மூன்றாம் அர்தசெராக்சஸ்


மூன்றாம் அர்தசெராக்சஸ் (Artaxerxes III (பழைய பாரசீக மொழியில்|𐎠𐎼𐎫𐎧𐏁𐏂) பாரசீக அகாமனிசியப் பேரரசை கிமு 404 முதல் கிமு 358 முடிய 46 ஆண்டுகள் ஆண்ட பேரரசர் ஆவார்.[1][2] இவர் கிமு 343-இல் பண்டைய எகிப்தின் பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட முப்பதாம் வம்சத்தின் பார்வோன் இரண்டாம் நெதெனெபோவை வென்று, எகிப்தை பாரசீகத்தின் ஒரு மாகாணமாக அறிவித்தார். மாசிடோனியாவின் மன்னர் மக்கெடோனின் இரண்டாம் பிலிப் ஆட்சிக் காலத்தில் கிமு 350 - 341-களில் போனீசியா, சைப்பிரசு மற்றும் சிதோன் நகரங்களில் அகாமனிசியப் பேரரசுக்கு எதிராக கிரேக்கர்கள் நடத்திய பெரும் கிளர்ச்சிகளை ஒடுக்கினார். இவர் பெர்சப்பொலிஸ் நகரத்தில் புதிய அரண்மனையை நிறுவத் துவங்கினார். மேலும் ஏஜியன் கடல் அருகே உள்ள கிரேக்கர்களின் ஐயோனியா மற்றும் ஏதன்ஸ் நாட்டவர்களின் மத்தியதரைக் கடல் அருகே இருந்த லைசியா மற்றும் சிசிலி போன்ற நகரங்களை மூன்றாம் அர்தசெராக்சஸ் படைகள் கைப்பற்றியது. [3]கிமு 338-இல் மூன்றாம் அர்தசெராக்சஸ் இறந்த பின் அவர் மகன் அர்செஸ் அகாமனிசியப் பேரரசின் அரியணையில் அமர்ந்தார்.

மூன்றாம் அர்தசெராக்சஸ்
மன்னர்களின் மன்னர்
பேரரசர்
அகாமனிசியப் பேரரசர்
எகிப்தின் பார்வோன்
மூன்றாம் அர்தசெராக்சஸ்சின் சிற்பம்
அகாமனிசியப் பேரரசர்
ஆட்சிக்காலம்கிமு 358 – 338
முன்னையவர்இரண்டாம் அர்தசெராக்சஸ்
பின்னையவர்அர்செஸ்
எகிப்திய பார்வோன்
ஆட்சிக்காலம்கிமு 343 – 338
முன்னையவர்இரண்டாம் நெக்தனெப்போ
பின்னையவர்அர்செஸ்
இறப்புகிமு 338
புதைத்த இடம்
குழந்தைகளின்
பெயர்கள்
அர்செஸ்
இரண்டாம் பாரிசதிஸ்
அரசமரபுஅகாமனிசிய வம்சம்
தந்தைஇரண்டாம் அர்தசெராக்சஸ்
தாய்ஸ்தேதைரா
மதம்சொராட்டிரிய நெறி
மூன்றாம் அர்தசெராக்சஸ்சின் கல்லறை, பெர்சப்பொலிஸ் நகரம் ஈரான்
மூன்றாம் அர்தசெராக்சஸ் கல்லறையில் அகாமனிசியப் பேரரசின் பல்வேறு இனக்குழுவின் போர்வீரர்களின் சிற்பம்


படக்காட்சிகள் தொகு

அகாமனிசியப் பேரரசர்கள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

ஆதார நூற்பட்டியல் தொகு

பண்டைய நூல்கள் தொகு

தற்கால நூல்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Artaxerxes III
என்பதின் ஊடகங்கள் உள்ளன.