திரான்சாக்சியானா
திரான்சாக்சியானா (Transoxiana) அல்லது திரான்சாக்சானியா (Transoxania), அரபு மொழி: ما وراء النهر (மாவரான்னகர், Mā warāʼ an-Nahr), பாரசீக மொழி: فرارود, பராவுத் (Farārūd) என்பது நடு ஆசியாவின் ஒரு பகுதியான (இன்றைய) உசுபெக்கிசுத்தான், தஜிகிஸ்தான், தெற்கு கிர்கிசுத்தான், தென்மேற்கு கசக்கஸ்தான் ஆகிய பிரதேசங்களைக் குறிக்கும் பண்டைய பெயராகும். புவியியல்படி, இப்பிராந்தியம் ஆமூ தாரியா, சிர் தாரியா ஆகிய ஆறுகளுக்கிடையே அமைந்துள்ளது.[1] உரோமர்கள் இதனை திரான்சாக்சானியா (ஆமூ தாரியாவிற்கு அப்பாலுள்ள நிலம்) எனவும், அராபியர்கள் மாவரான்னகர் (ஆற்றிற்கு அப்பாலுள்ள நிலம்), ஈரானியர் துரான் எனவும் அழைத்தனர்.[2]
இப்பகுதி பாரசீகத்தின் அகாமனிசிய வம்சத்தின் சோக்தியானா என அழைக்கப்பட்ட மாகாண ஆட்சியின் ஒன்றாக இருந்தது. ஆரம்பகால அராபிய புவியியலாளர்கள் இதனை "பிலாத் அல்-துர்க் (Bilād al-Turk") அல்லது "துருக்கிஸ்தான்" (Turkestan, துருக்கியரின் நிலங்கள்) என அழைத்தனர்.[3]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Transoxania (historical region, Asia)" (in en). Encyclopedia Britannica. https://www.britannica.com/place/Transoxania.
- ↑ Sabloff, Paula L.W. (2011). Mapping Mongolia: Situating Mongolia in the World from Geologic Time to the Present. Philadelphia: University of Pennsylvania Museum of Archaeology and Anthropology. p. 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1934536180. இணையக் கணினி நூலக மைய எண் 794700604.
- ↑ Soucek, Svat (2000). A History of Inner Asia (in ஆங்கிலம்). Cambridge University Press. p. 25. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1017/cbo9780511991523. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521657044.