பாலைவனச்சோலை

பாலைவனச்சோலை பாலைவனத்தில் உள்ள நீர் நிலையாகும். நிலத்தடி நீர், நிலகீழ் நதிகள், இயற்கையாய் ஏற்படும் நில அழுத்தத்தால் மேல் எழும்பும் போது பாலைவனச்சோலைகள் உருவாகின்றன. அல்லது அபூர்வமாக பெய்யும் சிறு மழையால் பாறையில் இருந்து கசியும் நீர் பாறைகளுக்கு இடையே தேங்கி நிலத்தடி நீர்மட்டத்தை உயரவைப்பதாலும் பாலைவனச்சோலைகள் உருவாகின்றன. எல்லா வகை நீர் நிலைகளும் புலம் பெயருகின்ற பறவைகள் தங்கள் இடப்பெயர்ச்சியின் போது இளைப்பாற பயன்படுத்துவதால் பறவைகளின் எச்சங்கள் ஊடாக வரும் விதைகள், நீர் நிலைகளின் அருகே சோலையாய் வளருவதால் பாலைவனச்சோலைகள் உருவாகின்றன.

அல்சீரியாவில் உள்ள ஒரு பாலைவனச்சோலை
பெருவில் உள்ள ஒரு பாலைவனச்சோலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலைவனச்சோலை&oldid=3338916" இலிருந்து மீள்விக்கப்பட்டது