சோக்தியானா

சோக்தியானா (Sogdiana) அல்லது சோக்தியா (Sogdia); புதிய பாரசிக மொழி:: سُغْد, சோகிது) பண்டைய இந்தோ ஐரோப்பிய பாரசீக மக்கள் வாழ்ந்த தற்கால தாஜிகிஸ்தான், மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளை உள்ளடக்கியதாகும். அகாமனிசியப் பேரரசில் சோக்தியானா ஒரு மாகாணமாக விளங்கியது. கி மு 328இல் மாசிடோனியாவின் மன்னர் அலெக்சாண்டர் சோக்தியானவை கைப்பற்றினார். பின்னர் கிரேக்க பாக்திரியா பேரரசு மற்றும் சாசானியப் பேரரசுகளில் சோக்தியானா ஒரு பகுதியாக விளங்கியது.

சோக்தியா
Sogdia

செலூக்கியப் பேரரசின் கீழ் சோக்தியானா, அண். கிமு 300 பேரரசர் அலெக்சாந்தரின் ஆட்சியின் பின்னர் உருவான ஒரு தியாடோச்சி இராச்சியம்.
மொழிகள் சோக்திய மொழி
சமயம் சொராட்டிரிய நெறி, பௌத்தம், மானிசம், நெஸ்டோரியக் கொள்கை[1]
தலைநகரங்கள் சமர்கந்து, புகாரா, குஜாந்து, கேசு
பரப்பளவு ஆமூ தாரியாவுக்கும் சீர் தாரியாவுக்கும் இடையில்
காலம் கிமு 6ஆம் நூற்றாண்டு முதல் கிபி 11ஆம் நூற்றாண்டு வரை
கிரேக்க பாக்திரியா பேரரசில் சோக்தியானா

அமைவிடம் தொகு

சோக்தியானா பகுதியின் முக்கிய நகரம் சமர்கந்து ஆகும். ஆமூ தாரியா ஆறு இப்பகுதியை வளப்படுத்துகிறது.

சமயங்கள் தொகு

சோக்தியானா பகுதி மக்கள் பௌத்தம், சரத்துஸ்திர சமயங்களைப் பயின்றனர். பின்னர் சாமானிது பேரரசின் இறுதி காலத்தில், கி பி 999இல் சோக்தியானா மக்கள் இசுலாமிய சமயத்திற்கு மாற்றப்பட்டனர்.

மொழிகள் தொகு

இப்பகுதியில் பாரசீக மொழி மற்றும் துருக்கிய மொழிகள் வழக்கில் இருந்தது.

நடு ஆசியாவும் பட்டுப்பாதையும் தொகு

நடு ஆசியாவின் சோக்தியானா பகுதியில் பட்டுப்பாதை செல்வதால், சீனாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே முக்கிய வணிக மையமாக சோக்தியானா விளங்கியது.

 
சோக்தியன் புத்தாண்டு நிகழ்ச்சியில் மக்கள்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சோக்தியானா&oldid=3357923" இலிருந்து மீள்விக்கப்பட்டது