மாரத்தான் சமர்
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
மாரத்தான் சமர் (Battle of Marathon) கிமு 490 ஆம் ஆண்டில் கிரேக்கம் மீதான பாரசீகர்களின் முற்றுகையின் முதல் கட்டத்தில் இடம் பெற்றது. இப்போர் பண்டைய கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகர மக்களுக்கும், பாரசீகத்தின் அகாமனிசிய பேரரசர் முதலாம் டேரியசின் படைகளுக்கும் இடையே நடைபெற்றது. போரின் முடிவில் கிரேக்கப்படைகள் வெற்றி கொண்டது. பாரசீகப்படைகள் தோற்று ஓடியது.[1]
மாரத்தான் சமர் Battle of Marathon |
|||||||
---|---|---|---|---|---|---|---|
கிரேக்க-பாரசீகப் போர்களின் பகுதி | |||||||
இன்றைய மாரத்தான் சமவெளி |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஏத்தன்சு, பிளாட்டீயா | அகாமனிசியப் பேரரசு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
இளைய மில்டியாடீஸ், Callimachus | தேடிஸ் Artaphernes |
||||||
பலம் | |||||||
9–10,000 ஏதன்ஸ் வீரர்கள், 1,000 பிளாட்டியா வீரர்கள் | தரைப்படை 20,000 – 100,000 மற்றும் குதிரைப்படை 1,000 போர்க்கப்பல்கள் 600, தரைப்படை 200,000 – 600,000 மற்றும் குதிரைப்படை 10,000 |
||||||
இழப்புகள் | |||||||
ஏதன்ஸ் வீரர்கள் 192 , பிளாட்டிய வீரரகள் 11 (எரோடோட்டசு) | இறப்பு 6,400 அழிக்கப்பட்ட கப்பல்கள் 7 (எரோடோட்டசு) |
வரலாறு
தொகுஅகாமனிசிய பேரரசின் அனதோலியா மாகாணத்தில் ஐயோனியா பகுதியில் வாழ்ந்த கிரேக்கர்கர்கள், அகாமனிசியப் பேரரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் துவங்கினர். எனவே கிரேக்கர்களுக்கு பாடம் புகட்ட பேரரசர் முதலாம் டேரியஸ், கடல்வழியாக 600 கப்பற்படைக் கொண்டு ஏதென்ஸ் மீது படையெடுத்தார்.
முதலில் கிரேக்கத்தின் எரீத்திரியா தீவை முற்றுகையிட்டார். ஆறு நாள்கள் முற்றுகையை தாக்குப்பிடித்த எரித்திரியா, முடிவில் பெர்சியாவிடம் வீழ்ந்தது. கோட்டையும், வீடுகளும், ஆலயங்களும் அழித்து தீக்கிரையாக்கப்பட்டன, மக்கள் அடிமைகளாக சிறைபிடிக்கப்பட்டனர். இனி ஏதென்ஸை எளிதில் வீழ்த்தி விடலாம் என்ற நம்பிக்கையுடன் ஏதென்ஸ் நகரத்திலிருந்து சுமார் இருபத்தாறு மைல் தொலைவிலிருந்த மாரத்தானில் தரை இறங்கியது பெர்சியப்படை. பெர்சியர்களின் வலிமையான குதிரைப்படையுடன் தரைப்படையும் சிறந்த தளபதியான தேடிஸ் தலைமையில் அணிவகுத்து போருக்குத் தயாராக நின்றது.
மற்றொரு கிரேக்க நகர அரசான ஸ்பார்ட்டாவிற்கு உதவி கோரி மிக வேகமாக ஓடக்கூடிய வீரரான பிலிப்பிடீசு என்பவனை ஏதென்ஸ் அனுப்பியிருந்தது. மலைகள் சூழப்பட்ட மாரத்தான் போர்களத்திலிருந்து ஏதென்சுக்கு செல்லும் வழிகளை அடைத்துக்கொண்டு பெர்சியர்களை எதிர்கொள்ள தயாராக இருந்தது ஏதென்ஸ் படை. வெறும் 10,000 காலாட்படைவீரர்களைக் கொண்டிருந்த ஏதென்ஸ் படைகளுக்கு ஒவ்வொரு பழங்குடி இனத்திற்கும் ஒரு தளபதி என்ற வகையில் பத்து தளபதிகள் இருந்தனர். அனைத்துப்படைகளுக்கும் கால்லிமாக்கஸ் தலைமை வகித்தார். அவர்களுக்குத் துணையாக 1000 பிளேத்தீனிய வீரர்களும் களத்தில் இருந்தனர்.
ஐந்து நாட்கள் இரண்டுப்படைகளும் சண்டையிடாமலே இருந்தன. ஸ்பார்ட்டாவிடமிருந்து உதவி வருவதற்கு தாமதமாகும் என்ற செய்தி வந்து சேர்ந்தது. அன்றைக்கு, கி.மு. 490 செப்டம்பர் மாதம் பன்னிரெண்டாம் நாள் மில்டியாடீசு தான் கிரேக்கப்படைகளுக்குத் தலைமைத்தாங்கினார். அற்புதமான தாக்குதல் வியூகத்தை வகுத்த பின் ‘வெற்றி அல்லது வீரமரணம்’ என்ற முடிவுடன் தாக்குதலை ஆரம்பித்த கிரேக்கப்படை யாரும் கற்பனை செய்திராத வகையில் மாபெரும் பெர்சியப்படையை சிதறடித்தது. 6000க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்த பெர்சியப்படை பின்வாங்கி கடல் வழியாக ஏதென்ஸ் நகரை தாக்க முடிவு செய்தது. மாரத்தான் போர்களத்தில் தாங்கள் பெற்ற மாபெரும் வெற்றிச்செய்தியை சொல்லவும், ஏதென்ஸ் மக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்யவும் ஓட்டவீரரான பீலிப்பிடீசை தவிர யாரால் முடியும். தனது தாய்நாட்டின் வெற்றிசெய்தியை மக்களுக்கு சொல்ல மூன்று மணி நேரத்தில் இருபத்தாறு மைல்களை ஓடிக்கடந்த பீலீப்பிடீசு செய்தியை சொன்ன மறுகணம் வீரமரணமடைந்து வரலாற்றில் நிலைபெற்றார். இந்த நிகழ்ச்சியின் நினைவாகவே ‘மாரத்தான் ஓட்டம்’ என்னும் நெடுந்தூர ஓட்டம் பெயரிடப்பட்டிருக்கிறது. பின் ஏதென்ஸ் படை நகரை அடைந்தது. பயந்து போன பெர்சியர்கள் தரையிறங்காமலே பின் வாங்கி சென்றனர். இந்த போர்கள வெற்றியானது அதற்கு பின் வந்த கிரேக்க நகர அரசுகள் மக்களாட்சி வழியில் நடைபெற அடித்தளம் அமைத்துக்கொடுத்தது. வரலாற்றில் நேரடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் போரான ‘முதல் மாரத்தான் போர்’ ஐரோப்பிய நாகரீக வளர்ச்சிக்கு வித்திட்டது என்றால் மிகையில்லை.