தேர்ப் பந்தயம்
தேர்ப் பந்தயம் (Chariot racing) (கிரேக்கம்: ἁρματοδρομία harmatodromia, இலத்தீன்: ludi circenses) என்பது உரோமைப் பேரரசு ,பண்டைக் கிரேக்கம் மற்றும் பைசாந்தியப் பேரரசுகளில் விளையாடப்பட்ட ஒரு பிரபலமான விளையாட்டு ஆகும். இது மிகவும் ஆபத்தான விளையாட்டாகும். ஏனெனில் இந்த விளையாட்டுக்களில் குதிரைகளுக்கும் அதில் சவாரி செய்யும் வீரர்களுக்கும் அதீத காயங்கள் ஏற்படுகின்றன. சில வேளைகளில் இறப்பும் ஏற்படுகிறது. ஆனால் இந்தப் போட்டியைக் காணும் பார்வையாளர்களுக்கு இது ஒரு ஆர்வத்தினையும் பெரும் மகிழ்ச்சியையும் தருகிறது. மற்ற விளையாட்டுப் போட்டிகளைக் காண பெண்களுக்குத் தடை இருந்த காலத்திலும் இதனைப் பெண்களும் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். உரோமைப் பேரரசு கால தேர்ப் பந்தயங்களில் சூதாட்டக்காரர்களின் அணிகளுக்கு இடையில் போட்டி நடந்தது. ஆனால் நவீன கால தேர்ப் பந்தயம் என்பது கால்பந்தாட்டம் போன்று தனக்கு விருப்பமானவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உள்ளது.
உரோமைப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் இந்த விளையாட்டு அதன் முக்கியத்துவத்தினை இழக்கத் துவங்கியது. பைசாந்தியப் பேரரசு காலத்தில் இந்தப் போட்டியானது நடந்துகொண்டிருந்தது. நிகா போராட்டம் காரணமாக தேர்ப் பந்தய விளையாட்டு சிதையத் துவங்கியது.
பண்டையக் கிரேக்க யுகம்
தொகுபழங்கால தேர்ப் பந்தயம்
தொகுதேர்ப் பந்தயம் எப்போது துவங்கியது என்பது பற்றியத் தெளிவான வரலாறு இல்லை. ஆனால் குதிரைகளின் காலத்தைப் போலவே மிகவும் பழமையானதாக இருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. ஆனால் மைசீனியா கிரீசின் காலமான (கி.மு 1600-1100 கி.மு.) காலகட்டத்தில் மட்பாண்டங்களில் தேர்ப் பந்தயம் நடந்ததற்கான கலையியல் ஆதாரங்கள் இருந்தன. [a] தேர்ப் பந்தயத்திற்கான முதல் இலக்கிய ஆதாரங்கள் ஓமர் எழுதிய இலியட் எனும் இலக்கியத்தில் காணப்படுகிறது. இவ்விலக்கியத்தின் கதைமாந்தரான பாட்ரக்லசினுடைய இறுதிச் சடங்கு விளையாட்டுகளில் இது விளையாடப்பட்டது.[1] இந்த விளையாட்டில் தியோமதெஸ், யூமிலஸ்,ஆந்திலோகஸ், மற்றும் மெரியோன்ஸ் ஆகியோர் பங்குபெற்றனர். இந்தப் போட்டியில் தியோமதெஸ் வெற்றி பெற்றார். அவருக்குப் பரிசாக ஒரு பெண் அடிமை மற்றும் கொப்பரை போன்றவற்றைப் பரிசாகத் தந்தனர்.
ஒலிம்பிக் விளையாட்டுகள்
தொகுபழங்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இரண்டு குதிரைகள் பந்தயம் மற்றும் நான்கு குதிரைகள் பந்தயம் ஆகிய இரண்டு போட்டிகளும் நடந்தன.[b] தேர்ப் பந்தயப் போட்டிகள் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் அனோ டொமினி 680 இல் சேர்க்கப்பட்டது.[2]
உரோமைப் பேரரசு யுகம்
தொகுஉரோமைப் பேரரசுவில் வாழ்ந்த மக்கள் தேர்ப் பந்தயத்திற்குத் தேவையான குதிரைகளையும்,பந்தயத்திற்கான அடிச்சுவடுகளையும் அனேகமாக எட்ரூஸ்கன்சிடம் இருந்து இரவலாக வாங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆனால் எட்ரூஸ்கன்ஸ்கள் இதனை கிரேக்கர்களிடம் இருந்து இரவல் பெற்றனர். மேலும் ரோமானிய மக்கள் கிரேக்கர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தனர்.[3] [4][c] உரோமைப் பேரரசின் முதல் அரசரான ரோமுலஸ் அதன் அண்டை நகரங்களுக்கு ஒரு வரவேற்புக்கடிதம் அளித்தார். அதில் கன்சஸ் எனும் கடவுளைப்[5] போற்றும் விதமாகக் கொண்டாடப்படும் கன்சாலியா எனும் திருவிழாவைக் கொண்டாடவும் அதில் தேர்ப் பந்தயம் மற்றும் தேர் பந்தயம் போன்றவற்றை நடத்துமாறும் தெரிவித்திருந்தார். ரோமானிய மக்கள் கொண்டாடும் மதத் திருவிழாக்களில் தேர்ப் பந்தயம் என்பது ஒரு அங்கமாகவே பார்க்கப்பட்டது. மேலும் இத்தகைய விழாக்கள் தேரோட்டிகள் அணிவகுக்க , இசையுடன் நடனக் கலைஞர்களின் நடனத்துடன் நடைபெறுகின்றன. ஆனால் இத்தகைய போட்டிகளில் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள் கலந்துகொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.[6]
சான்றுகள்
தொகு
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ A number of fragments of pottery from show two or more chariots, obviously in the middle of a race. Bennett asserts that this is a clear indication that chariot racing existed as a sport from as early as the thirteenth century BC. Chariot races are also depicted on late Geometric Art
- ↑ Synoris succeeded tethrippon in 384 BC. Tethrippon was reintroduced in 268 BC (Valettas & Ioannis 1955, ப. 613).
- ↑ In Rome, chariot racing constituted one of the two types of public games, the ludi circenses. The other type, ludi scaenici, consisted chiefly of theatrical performances (Balsdon 1974, ப. 248; Mus 2001–2011).
- ↑ Homer. The Iliad, 23.257–23.652.
- ↑ Polidoro & Simri 1996, ப. 41–46.
- ↑ Golden 2004, ப. 35.
- ↑ Harris 1972, ப. 185.
- ↑ Plutarch. "Life if Romulus", in Parallel Lives|Plutarch's Lives, trans. Aubrey Stewart and George Long. London and New York: George Bell and Sons, 1894. XV
- ↑ Beard, North & Price 1998, ப. 262.