ஓரன்பர்க் நகரம்

ஓரன்பர்க் (ஆங்கிலம்:Orenburg) என்பது ரஷ்யாவின் ஓரன்பர்க் மாகாணத்தின் நிர்வாக மையமாகும் . இது மாஸ்கோவின் தென்கிழக்கில் 1,478 கிலோமீட்டர்கள் (918 mi)தூரத்தில் உரால் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. ஐரோப்பா மற்றும் ஆசியாவை எல்லைகளாக்க் கொண்டுள்ளது. ஓரன்பர்க் கசக்கஸ்தானின் எல்லைக்கு மிக அருகில் உள்ளது. இதன் மக்கள் தொகை: 548,331 பேர் ( 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி ); 549,361 பேர் ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 546,501  பேர் ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு ) கொண்டுள்ளது.

நிலவியல் தொகு

இந்த நகரம் தெற்கு சைபீரிய வன புல்வெளியில், உரால் நதியின் நடுத்தர நீரோட்டத்தின் படுகையில் ( சக்மாரா நதியுடன் அதன் சங்கமத்திற்கு அருகில்) உள்ளது. நகரின் மிக உயரமான இடம் 154.4 மீட்டர்கள் ( 507 அடி) ஆகும். [ மேற்கோள் தேவை ]

நிர்வாக மற்றும் நகராட்சி நிலை தொகு

ஓரன்பர்க் மாகணத்தின் நிர்வாக மையமாகும் [1] மற்றும் நிர்வாகப் பிரிவுகளின் கட்டமைப்பிற்குள், இது ஓரன்பர்க்சுகி மாவட்டத்தின் நிர்வாக மையமாகவும் செயல்படுகிறது.

பொருளாதாரம் தொகு

ஓரன்பர்க் பல பெரிய நிறுவனங்களையும் அவற்றின் துணை நிறுவனங்களையும் கொண்டுள்ளது. ஓரன்பூர்காசுப்ரோம்,[2] காசுப்ரோமின் துணை நிறுவனம்; ஓரன்பர்க்நெஃப்ட்,[3] டி.என்.கே-பிபி எண்ணெய் நிறுவனத்தின் துணை நிறுவனம்; ஓரன்பர்க் எரிசக்தி நிறுவனம் , உருசியாவின் மிகப்பெரிய எரிசக்தி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும்.

ராணுவம் தொகு

நகரின் தென்மேற்கே 9 கி.மீ தூரத்தில் ஒரு விமான தளம் உள்ளது.

காலநிலை தொகு

ஓரன்பர்க் ஒப்பீட்டளவில் வறண்ட ஈரப்பதமான காலநிலையை ( கோப்பன் காலநிலை வகைப்பாடு ) கொண்டுள்ளது. இது மிக நீண்ட மற்றும் வெப்பமான கோடைகாலங்கள் மற்றும் நீண்ட மற்றும் குளிர்ந்த குளிர்காலங்களைக் கொண்டுள்ளது. ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்கள் மாறுதல் மாதங்கள், மீதமுள்ள மாதங்கள் கோடை அல்லது குளிர்காலம் ஆகும்.

கல்வி மற்றும் கலாச்சாரம் தொகு

ஓரன்பர்க் ஒரு பிராந்திய கல்வி மையமாகும் மற்றும் பல கலாச்சார நிறுவனங்கள் மற்றும் அருங்காட்சியகங்களைக் கொண்டுள்ளது.

கல்வி தொகு

ஓரன்பர்க் மாநில பல்கலைக்கழகம் இங்கு அமைந்துள்ளது. மேலும் ஓரன்பர்க் மாநில மருத்துவ அகாதமி. இது 1944 இல் சக்கலோவ் மாநில மருத்துவ நிறுவனமாக நிறுவப்பட்டது. இது 1957 ஆம் ஆண்டில் ஓரன்பர்க் மாநில மருத்துவ நிறுவனம் என மறுபெயரிடப்பட்டது . இது 1994 இல் அகாதமி அந்தஸ்தைப் பெற்றது. தற்போது எட்டு பிரிவுகள் உள்ளன : மருத்துவம், குழந்தை மருத்துவம், பல் மருத்துவம், மருந்தகம், மருத்துவ உளவியல், செவிலியம், பொது சுகாதாரம் மற்றும் தொடர்ச்சியான கல்வி போன்றவை

சுற்றுலா தொகு

இப்பகுதியில் மலை மற்றும் நதி சுற்றுலா உருவாக்கப்பட்டுள்ளது. உரால் நதியின் தெற்கு விளிம்பின் ஏராளமான வேகமான மலை ஆறுகள் மற்றும் பாறைகள் உள்ளன, இது சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது. இந்த நகரம் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையில் அமைந்துள்ளது. உரால் நதி ஆசியா மற்றும் ஐரோப்பாவின் எல்லையை குறிக்கிறது, மேலும் இரு பக்கங்களையும் இணைக்கும் ஒரு பாலம் உள்ளது.

இந்த நகரம் அதன் ஓரன்பர்க் சால்வைகளுக்கு பிரபலமானது. கை சால்வைகள் மற்றும் சிலந்தி வலை போன்ற கைக்குட்டைகள் ஆகியவற்றால் பின்னப்பட்ட மெல்லிய வடிவமைப்பு, சூடாக்க மட்டுமல்லாமல், அலங்கார நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

கட்டிடக்கலை தொகு

உரால் ஆற்றின் கரையில் உள்ள ஒரு பிரபலமான அகலமான ஏரி ஓரன்பேர்க்கில் மிகவும் குறிப்பிடத்தக்க இடங்களில் ஒன்றாகும்.

விளையாட்டு தொகு

1970 இல் நிறுவப்பட்ட உள்ளூர் கால்பந்து அணியான எஃப்.சி ஓரன்பர்க், 2016-17 பருவத்தில் முதல் முறையாக ரஷ்ய பிரீமியர் லீக்கில் வெற்றியடைந்தது. பேகல் காசுப்ரோமா [4] என்பது ஒரு மேசைப் பந்தாட்டம் அணியாகும்.

மரியாதைகள் தொகு

2007 ஜூன் 1 அன்று ஓரென்பர்க் நகரத்திற்கு சிறுகோள் 27709 என்று பெயரிடப்பட்டது  

குறிப்புகள் தொகு

  1. Law #1370/276-IV-OZ
  2. "Archived copy". Archived from the original on April 30, 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-04-11.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "Archived copy". Archived from the original on May 3, 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-04-12.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. "fakelgazproma.ru/". Archived from the original on 2019-11-22. பார்க்கப்பட்ட நாள் 2019-11-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓரன்பர்க்_நகரம்&oldid=3580177" இலிருந்து மீள்விக்கப்பட்டது