தேமோபைலேச் சமர்

தேமோபைலேச் சமர் என்பது ஸ்பாட்டவின் முதலாம் லியோனிடாசுவால் வழிநடாத்தப்பட்ட கிரேக்க நகர அரசுகளின் நேசப்படைகளுக்கும், கிரேக்கம் மீதான இரண்டாம் பாரசீக படையெடுப்பின் மூன்று நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற பாரசீகப் பேரரசர் முதலாம் சேக்சஸ்க்கும் இடையிலான சண்டையாகும். மூன்று நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த சண்டையில் ஒரே நேரத்தில் ஆர்டிமிசம் கடற்சமரும், குறுகலான கடற்கரையான தேமோபைலே கணவாயில் ('வெப்ப வாயில்') ஒரு சமரும் கி.மு. 480 இல் இடம் பெற்றது.

தேமோபைலேச் சமர்
கிரேக்க பாரசீகப் போர் பகுதி
Thermopylae ancient coastline large.jpg
சமர் நடைபெற்ற இடத்தின் தற்போதைய தோற்றம்:
கிட்டத்தட்ட கி.மு 480 இல் கரையோர வரையிலும்
நிலமீட்டல் மீதும் வீதியின் வலப்புறத்தில் கட்டப்பட்டுள்ளது.
நாள் ஆகஸ்து 7[1] அல்லது செப்டம்பர் 8–10,[2] கி.மு. 480
இடம் தேமோபைலே, கிரேக்கம்
பாரசீக வெற்றி.a[›]
நிலப்பகுதி
மாற்றங்கள்
பாரசீகர் போடியாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல்
பிரிவினர்
கிரேக்க நகர அரசுகள் அகாமனிசியப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
தெமிஸ்டோக்கல்,
முதலாம் லியோனிடாசு ,
டெமோபிளஸ் 
முதலாம் சேக்சஸ்,
மார்டோனியஸ்,
கைடானஸ்
பலம்
Total
5,200+ (கேரோடோஸ்)
7,400+ (டியோரஸ்)
11,200 (போசானியஸ்)
மொத்தம்
2,600,000 (கேரோடோஸ்)[3]
~800,000 (சிட்டேசியஸ்)[4]
70,000–300,000 (தற்கால கணிப்பு)b[›]
இழப்புகள்
1,000 to 4,000 (கேரோடோஸ்)[5]~20,000 (கேரோடோஸ்)[6]

கிரேக்கம் மீதான முதலாம் பாரசீகப் படையெடுப்பு, கி.மு. 490 இல் இடம்பெற்ற மரதான் சமர் அதீனியர்களின் வெற்றியினால் பாரசீகருக்கு தோல்வியில் முடிந்ததால் இப் படையெடுப்பு இடம்பெற்றது. சேக்சஸ் முழு கிரேக்கத்தையும் வெற்றி கொள்ள பாரிய தரை மற்றும் கடற்படையினை குவித்து ஒழுங்கமைத்தார். அதீனிய தளபதி தெமிஸ்டோக்கல் நேசப்படைகளுக்கும் தேமோபைலே கணவாயில் பாரசீக இராணுவத்தின் முன்னேற்றத்ததைத் தடுக்கும் தடுக்கும் அதேநேரத்தில் பாரசீக கடற்படையினை ஆர்டிமிசம் நீரிணையில் தடுக்கும் திட்டத்தை முன்வைத்தார்.

கிட்டத்தட்ட 7,000 கிரேக்கப் படை வடக்குக் கணவாயை தடுக்க கி.மு. 480 கோடையில் முன்னேறின. பாரசீகப் படை ஒரு மில்லியனான இருந்தது எனக் குறிப்பிட, தற்கால கணிப்பு அந்த எண்ணிக்கையைவிடக் குறைவு என்கிறது (ஏறக்குறைய 100,000 க்கும் 300,000 இடைப்பட்டதென வேறுபட்ட அளவுகள் கொடுக்கப்படுகின்றன)[7][8] இப்படை ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டெம்பர் ஆரம்பத்தில் கணவாயை வந்தடைந்து. பாரியயவு எண்ணிக்கையில் மிஞ்சிய பாரசீகப் படையை கிரேக்கம் மொத்தமாக ஏழு நாட்கள் (மூன்று சமர்கள் உட்பட), பின்புற பாதுகாப்பு நிர்மூலமாக்கும் வரை தடுத்து நிறுத்தி வரலாற்றில் பிரசித்தி பெற்ற இறுதி நிலை யுத்தமாக விளங்கியது.

இரண்டு முழுநாள் சமரில், முதலாம் லியோனிடாசு அரசனால் வழிநடத்தப்பட்ட சிறு படை பாரிய பாரசீக இராணுவம் கடக்கக்கூடிய பாதையை மாத்திரம் தடுத்தது. இரண்டாம் நாள் சமரின் பின்பு, உள்ளூர்வாசியான எபியால்டஸ் பாரசீகர்களுக்கு கிரேக்கப் படைகளின் பின்புறமுள்ள சிறு பாதையினை வெளிப்படுத்தி கிரேக்கர்களைக் காட்டிக் கொடுத்தான். தன் படைகள் பக்கவாட்டில் தாக்கப்படுவதை அறிந்த லியோனிடாசு கிரேக்கப் படைகளின் பெரும்பகுதியை அனுப்பிவிட்டு பின்புறப் பகுதியைக் காக்க 300 இசுபாட்டன்களையும், 700 தெஸ்பியன்களையும், 400 தெபான்களைளயும் மற்றும் சில நூறு மற்றவகளையும் தக்கவைத்தார். இவர்களில் பெரும்பகுதியினர் கொல்லப்பட்டனர்.

உசாத்துணைதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேமோபைலேச்_சமர்&oldid=3369829" இருந்து மீள்விக்கப்பட்டது