மில்டியாடீசு
மில்டியாடீஸ் (Miltiades, கிரேக்கம் : Μιλτιάδης கிரேக்கம்: Μιλτιάδης ; c. கி.மு. 550 - 489 ), இளைய மில்டியாடீஸ் (Miltiades the Younger) என்றும் அழைக்கப்படுபவர், கிரேக்க ஏதெனியன் குடிமகனும் தளபதியும் ஆவார். மராத்தான் போரில் இவரது சிறந்த பங்கிற்காகவும், பின்னர் இவரது வீழ்ச்சிக்காகவும் அறியப்படுகிறார். இவர் ஒரு புகழ்பெற்ற ஒலிம்பிக் தேர்ப் பந்தய வீரரான சிமோன் கோலெமோசின் மகன் மற்றும் ஏதெனிய நாட்டின் பிரபல அரசியல்வாதியான சிமோனின் தந்தை ஆவார்.
மில்டியாடீஸ் | |
---|---|
மில்டியாட்சின் கிரேக்க மார்பளவு ரோமானிய சிலையின் நகல் (அசல் காலம் கிமு 5-4 ஆம் நூற்றாண்டு) | |
சுதேசியப் பெயர் | Μιλτιάδης |
பிறப்பு | கி.மு 550 ஏதென்ஸ் |
இறப்பு | கி.மு 489 ( 60-61 வயதில்) ஏதென்ஸ் |
சார்பு | ஏதென்ஸ் |
தரம் | General (ஸ்ட்ராட்டெகாய்ஸ்) |
போர்கள்/யுத்தங்கள் | European Scythian campaign of Darius I கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் முதல் படையெடுப்பு பிற
|
நினைவிடங்கள் | Statue of Nemesis by Pheidias |
குடும்பம்
தொகுமில்டியாட்ஸ் உயர்குடியில் பிறந்த ஏதெனியன். மேலும் ஏசிடேயின் உறுப்பினராகவும், [1] அத்துடன் முக்கிய பிலாய்ட் குலத்தின் உறுப்பினராகவும் கருதினார்.பிசிசுடரேசுகளின் சர்வாதிகார ஆட்சியின் போது இவர் வளர்ந்தார்.
ஒலிம்பிக் தேர்ப் பந்தயத்தில் இவர்கள் குடும்பம் பெற்ற வெற்றியின் காரணமாக இவரது குடும்பம் முக்கியத்துவம் வாய்ந்தது. [1]
மில்டியாட்சுக்கு அவரது தந்தையின் தாய்வழி சகோதரர் மில்டியாட்ஸ் தி எல்டர் என்பவரின் நினைவாக இவருக்கு பெயரிடப்பட்டது, அவர் ஒலிம்பிக் தேர் பந்தயத்தில் வெற்றி பெற்றவர்.
மில்டியாட்சின் மகன் சிமோன் கிமு 470 மற்றும் 460 களில் ஏதெனியர்களில் ஒரு முக்கிய நபராக இருந்தார். புளூடார்ச் பதிவு செய்தபடி, அவரது மகளான எல்பினிஸ் பெரிக்கிள்சுடனான மோதல்களுக்காக நினைவுகூரப்படுகிறாள்.
மாரத்தான் போர்
தொகுமராத்தான் போரில் பாரசிகர்களை தோற்கடித்த போர்த் தந்திரங்களை வகுத்த பெருமையை மில்டியாட்ஸ் பெற்றார்.[2] கிமு 490இல் ஏதேனிய படையின் பத்து ஜெனரல்களில் ஒருவராக மில்டியாட்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். பத்து ஜெனரல்களைத் தவிர, ஒரு 'பிரதான படைத் தலைவன்' (polemarch) இருந்தார். (இந்த பிரதான படைத் தலைவர் ஜெனரல்களில் இருந்து சுழற்ச்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.) மராத்தானில் இறங்கிய பாரசீகர்களை உடனடியாக தாக்கலாமா அல்லது ஏதென்சுக்கு அருகில் அவர்களுடன் சண்டையிட காத்திருக்கலாமா என்பது போன்ற உத்திகுறித்து பத்து தளபதிகள் கூடி பெரும்பான்மையை அடிப்படையில் முடிவு செய்ய வேண்டியிருந்தது.[3]
பாரசீகர்களை எதிர்த்துப் போரிடுவதில் மிகவும் அனுபவம் வாய்ந்த மில்டியாட்ஸ், பாரசீகர்கள் ஏதென்சை முற்றுகையிட்டால் அதன் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதால், பாரசீகர்களை எதிர்த்து உடனடியாகப் போரிட வேண்டும் என்றும் அதற்கு ஆதரவாக பிரதான படைத் தலைவரை வேண்டும் வலியுறுத்துவதினார். விரைவான தாக்குதலுக்கு ஆதரவாக தனது தீர்க்கமான வாக்கைப் பயன்படுத்துமாறு பிரதான படைத் தலைவரை இவர் வலியுறுத்தி சம்மதிக்க வைத்தார்.[4][n 1]
