பாரோஸ்

கிரைக்கத் தீவு

பாரோஸ் (Paros, கிரேக்கம்: Πάρος‎  ; வெனிஸ் : Paro ) என்பது நடு ஏஜியன் கடலில் உள்ள ஒரு கிரேக்க தீவு ஆகும். இது சைக்லேட்ஸ் தீவுக் கூட்டத்தில் ஒன்றாகும். இது நக்சோஸ் தீவின் மேற்கில் அமைந்துள்ளது. அதிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர்கள் (5 மைல்கள்) அகலம் கொண்ட கடற்பரப்பால் இது பிரிக்கப்பட்டுள்ளது. இது பிரேயசுக்கு தென்கிழக்கே தோராயமாக 150 கிமீ (93 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. பாரோஸ் நகராட்சியானது 196.308 சதுர கிலோமீட்டர் (75.795 சதுர மைல்) நிலப்பரப்பைக் கொண்டதாகவும், ஏராளமான மக்கள் வாழாத கடல் தீவுகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. [2] இதன் தென்மேற்கில் அமைந்துள்ள ஆன்டிபரோஸ் நகராட்சி இதன் அருகிலுள்ள அண்டை நகராட்சி ஆகும். பண்டைய கிரேக்கத்தில், பாரோஸ் நகர அரசு இந்தத் தீவில் அமைந்திருந்தது.

பாரோஸ்
Πάρος
மேல் இடமிருந்து: பரிகியா, பனாகியா எகடோன்டாபிலியானி, பிராங்கிஷ் கோட்டை, ஒரு பாரோஸ் தெரு
மேல் இடமிருந்து: பரிகியா, பனாகியா எகடோன்டாபிலியானி, பிராங்கிஷ் கோட்டை, ஒரு பாரோஸ் தெரு
அமைவிடம்

No coordinates given

Location within the region
அரசாண்மை
நாடு: கிரேக்கம்
நிர்வாக வலயம்: தெற்கு ஏஜியன்
மண்டல அலகு: பாரோஸ்
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் (as of 2011)[1]
நகராட்சி
 - மக்கள்தொகை: 13,715
 - பரப்பளவு: 196.3 km2 (76 sq mi)
 - அடர்த்தி: 70 /km2 (181 /sq mi)
சமூகம்
 - மக்கள்தொகை: 6,058
Other
நேர வலயம்: EET/EEST (UTC+2/3)
உயரம் (min-max): 0–724 m ­(0–2375 ft)
அஞ்சல் குறியீடு: 844 00
தொலைபேசி: 22840
வாகன உரிமப் பட்டை: EM
வலைத்தளம்
www.paros.gr

வரலாற்று ரீதியாக, பாரோஸ் அதன் சிறந்த வெண் பளிங்குக்காக அறியப்பட்டது. இதன் பளிங்கு சீன பளிங்கை ஒத்த குணங்களை குறிப்பிடுவதாக "பாரியன்" என்ற சொல் உருவானது. [3] இந்தத் தீவில் கைவிடப்பட்ட பளிங்குச் சுரங்கங்கள் தீவில் காணப்படுகின்றன. பாரோஸ் முதன்மையாக ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக அறியப்படுகிறது.

நகராட்சிக்கு உன்பட்ட தீவுகள்

தொகு
  • கைடுரோனிசி - ஜிஃபாராவின் வடக்கு
  • போர்ட்ஸ் தீவு - பரோஸ் நகரின் மேற்கே
  • திகானி தீவு - பரோஸின் தென்மேற்கு
  • டிரியோனிசி - பரோஸின் தென்கிழக்கு

குறிப்புகள்

தொகு
  1. Detailed census results 2011 (கிரேக்கம்)
  2. "Population & housing census 2001 (incl. area and average elevation)" (PDF) (in கிரேக்கம்). National Statistical Service of Greece.
  3. "Parian – definition of Parian by the Free Online Dictionary, Thesaurus and Encyclopedia". Thefreedictionary.com. பார்க்கப்பட்ட நாள் 2009-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரோஸ்&oldid=3396979" இலிருந்து மீள்விக்கப்பட்டது