இரண்டாம் டேரியஸ்
இரண்டாம் டேரியஸ் (Darius II) பாரசீக அகாமனிசியப் பேரரசராக கிமு 423 முதல் 404 வரை 19 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்.[1] மேலும் இவர் பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தின் பர்வோனாகவும் ஆட்சி செய்தவர்.
இரண்டாம் டேரியஸ் | |
---|---|
மன்னாதி மன்னர் பேரரசர் பாரசீகப் பேரரசர் எகிப்திய பார்வோன் | |
இரண்டாம் டேரியசின் கல்லறை | |
அகாமனிசியப் பேரரசர் | |
ஆட்சி | கிமு 423–404 |
முன்னிருந்தவர் | சோக்டியானஸ் |
பின்வந்தவர் | இரண்டாம் அர்தசெராக்சஸ் |
எகிப்தின் பார்வோன் | |
அரசுப்பிரதிநிதி | கிமு 423– கிமு 404 |
முன்னிருந்தவர் | சோக்டியானஸ் |
பின்வந்தவர் | அமிர்தயுஸ் |
துணைவர் | பாரிசதிஸ் |
வாரிசு(கள்) | இரண்டாம் அர்தசெராக்சஸ் இளைய சைரஸ் ஓஸ்தனஸ் |
மரபு | அகாமனிசிய வம்சம் |
தந்தை | முதலாம் அர்தசெராக்சஸ் |
தாய் | பாபிலோனின் காஸ்மர்திடெனே |
இறப்பு | கிமு 404 |
அகாமனிசியப் பேரரசர் முதலாம் அர்தசெராக்சஸ் கிமு 424-இல் மறைவான போது இரண்டாம் அர்தசெராக்சஸ் ஆட்சி பீடம் ஏறினார். இரண்டரை மாதம் கழித்து இரன்டாம் அர்தசெராக்சை தனது சகோதரர் சோக்டியானசை கொன்று அகாமனிசியப் பேரரசரசின் ஆட்சி பீடம் ஏறினார்.[2] பின்னர் சோக்டியானசை வீழ்த்திய இரண்டாம் டேரியஸ் கிமு 423-இல் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசராக முடிசூட்டிக் கொண்டார்.
வரலாற்றாளர்கள் இரண்டாம் டேரியசின் ஆட்சிக் காலம் குறித்து சிறிதளவே அறிந்து வைத்துள்ளனர். மெசொப்பொத்தேமியாவில் இருந்த மீடியர்கள் கிமு 409-இல் அகாமனிசியப் பேரரசர் இரன்டாம் டேரியசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர்.
ஏதன்ஸ் உடன் பிணக்கு
தொகுஏதன்ஸ் நாட்டு கிரேக்கர்கள், இரண்டாம் டேரியசுக்கு எதிராக கிளர்ச்சி செய்ய, கிமு 413-இல் அனத்தோலியா பகுதியில் வாழ்ந்த அமோர்ஜஸ் மக்களை தூண்டி விட்டனர். கிமு 414-இல் ஏஜியன் கடல் பரப்பில் இரண்டாம் டேரியஸ் கப்பற்படைகளை பெருக்கியதுடன், ஏதன்ஸ் படைகளுக்கு எதிராக ஸ்பார்ட்டன்களுடன் கூட்டு சேர்ந்தார். இதனால் ஏதன்ஸ் நாட்டு கிரேக்கர்கள் அதிகம் வாழந்த ஆசியா மைனரின் ஐயோனியா நகரத்தை இரண்டாம் டேரியஸ் கிமு 412-இல் கைப்பற்றினார்.[3]
கிமு 404-இல் இரண்டாம் டேரியஸ் தனது ஆட்சியின் 9-ஆம் ஆண்டின் போது மறைந்த போது, அவரது மகன் இரண்டாம் அர்தசெராக்சஸ் பாரசீக அகாமனிசியப் பேரரசராக முடிசூட்டிக் கொண்டார்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Brill's New Pauly, "Darius"
- ↑ ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள் தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: Meyer, Eduard (1911). "Darius". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 7. Cambridge University Press.
- ↑ Smith, William (1867). Dictionary of Greek and Roman biography and mythology. Vol. vol. 3. Boston: Little, Brown. pp. 1154–1156.
{{cite book}}
:|volume=
has extra text (help)