தைமூர்

துருக்கிய-மங்கோலிய ஆட்சியாளர்

தைமூர் (9 ஏப்ரல் 1336 - 18 பெப்ரவரி 1405) 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துருக்கிய - மங்கோலிய கலப்பினப் பேரரசர் ஆவார். இவர் மேற்கு ஆசியா, மத்திய ஆசியா ஆகியவற்றின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றி தைமூரியப் பேரரசை நிறுவினார். தைமூரிய வம்சத்தை உருவாக்கியவரும் இவரே.[2]

தைமூர்
Temür
அமீர்
Tamerlan.jpg
ஆட்சி9 ஏப்ரல் 1370 – 18 பெப்ரவரி 1405
முடிசூட்டு விழா9 ஏப்ரல் 1370[1]
முன்னிருந்தவர்அமீர் உசைன்
பின்வந்தவர்காலில் சுல்தான்
வாரிசு(கள்)
 • மிரான் சா
 • சாருக் மிர்சா
மரபுபர்லாசு
தந்தைஅமீர் தரகாய்
தாய்தெக்கினா காட்டுன்
பிறப்பு9 ஏப்ரல் 1336 [1]
கேசு (இன்றைய உசுபெக்கித்தானில்)
இறப்பு18 பெப்ரவரி 1405 (அகவை 68)
ஒத்ரார், (இன்றையகசக்ஸ்தானில்)
அடக்கம்குர்-இ அமீர், சமர்கந்து
சமயம்இசுலாம்
இரசிய தொல்லியல் அறிஞர் மிகைல்(Mikhail Mikhaylovich Gerasimov) தடயவியல் முறையால் உருவாக்கிய தைமூர் படம்
1405-இல் தைமூரின் இறப்பின் போது தைமூரியப் பேரரசின் வரைபடம்

மங்கோலிய ஆக்கிரமிப்பாளர்களின் வழி வந்த தைமூரின் இனத்தவர் துருக்கிய அடையாளத்தையும் மொழியையும் கொண்டவர்களாக மாறிவிட்டனர். பாரசீகக் கல்வியும், உயர்ந்த நாகரிகமும் கொண்டு விளங்கிய இவர் தனது மூதாதையர்களின் பேரரசை மீள்விக்க எண்ணம் கொண்டார். இவரது காலத்தில் துருக்கிய இலக்கியத்தில் முக்கியமானவை சில எழுதப்பட்டன. துருக்கியப் பண்பாட்டின் செல்வாக்கும் விரிவடைந்து செழித்தது.

தைமூர் ஒரு போரியல் மேதை. போர் உத்திகளில் தனது திறமையை வளர்த்துக் கொள்வதற்காக ஓய்வு நேரங்களில் சதுரங்க விளையாட்டில் ஈடுபடுவார். முழுமையான அதிகாரத்தைக் கொண்டு விளங்கிய இவர் ஒருபோதும் எமிர் என்னும் பதவிக்கு மேலாகத் தன்னைப் பெருமைப்படுத்தி அழைத்துக் கொண்டதில்லை.

வரலாற்றில், அவரது வாழ்நாளிலும் கூட, தைமூர் ஒரு முரண்பட்டவராகவும், சர்ச்சைக்கு உரியவராகவும் இருந்தார். பல கலைகளை ஆதரித்த இவர், பல சிறந்த கல்வி மையங்களின் அழிவுக்கும் காரணமாக இருந்தார்.

ஆரம்பகால வாழ்க்கைதொகு

 
சமர்கண்டின் தோட்டங்களில் உணவு உண்ணும் அமீர் தைமூர்.

தைமூர் கெஷ் நகருக்கு (தற்கால உஸ்பெகிஸ்தானின் ஷஹ்ரிசப்ஸ்) அருகில் திரான்சோக்சியானாவில் பிறந்தார். இது சமர்கண்டிற்கு தெற்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அந்நேரத்தில் இது சகதை கானேட்டின் ஒரு பகுதியாக இருந்தது.[3] தெமுர் என்கிற இவரது பெயருக்கு "இரும்பு" என்று சகதை மொழியில் பொருள்.[4]