போரின்போது மில்டியாடீசு புதுவிதமான தந்திரங்கள் கொண்ட உத்திகளை வகுத்து அதை தளபதிகளுக்கு எடுத்துக்கூறி அவர்களை சம்மதிக்க வைத்தார். இந்த தந்திரோபாயங்கள் பாரசீகர்களை தோற்கடிப்பதில் வெற்றி பெற்றன. அவர்கள் பின்னர் சௌனியன் முனையைச் சுற்றி பயணம் செய்து மேற்கிலிருந்து அட்டிகாவை தாக்க முயன்றனர்.[6] மில்டியாட்ஸ் தனது வீரர்களுடன் ஒரே இரவில் அட்டிகாவின் மேற்குப் பகுதிக்கு விரைவாக அணிவகுத்துச் சென்று, பாரசீகர்கள் உள்நாட்டிற்குச் செல்வதைத் தடுக்க, மராத்தான் சமவெளியில் இருந்து வெளியேறும் இரு பாதைகளைத் தடுக்கிறார். முந்தைய நாள் மாலை தன்னைத் தோற்கடித்த வீரர்களைக் கண்டு தாடிஸ் தப்பிச் சென்றனர்.[6]
பாரோசுக்கு பயணம்
தொகுஅடுத்த ஆண்டு (கிமு 489), பாரசீகர்களை ஆதரித்ததாகக் கருதப்பட்ட கிரேக்க மக்கள் வசிக்கும் தீவுகளுக்கு எதிராக எழுபது கப்பல்கள் கொண்ட ஏதெனியன் கடற்படைக்கு மில்டியாட்ஸ் தலைமை ஏற்று வழிநடத்தினார். இந்தப் போர்ப் பயணம் வெற்றியடையவில்லை. இவரது உண்மையான உந்துதல் பாரோசைத் தாக்குவதாகும், இவர் கடந்த காலத்தில் அவர்களால் அவமதிக்கப்பட்டதாக உணர்வு கொண்டிருந்தார்.[8] பாரசீகர்களால் கைப்பற்றப்பட்ட தீவை கடற்படை தாக்கியது, ஆனால் அதை கைப்பற்றத் தவறியது. போர்த் தொடரின் போது மில்டியாட்ஸ் காலில் ஒரு மோசமான காயம் ஏற்பட்டது. அதனால் முடமானார். இவரது அந்தத் தோல்வியானது இவர் ஏதென்சுக்குத் திரும்பியபோது இவருக்கு எதிரான கூக்குரல் எழத் தூண்டுகோலானது. இவருடைய அரசியல் போட்டியாளர்கள் இவரது வீழ்ச்சிக்காக இதை பயன்படுத்திக் கொண்டனர். தேசத்துரோகக் குற்றச்சாட்டில் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் தண்டனையானது ஐம்பது தாலந்துகள் அபராத்த் தொகையாக மாற்றப்பட்டது. இவர் சிறைக்கு அனுப்பப்பட்டார், அங்கு இவர் இறந்தார். ஒருவேளை இவரது காயத்தில் ஏற்பட்ட குடலிறக்கம் காரணமாக இருக்கலாம். இவருக்கு விதிக்கபட்ட அபராதத்த்தை இவரது மகன் சிமோன் செலுத்தினார்.[9]
சிலை
தொகுபின்னர் பீடியசு மில்டியாட்ஸின் நினைவாக, ராம்னஸில் உள்ள இறைவியின் கோவிலில், நெமசிசிசின் என்ற தெய்வத்தின் சிலையை நிறுவினார், இந்த தெய்வத்தின் பணியானது மிகுந்த நன்மைகளை அனுபவித்தவர்களுக்கு திடீரென்று தீவாய்ப்பை கொண்டு வருவதாகும். பாரசீகர்கள் மீதான வெற்றியின் நினைவுச்சின்னத்திற்காக கிரேக்க பிரபுவான டாடிஸ் வழங்கிய பளிங்குக் கற்றாகளால் இந்த சிலை செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.[9]
குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Creasy (1880) pg. 9
- ↑ Creasy (1880) pg. 11–20
- ↑ Creasy (1880) pg. 11
- ↑ Herodotus vi.109.
- ↑ Herodotus VI, 110
- ↑ 6.0 6.1 Creasy (1880) pg. 26
- ↑ Chrysopoulos, Philip (2 June 2020). "The Awe-Inspiring Helmet of Legendary Ancient Greek Warrior Miltiades". Greek Reporter. பார்க்கப்பட்ட நாள் 1 September 2020.
- ↑ Creasy (1880) pg. 27
- ↑ 9.0 9.1 Creasy (1880) pg. 28