சிறுகோள் அல்லது (Asteroid ) என்பது சூரியக் குடும்பத்தின் உட்புறப் பகுதியில் சூரியனைச் சுற்றிவரும் கோள் வட்டமையாத கோள்களினும் மிகச் சிறியனவாகிய. வால்வெள்ளியின் பான்மையேதும் இல்லாத, சூரியக் குடும்ப உருவாக்கத்தின்போது கோள்களுக்குள் சேர்த்துக்கொள்ளப்படாத முற்கோளாக்க வட்டின்(protoplanetary disc) எச்சங்களாய வான்பொருள்கள் ஆகும். இவற்றில் பெரியனவும் கோளினும் சிறியனவும் ஆக அமையும் வான்பொருள்கள் கோள் போன்றவை எனப்பொருள்படும் கோள்போலிகள் (போலிக்கோள்கள்) (Planetoid) எனப்படுகின்றன. மிகப் பெரும்பான்மையான சிறுகோள்கள், சிறுகோள் பட்டைப் (asteroid belt) பகுதியிலேயே காணப்படுகின்றன. இவை செவ்வாய்க்கும், வியாழனுக்கும் இடையில், நீள்வட்ட வட்டணையிலேயே உள்ளன. சில சிறுகோள்களுக்கு, சிறுகோள் நிலாக்களும் அமைவதுண்டு. சூரியக் குடும்பத்தின் வெளிப்புறப் பகுதியில் உள்ள சிறுகோள்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் மேற்பரப்புகள் வால்வெள்ளிகளைப் போல ஆவியாகும் தன்மையோடு அமைந்திருந்த்தால், இவை சிறுகோள்பட்டையில் உள்ள சிறுகோள்களில் இருந்து பிரித்துணரப்படுகின்றன.[1] இந்தக் கட்டுரை சூரியக் குடும்ப உட்புறச் சிறுகோள்களையும் வியாழனைச் சுற்றிவரும் சிறுகோள்களை மட்டுமே கருதுகிறது.

இந்தப் படம் ஈராசின் ஒருமுனையில் இருந்து அதன் கீழே அமைந்த எதிர்முனை நோக்கிய கடிகையால் பிடிக்கப்பட்டுள்ளது. இதில் 35 மீ (120 அடி) குறுக்களவுகொண்ட கூறுபாடுகளும் தெளிவாகத் தெரிகின்றன.
253 மதில்டே, 50 கிமீ குறுக்களவுள்ள, இதில் அரைப்பங்களவுக் குழிப்பள்ளங்களால் நிரம்பிய சி வகை சிறுகோள். ஒளிப்படம் 1997 இல் நியர் சூமேக்கர் ஆய்கலனால் எடுக்கப்பட்டது.

சிறுகோளுக்கான சரியான வரைவிலக்கணம் தெளிவாக இல்லை. வியாழனின் அரைப் பேரச்சுகளுக்கு(semi-major axes) அப்பாலுள்ள, பனிக்கட்டியினாலான சிறிய கோள்கள், வால்வெள்ளிகள், செண்டார்கள் (Centaur), அல்லது நெப்டியூனுக்கு அப்பாலுள்ள பொருள்கள். விண்கற்கள், கோளிடை வெளியிலுள்ள திண்மப் பொருட்கள் ஆகியவை சிறுகோள்களிலும் குறிப்பிடத்தக்க அளவு சிறியவை (1 கிமீ இலும் மிகச் சிறிய விட்டம் உள்ளவை). விண்கற்கள் பொதுவாக பாறைஅளவு அல்லது அதனினும் சிறியவை.