மங்கோலிய பழங்குடி இனமான பர்லாஸ் இனத்தை சேர்ந்தவர் தைமூர்.[5][6] எனினும் பல்வேறு வழிகளில் பர்லாஸ் இனம் துருக்கியமயமாக்கப்பட்டு இருந்தது.[7][8][9] இவரது தந்தை தரகை பழங்குடி இனத்தின் சிறிய உயர்குடியினராக இருந்தார்.[3] எனினும் வரலாற்றாளர் பீட்ரைஸ் ஃபோர்ப்ஸ் மேன்ஸ் தனது வெற்றிகள் பிரமிக்கத்தக்க வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக தைமூர் தனது தந்தையின் சமூக நிலையை பிற்காலத்தில் குறைத்து கூறியிருக்கலாம் என்று நம்புகிறார். தைமூரின் தந்தை அதிகாரம் மிக்கவராக இருந்திருக்க வாய்ப்பில்லை என்று நம்புகின்ற போதிலும் அவர் குறிப்பிடத்தக்க வகையில் செல்வம் மற்றும் செல்வாக்கு மிகுந்தவராக இருந்துள்ளார்.[10] 1360 இல் தனது தந்தையின் இறப்பிற்குப் பிறகு தைமூர் தனது தந்தையின் நிலப் பகுதிகளுக்கு திரும்பியதன் மூலம் இதனை நாம் அறியலாம்.[11] வரலாற்றாளர் அரப்ஷா, தரகையின் சமூக முக்கியத்துவத்தை அவர் அமீர் கரவுனாஸின் அவையில் செல்வாக்கு செலுத்தியதை வைத்து குறிப்பிடுகிறார்.[12] இவற்றுடன் மொகுலிஸ்தானின் பெரும் அமீர் ஹமித் கெரயிடுவின் தந்தை, தரகையின் நண்பர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[13]

பிந்தைய தைமூரிய அரச மரபின் வரலாறுகள் தைமூர் 8 ஏப்ரல் 1336 இல் பிறந்தார் என்று குறிப்பிடுகின்றன. ஆனால் தைமூரின் காலத்தில் எழுதப்பட்ட பல்வேறு ஆதாரங்கள் பிந்தைய 1320 களில் இவர் பிறந்தார் என்றே குறிப்பிடுகின்றன. வரலாற்றாளர் மேன்ஸ் 1336 ஆம் வருடமானது ஹுலாகு கானின் வழிவந்த இல்கானேட்டின் கடைசி ஆட்சியாளரான அபு சயித் பகதூர் கானின் மரபுடன் தைமூரை இணைப்பதற்காக குறிப்பிடப்படலாம் என்று சந்தேகிக்கிறார்.[14]

தைமூரின் குழந்தை பருவத்தில் தைமூரும் அவரை பின் தொடர்பவர்களின் ஒரு குழுவும் பயணிகளிடம் பொருட்கள், குறிப்பாக செம்மறியாடு, குதிரைகள் மற்றும் கால்நடைகள் போன்ற விலங்குகளை கொள்ளை அடித்தன.[14]:116 1363 ஆம் ஆண்டு வாக்கில் தைமூர் ஒரு கால்நடை மேய்ப்பாளரிடமிருந்து செம்மறி ஆட்டை திருடுவதற்கு முயற்சித்தார் என்று நம்பப்படுகிறது. ஆனால் இரண்டு அம்புகளால் தாக்கப்பட்டார். ஒரு அம்பானது அவரது வலது காலை தாக்கியது. மற்றொரு அம்பு அவரது வலது கையை தாக்கியது. இதன் காரணமாக வலது கையில் அவர் இரண்டு விரல்களை இழந்தார். இந்த காயங்கள் அவரை வாழ்நாள் முழுவதும் மாற்றுத்திறனாளி ஆக்கின. குராசான் பகுதியின் சிஸ்டானின் கானாக இருந்தவரிடம் கூலிப்படையாக பணியாற்றியபோது இந்த காயங்கள் அவருக்கு ஏற்பட்டிருக்கலாம் என சிலர் நம்புகின்றனர். சிஸ்டான் பகுதி தற்போதைய தென் மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள டஷ்டி மார்கோ ஆகும். தைமூரின் காயங்கள் அவருக்கு தைமூர் த லேம் மற்றும் டாமர்லேன் ஆகிய பெயர்களை ஐரோப்பியர்களிடம் பெற்று தந்தன.[15]:31

சாமர்கன்ட்தொகு

ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூலின் வடக்கில் , முந்தைய சோவியத் ரஷ்யாவின் தென்கோடியில் , இன்றைய உஸ்பெக் பகுதியில் உள்ள முக்கிய நகரம் சமர்கந்து . இதுவே துருக்கிய- மங்கோலிய இனத்தைச்சேர்ந்த தைமூரின் தலைநகரம் ஆகும்.

