திரும்பிச் சென்றது. [15]
டேரியசின் கிரேக்க முற்றுகை
தொகுடேரியசின் ஐரோப்பா முற்றுகையில் கிரேக்கத்தின் திராசு பகுதியும், மாசிடோனியாவும் எவ்வெதிர்ப்பின்றி டேரியசிடம் தானாகப் பணிந்தது.
ஏஜியன் கடலுக்கு வடக்குப் பகுதிகளில் உள்ள நாடுகளை தனக்கு கப்பம் கட்டும் நாடுகளாக பணிந்தது. [16] பேரரசர் டேரியஸ் பின்னர் சார்டிஸ் நகரத்தில் குளிர்காலத்தை கழித்தார்.
கிமு 510ல் கிரேக்கத் தீவுகள் மற்றும் அனத்தோலியா பகுதிகளை ஆண்ட கிரேக்க குறுநில மன்னர்கள் டேரியசின் மேலாண்மையை ஏற்றனர். கிரேக்க - பாரசீக உறவுகளை மேம்படுத்த, தன் பேரரசில் பணி புரிய விரும்பும் கிரேக்க படைவீரர்கள், மாலுமிகள், அரசியல் விற்பன்னர்கள் மற்றும் கலைஞர்களுக்கு பேரரசர் டேரியஸ் தன் கருவூலங்களையும், அரசவையையும் திறந்து விட்டார். பாரசீகப் பேரரசின் அனதோலியா மற்றும் லிடியா பகுதிகளில் கணக்கற்ற கிரேக்க குடியேறிகளால் நிரம்பி வழிந்தது.
பின்வருங்காலங்களில் இக்கிரேக்கக் குடியேறிகளால் அகமானியப் பேரரசிற்கு எதிராக அனதோலியாவில் பெருங்கிளர்ச்சிகள், ஏதன்ஸ் மற்றும் எரித்திரிய போன்ற உரோமை ஆதரவுடன் நடைபெற்றது. இதுவே கிரேக்க பாரசீகப் போர்களுக்கு வித்திட்டது.
கிமு 490ல் கிரேக்கர்களின் ஐயோனியக் கிளர்ச்சியை அடக்க, கிரேக்கர்களின் ஏதன்ஸ் மற்றும் எரித்திரியா நகரங்கள் மீது வந்த பாரசீக தரைப்படையும், கப்பற்படையும், மாரத்தான் போரில் ஈடுபட்டது. போரின் முடிவில் கிரேக்கப்படைகள், பாரசீகப் படைகளை தந்திரமாக வெற்றி கொண்டனர்.
கிரேக்க-பாரசீகப் போர்கள்
தொகுமுதலாம் டேரியஸ், கிரேக்கர்களுடன் கிமு 499 முதல் 486 முடிய நடத்திய கிரேக்க-பாரசீகப் போர்கள் மூலம் நன்கறியப்படுகிறார். தன் பேரரசுக்குட்பட்ட ஐயோனியாவில் நடந்த கிளர்ச்சியை தூண்டிய கிரேக்கர்களை அடக்கி ஆண்டவர்.
அகாமனிசியப் பேரரசர்கள்
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Collins, John J.; Manning, J. G. (2016). Revolt and Resistance in the Ancient Classical World and the Near East: In the Crucible of Empire (in ஆங்கிலம்). BRILL. p. 99. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004330184.
- ↑ Jürgen von Beckerath, Handbuch der ägyptischen Königsnamen (= Münchner ägyptologische Studien, vol 46), Mainz am Rhein: Verlag Philipp von Zabern, 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-8053-2310-7, pp. 220–21.
- ↑ Mary Boyce, Zoroastrians: Their Religious Beliefs and Practices, (Taylor & Francis, 1979), 54–55.
- ↑ "The Behistun Inscription". Archived from the original on 2013-09-25. பார்க்கப்பட்ட நாள் 2018-05-09.
- ↑ "DĀḠESTĀN". பார்க்கப்பட்ட நாள் 29 December 2014.
- ↑ "The Making of the Georgian Nation". பார்க்கப்பட்ட நாள் 29 December 2014.
- ↑ Pollard, Elizabeth (2015). Worlds Together, Worlds Apart concise edition vol.1. New York: W.W. Norton & Company, Inc. p. 132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-393-25093-0.
- ↑ 8.0 8.1 Shahbazi 1996, ப. 41.
- ↑ Del Testa 2001, ப. 47.
- ↑ "Darius the Great". Archived from the original on 2013-09-23. பார்க்கப்பட்ட நாள் 2018-05-14.
- ↑ Sélincourt 2002, ப. 234–235.
- ↑ Siliotti 2006, ப. 286–287.
- ↑ Woolf 2004, ப. 686.
- ↑ Miroslav Ivanov Vasilev. "The Policy of Darius and Xerxes towards Thrace and Macedonia" பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-28215-7 p 70
- ↑ Chaliand 2004, ப. 16.
