காரியா

அனத்தோலியாவின் வரலாற்று பிராந்தியம்

காரியா (Caria, கிரேக்க மொழியிலிருந்து : Καρία, கரியா, துருக்கியம்: Karya ) என்பது மேற்கு அனத்தோலியாவின் ஒரு பகுதியாகும். இது நடு ஐயோனியாவிலிருந்து (மைக்கேல்) தெற்கே லைசியா வரையும், கிழக்கே ஃபிரிஜியா வரையிலும் கடற்கரைப் பகுதிகளில் நீண்டுள்ளது. ஐயோனியன் மற்றும் டோரியன் கிரேக்கர்கள் இதன் மேற்கில் குடியேற்றங்களை ஏற்படுத்தினர். மேலும் காரியன் மக்களுடன் சேர்ந்து இங்கு கிரேக்க ஆதிக்க அரசுகளை உருவாக்கினர். கேரியன்கள் மினோவான் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என எரோடோடசால் விவரிக்கப்பட்டது. [1] அதே நேரத்தில் அவர்கள் அனதோலியன் நிலப்பரப்பில் வாழும் மக்களில் கடல்வழிப் பயணத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட மைசியன் மற்றும் லிடியன்களைப் போன்றவர்கள் என்று அவர் தெரிவிக்கிறார். [1] கேரியர்கள் லூவியனுடன் நெருங்கிய தொடர்புடைய அனதோலியன் மொழியான கேரியன் மொழியை பேசுகின்றனர். கேரியர்களுடன் நெருக்கமாக தொடர்புடைய லெலெஜஸ், இது கேரியர்களின் முந்தைய பெயராக இருக்கலாம்.

காரியா (Καρία)
அனத்தோலியாவின் பண்டைய பிராந்தியம்
Theater in Caunos
கானோசில் உள்ள அரங்கம்
Locationதென்மேற்கு அனத்தோலியா, துருக்கி
State existedகி.மு. 11வது–6வது நூற்றாண்டு
மொழிகாரியன்
பெரிய நகரம்ஆலிகார்னாசசு
உரோம மாகாணம்ஆசியா
சின்ன ஆசியா/அனத்தோலியாவின் பாரம்பரிய பகுதிகளுக்குள் காரியாவின் இருப்பிடம்

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 The Histories, Book I Section 171.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரியா&oldid=3500567" இலிருந்து மீள்விக்கப்பட்டது