படையெடுப்புகள்தொகு

வெற்றி கொண்ட நிலப்பரப்புகள்தொகு

1335-இல் தைமூரின் முதல் படையெடுப்பு பாரசீகம் மீதாகும்.[16][17] பின்னர் தற்கால பாக்தாத், அனதோலியாவின் தென்கிழக்கு துருக்கி, சிரியா, நடு ஆசியாவின் ருசியாவின் பகுதிகள், ஜார்ஜியா, ஆர்மீனியா, துருக்மேனிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தெற்காசியாவின் பாகிஸ்தான், ஆப்கானித்தான் ஆகும். அதன்பின் அவர் வெற்றி பெற்ற இடம் தில்லி ஆகும்.[18] மேலும் பஞ்சாப், மீரட், மற்றும் லாகூர் போன்ற நகரங்களையும் கைப்பற்றினார் தைமூர். கி.பி.1400 இல் தைமூர், துருக்கி நாட்டுக்குள் புகுந்து சுல்தான் இரண்டாம் பயோசியத்தை வெற்றி கண்டார்.

தைமூரின் ஆட்சியின் அதிகாரப்பூர்வமாக்கல்தொகு

மங்கோலிய பேரரசு மற்றும் முஸ்லிம் உலகத்தை ஆட்சி செய்ய நினைத்த தைமூருக்கு அவரது துருக்கிய-மங்கோலிய பாரம்பரியம் வாய்ப்புகள் மற்றும் சவால்களை வழங்கியது. மங்கோலிய பாரம்பரியப்படி தைமூர் கான் என்ற பட்டத்தை பெறவோ அல்லது மங்கோலிய பேரரசை ஆளவோ முடியாது. ஏனெனில் அவர் செங்கிஸ்கானின் நேரடி வழித் தோன்றல் கிடையாது. இதன்காரணமாக தைமூர் சகதை கானேட்டின் கைப்பாவை கானாக சுயுர்கட்மிஸை நியமித்தார். பால்க் பகுதியின் பெயரளவு ஆட்சியாளராக சுயுர்கட்மிஸ் இருந்தார். அதேநேரத்தில் தைமூர் "செங்கிஸ்கானின் மூத்தமகன் சூச்சியின் வழிவந்தவர்களின் பாதுகாவலர்களில் ஒருவர்" என தன்னை காட்டிக் கொண்டார்.[19]

தைமூரின் குணங்கள்தொகு

தைமூரின் போர்க்குணமே அவர் பல வெற்றிகள் காண காரணமாகும். இரக்கம் காட்டுவதோ,எதிரிகளை எனோதானோ என்று விட்டு விடுவது தைமூருக்கு பிடிக்காத ஒன்று ஆகும்.தைமூரை பொருத்தவரையில் தலை வேறு உடல் வேறாக இருப்பவனே எந்தப்பிரச்சனையும் இல்லாத எதிரி ஆகும். இதையே தைமூரின் வீரர்களும் பின்பற்றினர்.

எதிரிகளை தீர்த்துக்கட்டுவதை வேகமாக முடிக்க வேண்டும் என்பதும் தைமூரின் கொள்கைகளில் ஒன்று."யாரும் சோம்பலாக உட்காரக்கூடாது.எல்லோரும் கூட்டுறவாகச் செயல்பட்டால்தான் காலதாமதம் இல்லாமல் காரியத்தை முடிக்க முடியும்" என்று தைமூர் தன் படை வீரர்களிடம் வழக்கம்.