- ↑ Joseph Roisman, Ian Worthington. "A companion to Ancient Macedonia" John Wiley & Sons, 2011. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4443-5163-X pp 135–138, p 343
ஆதார நூற்பட்டியல்
தொகு- Abott, Jacob (1850), History of Darius the Great, New York: Harper & Bros
- Balentine, Samuel (1999), The Torah's vision of worship, Minneapolis: Fortress Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8006-3155-0
- Bedford, Peter (2001), Temple restoration in early Achaemenid Judah (illustrated ed.), Leiden: BRILL, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-11509-5
- Bennett, Deb (1998), Conquerors: The Roots of New World horsemanship, Solvang, CA: Amigo Publications, Inc., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9658533-0-6
- Boardman, John (1988), The Cambridge ancient history, Volume 4, The Cambridge ancient history, vol. IV (II ed.), Cambridge: Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-22804-2
- Boardman, John, ed. (1982). The Cambridge Ancient History. Vol. 10: Persia, Greece, and the Western Mediterranean. Cambridge, UK: கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். pp. 239–243. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-22804-6.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Boyce, Mary (1979), Zoroastrians: Their Religious Beliefs and Practices, London: Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7100-0121-5
- Cook, J. M. (1985), "The Rise of the Achaemenids and Establishment of their Empire", The Median and Achaemenian Periods, Cambridge History of Iran, vol. 2, London: Cambridge University Press
- எரோடோட்டசு, ed. (2015). The Histories. Knopf Doubleday Publishing Group. p. 352. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-375-71271-5.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Safra, Jacob (2002), The New Encyclopædia Britannica, Encyclopædia Britannica Inc, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85229-787-4
- Sélincourt, Aubrey (2002), The Histories, London: Penguin Classics, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-044908-6
- Shahbazi, Shapur (1996), "Darius I the Great", Encyclopedia Iranica, vol. 7, New York: Columbia University
- Siliotti, Alberto (2006), Hidden Treasures of Antiquity, Vercelli, Italy: VMB Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 88-540-0497-9
- Spielvogel, Jackson (2009), Western Civilization: Seventh edition, Belmont, CA: Thomson Wadsworth, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-495-50285-5
- Tropea, Judith (2006), Classic Biblical Baby Names: Timeless Names for Modern Parents, New York: Bantam Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-553-38393-0
- Van De Mieroop, Marc (2003), A History of the Ancient Near East: Ca. 3000-323 BC, "Blackwell History of the Ancient World" series, Hoboken, NJ: Wiley-Blackwell, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-631-22552-2
- Verlag, Chronik (2008), The Chronicle of World History, Old Saybrook, CT: Konecky and Konecky, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56852-680-6
- Duncker, Max (1882), Evelyn Abbott (ed.), The history of antiquity (Volume 6 ed.), R. Bentley & son
- Egerton, George (1994), Political memoir: essays on the politics of memory, Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7146-3471-5
- Moulton, James (2005), Early Zoroastrianism, Kessinger Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4179-7400-9
- Del Testa, David (2001), Government leaders, military rulers, and political activists (illustrated ed.), Greenwood Publishing Group, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57356-153-2
- Poolos, J (2008), Darius the Great (illustrated ed.), Infobase Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7910-9633-8
- Kuhrt, A. (2013). The Persian Empire: A Corpus of Sources from the Achaemenid Period. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-01694-3.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Farrokh, Kaveh (2007), Shadows in the desert: ancient Persia at war, Osprey Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84603-108-3
- Beckwith, Christopher (2009), Empires of the Silk Road: a history of Central Eurasia from the Bronze Age to the present (illustrated ed.), Princeton University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-13589-2
- Chaliand, Gérard (2004), Nomadic empires: from Mongolia to the Danube (illustrated, annotated ed.), Transaction Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7658-0204-0
- Woolf, Alex; Steven Maddocks; Richard Balkwill; Thomas McCarthy (2004), Exploring Ancient Civilizations (illustrated ed.), Marshall Cavendish, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7614-7456-2
- Ross, William; H. G. Wells (2004), The Outline of History: Volume 1 (Barnes & Noble Library of Essential Reading): Prehistory to the Roman Republic (illustrated ed.), Barnes & Noble Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7607-5866-3, பார்க்கப்பட்ட நாள் 28 July 2011
- Abbott, Jacob (2009), History of Darius the Great: Makers of History, Cosimo, Inc., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60520-835-0
மேலும் படிக்க
தொகு- Burn, A.R. (1984). Persia and the Greeks : the defence of the West, c. 546-478 B.C. (2nd ed.). Stanford, Calif.: Stanford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8047-1235-2.
- Ghirshman, Roman (1964). The Arts of Ancient Iran from Its Origins to the Time of Alexander the Great. New York: Golden Press.
- Olmstead, Albert T. (1948). History of the Persian Empire, Achaemenid Period. Chicago: University of Chicago Press.
- Vogelsang, W.J. (1992). The rise and organisation of the Achaemenid Empire : the eastern Iranian evidence. Leiden: Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-09682-5.
- Warner, Arthur G. (1905). The Shahnama of Firdausi. London: Kegan Paul, Trench, Trübner and Co.
- Wiesehöfer, Josef (1996). Ancient Persia : from 550 BC to 650 AD. Azizeh Azodi, trans. London: I.B. Tauris. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85043-999-0.
- Wilber, Donald N. (1989). Persepolis : the archaeology of Parsa, seat of the Persian kings (Rev. ed.). Princeton, N.J.: Darwin Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87850-062-6.