தசுதி மார்கோ
தசுதி மார்கோ (பாரசீகம்: دشت مارگو) என்பது ஆப்கானித்தானின் தெற்கு மாகாணங்களான எல்மந்து மற்றும் நிம்ரூசு ஆகியவற்றில் உள்ள ஒரு பாலைவனப் பகுதியாகும்.[1] இது தசுதி சசு மற்றும் ரெசிசுதான் பாலைவனங்களுக்குப் பக்கவாட்டில் அமைந்துள்ளது. உலகின் இருபதாவது மிகப்பெரிய பாலைவனம் இதுவாகும். இதன் பரப்பளவு 1,50,000 சதுர கிலோமீட்டர். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 500 முதல் 700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இப்பாலைவனமானது மணல் நிறைகள் மற்றும் பாறை-களிமண் சமவெளிகளைக் கொண்டுள்ளது. அரிதாகச் சோலைகளும் இந்தப் பாலைவனத்தில் காணப்படுகின்றன.
தாரி மொழியில் தசுதி என்றால் "சமவெளி" என்றும் மார்கோ என்றால் "மரணம்"[சான்று தேவை] என்றும் பொருள். தசுதி மார்கோ என்ற பெயரின் பொருளானது "மரணப் பாலைவனம்"[2] ஆகும்.
உசாத்துணை
தொகு- ↑ "Dasht-e Mārgo: Afghanistan". Geographical Names. geographic.org. பார்க்கப்பட்ட நாள் 26 May 2016.
- ↑ McCarthy, Rory (9 March 2003). "Endgame in the Desert of Death for the world's most wanted man". தி கார்டியன். theguardian.com. பார்க்கப்பட்ட நாள் 26 May 2016.
வெளி இணைப்புகள்
தொகு- The Integration of Biodiversity into National Environmental Assessment Procedures at the Library of Congress Web Archives (பரணிடப்பட்டது 2004-07-03)