பஞ்சாப் பிரதேசத்தில் சிறைபடுத்தப்பட்ட ஒரு லட்சம் அடிமைகளின் தலைகளைச்சீவ அவன் ஆணையிட்டபோது ஒவ்வொரு வீரனும் கிளம்பினான். தலைசிறந்த ஒரு ராணுவ தலைவனாக இருந்த தைமூரின் ஆட்சி கொடுங்கோன்மை, கலாச்சார வளர்ச்சி இரண்டுக்குமே நினைவுக் கூறப்படுகிறது.

தைமூர் போர்குணங்கள் கொண்டவனாக இருந்தலும், சில நகைப்பை வரவழைக்கும் செயல்களையும் செய்துள்ளார்.இந்தியாவை கைப்பற்றியதும்,யானைகளுக்கு பச்சை,நீலம்,மஞ்சள் போன்ற வண்ணங்களை அடித்து காவலுக்காக தனது கூடாரத்தின் முகப்பில் நிறுத்தினாராம்.

தைமூரின் ஆளுமைதொகு

தைமூர் ஒரு இராணுவ பேரறிவாளனாக அறியப்படுகிறார். மேலும் மத்திய ஆசியாவில் அவரது ஆட்சி காலத்தில் அயல்நாடோடிகளின் விசுவாசமான ஒரு பின்தொடர்பைப் பெற்று அரசியல் கட்டமைப்பிற்குள் பணியாற்றுவதற்கான விசித்திரமான திறமையுடன் ஒரு சிறந்த படையாட்சித் திறலாளராகவும் தைமூர் திகழ்ந்தார்.உள்ளுணர்வால் மட்டுமல்லாமல் அவர் அசாதாரணமான அறிவார்ந்தவராகவும் விளங்கினார் [20]:16. சமர்கந்து மற்றும் அவரது பல பயணங்களில், புகழ்பெற்ற அறிஞர்களின் வழிகாட்டலின் படி, பாரசீக, மங்கோலிய மொழி மற்றும் துருக்கிய மொழி ஆகிய மொழிகளைக் தைமூரால் கற்றுக்கொள்ள முடிந்தது [15]

இந்தியாவும் தைமூரும்தொகு

தைமூர் பல நகரங்களை வெற்றி கண்டபோதும் இந்தியாவிற்கு வந்ததே பெரிய சரித்திர நிகழ்வாக மாறியது. ஏனெனில் இயற்கை அரண்களான இமயமலைத்தொடர் மற்றும் ஆழமான சிந்து நதியையும் கடந்து படையெடுத்தவர்கள் அலெக்சாந்தர்,கஜினி போன்று மிக சிலரே. செப்டம்பர் 22,1398 இல் டெல்லி நகரை கைப்பற்ற வந்தார் தைமூர். சிந்து நதியை பொருட்படுத்தாத தைமூர் பல படகுகளை ஒன்றாக இணைத்து சிந்து நதியை கடந்தார்.

சிந்து நதியை கடந்த தைமூர் ஐந்து நதிகள் இணையும் பஞ்சாப் பகுதியில் தனது ஆக்ரமிப்பை ஆரம்பித்தார்.சுமார் ஒரு லட்சம் பேரை அடிமைகளாக பஞ்சாப் நகரத்தில் அடிமைகளாக பிடித்தார் தைமூர். ஒருமுறை முகமது ஷா, சில வீரர்களுடன் இருந்த தைமூரை விரட்டி அடித்தார். அதனால் கோபமுற்ற தைமூர் பஞ்சாபில் பிடித்த ஒரு லட்சம்அடிமைகளையும் வெட்டி வீழ்த்த ஆணையிட்டார்.[21]

பின் டிசம்பர் 17,1398 இல் தைமூர், மல்லூகான் இக்பாலின் உதவியோடு டெல்லி அரியனையில் இருந்த முகமது ஷாவை வீழ்த்தி டெல்லி நகரை கைப்பற்றினார்.

நொண்டி தைமூர்தொகு

இளம் வயதில் ஒரு போர்க்களத்தில் போரிடும் போது எதிரியின் அம்பு தொடையில் பாய்ந்ததால் கால் பாதிப்புக்குள்ளானது. அதை சரி செய்ய யாராலும் இயலவில்லை. அதனால், தைமூர் சற்று விந்தி விந்தி நடப்பார். இதனால் உருவான பட்டை பெயரெ "தைமூர் இ லெங்" -'நொண்டி தைமூர்' ஆகும்.

இப்படி மற்றவர்கள் அழைப்பது தைமூருக்கும் தெரியும். ஆனால் தன் எதிரில் நின்று யாரும் அழைக்க மாட்டேன் என்கிறார்களே என்று தன் ஆட்களிடம் அலுப்புச்சிரிப்புடன் கூறிப்பிடுவாராம் தைமூர்.

தைமூரும் கட்டிடகலையும்தொகு

இந்தியாவிற்கு வந்து தங்கிய தைமூர் குதுப்மினார் மற்றும் குவ்வாத்-அல்-இஸ்லாம் மசூதியை சுற்றி பார்த்து 'இந்தியர்கள் சாதாரனமானவர்கள் அல்ல' என்றாராம். திரும்பி செல்லும் போது இந்தியக் கட்டிட கலைஞர்களையும் தன்னுடன் அழைத்துச்சென்றார்.

இறப்புதொகு

பல லட்சம் பேரை வெட்டிவீழ்த்திய தைமூர் மிக எளிய முறையில் இறந்தார்.சீனாவை கைப்பற்ற திட்டம் வகுத்துக்கொண்டிருந்த தைமூர் சில நாட்களிலேயே நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்து 1405 -ம் ஆண்டு ஜனவரி மாதம் உயிரை விட்டார்.

தைமூரின் கல்லறைதொகு

இந்தியக் கட்டிட கலைஞர்கள் துருக்கி சென்றவுடன் சில மாதங்களிளேயே துருக்கிய மற்றும் பெர்ஷிய கலைநுணுக்கங்களை கற்றுத்தேர்ந்தனர். அவர்களை வைத்து தைமூரின் கல்லரை கட்டப்பட்டது.இந்தியக் கட்டிட கலைஞர்கள் சமர்கன்ட் நகரில் 'குர் அமிர்' என்கிற மிகப்பெரிய அற்புதமான கல்லறையைக் கட்டிமுடித்தார்கள். இவரிடம் இருந்துதான் மிக பெரிய அளவில் கல்லரைக்கட்டும் பழக்கம் மொகலாயர்களிடம் வந்தது.

தைமூரின் மனைவிகள் மற்றும் துணைவிகள்தொகு

தைமூருக்கு பதினெட்டு மனைவிகளும் இருபத்து நான்கு துணைவியர்களும் இருந்துள்ளனர்

 • துருமிசு ஆகா, ஜஹாங்கிர் மிர்சாவின் தாய்
 • ஒல்ஜே துர்ஹான் ஆகா (Oljay Turkhan Agha) (m. 1357/58),அமீர் மாஸ்லாவின் மகள் மற்றும் அமிர் குர்கெனின் பேத்தி)
 • செரே முல்க் கானும் (m. 1367), எமிர் ஹூசைன் இறப்பால் விதவையானவள் மற்றும் கசன் ஹானின் மகள்;
 • இசுலாம் ஆகா (m. 1367), எமிர் ஹூசைன் இறப்பால் விதவையானவள், மற்றும் அமிர் பயான் சல்துஸ் மகள்;
 • உலுஸ் ஆகா (m. 1367), எமிர் ஹூசைன் இறப்பால் விதவையானவள்,மற்றும் அமிர் கிசிர் யாசுரி மகள்;
 • திச்சாத் ஆஹா (m. 1374),சமசிதின் மகள் மற்றும் புஜன் ஆஹாவின் மனைவி ;
 • தௌமன் ஆகா Touman Agha (m. 1377),எமிர் மூசாவின் மகள்,அர்சு மூக்னாவின் மனைவி,
 • சுல்பன் முல்ச் ஆகா, ஜெட்டாவின் ஹாஜி பேக்கின் மகள்;
 • துகல் கானும் (m. 1395) மங்கோல் கான் கீர் காஜ்வா ஆக்லெனின் மகள்
 • தொலுன் அகா,முதலாம் உமர் சேக் மிர்சாவின் தாய்
 • மெங்லி அகா,மிரான் சா இபின் தைமூரின் தாய்
 • தொகே துர்கான் அகா,
 • துஹ்டி பே ஆகா , அக் சூபி கொங்-கிராட்டின் மகள்

தைமூரின் வழித்தோன்றல்கள்தொகு

தைமூரின் மகன்கள்தொகு

 • ஜஹாங்கிர் மிர்சா இபின் தைமூர் - துர்மிசு ஆஹா (Turmish Agha) என்ற மனைவிக்கு பிறந்தவர்;
 • உமர் சேக் மிர்சா I - டொலுன் அஹா (Tolun Agha)என்ற மனைவிக்கு பிறந்தவர் ;
 • மீரான் ஷா இபின் தைமூர் - மெங்லி ஆஹா (Mengli Agha) என்ற மனைவிக்கு பிறந்தவர் ;
 • சாரூக் மிர்சா இபின் தைமூர் -தொகே துர்ஹான் ஆஹா (Toghay Turkhan Agha) என்ற மனைவிக்கு பிறந்தவர்;
 • ஹலீல் சுல்தான் இபின் தைமூர் - சரே முல்க் கானும் (Saray Mulk Khanum)என்ற மனைவிக்கு பிறந்தவர் .

தைமூரின் மகள்கள்தொகு

 • ஆகியா பேகி (இவர் அமீர் மூசாவின் மகனான முகமது பேகி என்பவருக்கு மணமுடித்து வைக்கப்பட்டார்)
 • பெயர் தெரியவில்லை, (சுலைமான் மிர்சாவுக்கு மணமுடிக்கப்பட்டார்)
 • பெயர் தெரியவில்லை, ( குமலேசா மிர்சா என்பவருக்கு மணமுடித்து வைக்கப்பட்டார்)
 • சுல்தான் பக்த் பேகம் (முதலில் முகமது மிரேகி பின்னர் சுலைமான் சாவுக்கு இரண்டாம் தாரமாக மணமுடிக்கப்பட்டார்)

ஜஹாங்கிரின் மகன்கள்தொகு

 • பீர் முகமது பின் ஜஹாங்கிர் மிர்சா

உமர் சேக் மிர்சா I ன் மகன்கள்தொகு

 • பீர் முகமது இபின் உமர் ஷேக் மிர்சா I
 • இஸ்கந்தர் இபின் உமர் ஷேக் மிர்சா I
 • ருஸ்தம் இபின் உமர் ஷேக் மிர்சா I
 • பேகார் இபின் உமர் ஷேக் மிர்சா I
  • மன்சூர் இபின் பேகார்
   • ஹூசைன் இபின் மன்சூர் பின் பேகார்
    • பாடி அல் ஸமான் ( திமுருத்தின் ஆட்சியாளர்)
     • முகமது மூமின்
    • முசாபர் ஹூசைன்
    • இப்ராகிம் ஹூசைன்

மீரான் ஷாவின் மகன்கள்தொகு

 • காலி சுல்தான் இபின் மீரான் ஷா
 • அபு பக்கிர் இபின் மீரான் ஷா
 • முகமது இபின் மீரான் ஷா
  • அபு சையத் மரிசா
   • உமர் ஷேக் மிர்ஷா II
    • சாகிர் உத் தின் முகமது பாபுர்
     • முகலாயர்கள்
    • ஜஹாங்கீர் மிர்சா II

சாரூக் மிர்சாவின் மகன்கள்தொகு

 • மிர்சா முகமது தராஹே (உலூஹ் பெஹ் (Ulugh Beg) என பரவலாக அறியப்படுபவர்
  • அப்தல் லத்தீப் இபின் முகமது தராஹே உலூஹ் பெஹ்
 • ஹியாத் அல் தின் பெசோங்கோர்
  • அலா-உத்-துலா மிர்சா இபின் பெசோங்கோர்
   • இப்ராஹிம் மிர்சா (திம்ரூத் அரசாட்சி)
  • சுல்தான் முகமது இபின் பெசோங்கோர் (திம்ரூத் அரசாட்சி)
   • யதிகார் முகமது
  • மிர்சா அபுல் காசிம் பபூர் இபின் பேசுங்கூர்
 • சுல்தான் இப்ராகிம் மிர்சா
  • அப்துல்லா மிர்சா
 • மிர்சா சொயுர்காட்மிஷ் கான்
 • மிர்சா முகமது ஜூகி

மேற்கோள்கள்தொகு

 • வந்தார்கள் வென்றார்கள் புத்தகம், விகடன் பிரசுரம், சென்னை.
 1. 1.0 1.1 Muntakhab-ul-Lubab, Khafi Khan Nizam-ul-Mulk, Vol I, p. 49. Printed in Lahore, 1985
 2. Timur
 3. 3.0 3.1 "Tamerlane". AsianHistory. பார்த்த நாள் 1 November 2013.
 4. Richard Peters, The Story of the Turks: From Empire to Democracy (1959), p. 24
 5. "Central Asia, history of Timur", in Encyclopædia Britannica, Online Edition, 2007. (Quotation:"Under his leadership, Timur united the Mongol tribes located in the basins of the two rivers.")
 6. "Islamic world", in Encyclopædia Britannica, Online Edition, 2007. Quotation: "Timur (Tamerlane) was of Mongol descent and he aimed to restore Mongol power."
 7. Carter V. Findley, The Turks in World History, Oxford University Press, 2005, Oxford University Press, 2005, ISBN 978-0-19-517726-8, p. 101.
 8. G. R. Garthwaite, The Persians, Malden, ISBN 978-1-55786-860-2, MA: Blackwell Pub., 2007. (p.148) Quotation: "Timur's tribe, the Barlas, had Mongol origins but had become Turkic-speaking ... However, the Barlus tribe is considered one of the original Mongol tribes and there are "Barlus Ovogton" people who belong to Barlus tribe in modern Mongolia."
 9. M.S. Asimov & Clifford Edmund Bosworth, History of Civilizations of Central Asia, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் Regional Office, 1998, ISBN 92-3-103467-7, p. 320: "One of his followers was [...] Timur of the Barlas tribe. This Mongol tribe had settled [...] in the valley of Kashka Darya, intermingling with the Turkish population, adopting their religion (Islam) and gradually giving up its own nomadic ways, like a number of other Mongol tribes in Transoxania ..."
 10. Beatrice Forbes Manz, Tamerlane and the Symbolism of Sovereignty (1988), p. 116
 11. Sharaf ad-Din Ali Yazdi, Zafarnama (1424-1428), p. 35
 12. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Arabshah, p. 4 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 13. Sharaf ad-Din Ali Yazdi, Zafarnama (1424-1428), p. 75
 14. 14.0 14.1 Manz, Beatrice Forbes (1988). "Tamerlane and the symbolism of sovereignty". Iranian Studies 21 (1–2): 105–122. doi:10.1080/00210868808701711. 
 15. 15.0 15.1 Marozzi, Justin (2004). Tamerlane: Sword of Islam, conqueror of the world. HarperCollins. 
 16. Chaliand, Gerard; Arnaud Blin (2007). The History of Terrorism: From Antiquity to Al Qaeda. University of California Press. பக். 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0520247093. https://books.google.com/books?id=YmpfgNqmVXYC&pg=PA87&dq=isfahan+Timur%7Ctamerlane+genocidal&hl=en&sa=X&ei=UoGjUI7aJKe80QWAk4CAAQ&ved=0CDEQ6AEwAA#v=onepage&q=isfahan%20Timur. 
 17. Fisher, W.B.; Jackson, P.; Lockhart, L.; Boyle, J.A. : The Cambridge History of Iran, p55.
 18. Singh, Raj Pal. Rise of the Jat power. Books.google.co.in. https://books.google.com/books?id=TKhuAAAAMAAJ&q=ahirs+and+jats&dq=ahirs+and+jats&hl=en&ei=oQV_TeTYAcjprAfs7_CmBw&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CD4Q6AEwBDgK. பார்த்த நாள்: 2012-05-22. 
 19. Manz, Beatrice Forbes (2002). "Tamerlane's Career and Its Uses". Journal of World History 13: 3. doi:10.1353/jwh.2002.0017. 
 20. Beatrice Forbes Manz (1989). The rise and rule of Tamerlane. Cambridge University Press. 
 21. William Wilson Hunter (1909). "The Indian Empire: Timur's invasion 1398". The Imperial Gazetteer of India. 2. பக். 366. http://dsal.uchicago.edu/reference/gazetteer/pager.html?objectid=DS405.1.I34_V02_401.gif. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைமூர்&oldid=3049424" இருந்து மீள்விக்கப்பட்டது