1801 ஆம் ஆண்டுக்குப் பிறகு வானில் பல நுண்ணிய பொருள்கள் செவ்வாய்க்கும் வியாழனுக்கும் நடுவிலுள்ள வட்டணைகளில் சூரியனைச் சுற்றி வருவதாகக் கண்டுபிடிக்கபட்டது. அவை சூரியனைச் சுற்றுவதால் அவற்றைக் கோளாகத்தான் மதிக்க வேண்டும். ஆனால் அவை மிகமிகச் சிறியவை. இந்தப் பொருள்கள் புள்ளியாகளாகத் தெரிகின்றன. அவை விண்மீன்களைப் போலவே புள்ளி புள்ளியாகத் தெரிகின்றன. அதனால் அவற்றுக்கு விண்மீண்களைப் போல வடிவமுள்ளவை என்று பொருள்படும் அஸ்டிராய்டு (asteroid) என்ற பெயர் இடப்பட்டது. ஆனால் சில அறிவியலாளர்கள் கோள்களை ஒத்தவை என்ற பொருள்படுகிற பிளானடாய்டு (planetoid) என்ற பெயரைப் பயன்படுத்துகிறார்கள். இவை சில வேளைகளில் புவியின் வளிமண்டலத்தில் புகுந்து விடுவதுண்டு. அவை காற்றுடன் உராய்ந்து சூடாகி எரிந்து விடும். அவற்றை விண்கொள்ளிகள் (meteors) என்கிறார்கள். சில விண்கொள்ளிகள் முழுவதுமாக எரிந்து விடாமல் அவற்றின் ஒரு பகுதி தரையில் வந்து விழுவதுண்டு. அவற்றை விண்தாது (meteorite) என்பார்கள். அது புவியின் வளிமண்டலத்தில் நுழையாமல் விண்வெளியிலேயே இருந்தால் அதை விண்கல் (meteroid) எனக் குறிப்பிடுகிறார்கள்.

பெரும்பாலான சிறுகோள்கள் செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் அமைந்த வட்டணைகளிலும் வியாழனைச் சுற்றி வியாழத் திரோயன்களாகவும் அமைகின்றன. புவியண்மை வாட்டணைச் சிறுகோள்கள் உட்பட, வேறு வட்டணைக் குடும்பச் சிறுகோள்களும் கணிசமான எண்ணிக்கையில் நிலவுகின்றன. இவை அவற்றின் உமிழ்வுக் கதிர்நிரல் பான்மையை வைத்துப் பின்வரும் மூன்று முதன்மைக் குழுக்களாகப் பகுக்கப்படுகின்றன: C வகை, M வகை, S வகை. சி வகை கரிமம் செறிந்ததாகும். எம் வகை பொன்மம் (உலோகம்) செறிந்ததாகும். எஸ் வகை சிலிகேட் கல் செறிந்ததாகும். இவற்றின் அளவுகள் பெரிதும் வேறுபடுகின்றன. இவற்றில் 1000 கிமீ அளவு குறுக்களவு அமைந்தவையும் உண்டு.

இவை விண்வீழ்கற்களில் இருந்தும் வால்வெள்ளிகளில் இருந்தும் வேறுபட்டவை. வால்வெள்ளிகளின் இயைபுக் கூறுகள் பனிக்கட்டியும் தூசும் ஆகும். ஆனால் சிறுகோள்களின் உட்கூறுகள் கனிமங்களாலும் பாறையாலும் ஆனவை. மேலும் சிறுகோள்கள் சூரியனுக்கு அருகாமையில் உருவாகியவை. எனவே இவற்றில் வால்வெள்ளிகளில் உள்ளதைப்போல பனிக்கட்டி அமைவதில்லை.[2] சிறுகோள்களும் விண்வீழ்கற்களும் அளவில் மட்டுமே வேறுபடுகின்றன. விண்வீழ்கற்கள் ஒரு மீட்டரினும் சிறியன. ஆனால் சிறுகோள்கள் ஒரு மீட்டரினும் பெரியவையாகும்.[3] கடைசியாக, விண்கற்கள் சிறுகோள் பொருள்களையோ வால்வெள்ளிப் பொருள்களையோ பெற்றிருக்கலாம்.[4]

4 வெசுட்டா எனும் சிறுகோள் மட்டுமே ஒளித்தெறிப்புப் பரப்பைக் கொண்டுள்ளது. எனவே இதைச் சரியான இருப்பில் உள்ளபோது, வெற்றுக்கண்ணாலேயே மிக இருண்ட வானில் பார்க்கலாம். அரிதாக புவியருகே வரும் சிறுகோள்கள் குறுகிய நேரத்துக்கு வெற்றுக்கண்ணுக்குப் புலப்படுவதுண்டு.[5] 2016 மார்ச்சு வரை சிறுகோள் மையம் 1.3 மில்லியன் வான்பொருள்களை உள்புற, வெளிப்புற சூரியக் குடும்பத்தில் பதிவு செய்துள்ளது. இவற்றில் 750,000 பொருள்களுக்குப் போதுமான தகவல்கள் கிடைத்து எண்ணிட்டு பெயரிடப்பட்டுள்ளன.[6]

பொதுமக்களிடம் சிறுகோள்களைப் பற்றிப் பரப்புரை செய்ய ஜூன் 30 ஆம் நாளைச் பன்னாட்டுச் சிறுகோள் நாளாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நாள் உருசியக் குடியர்சில் உள்ள சைபீரியாவைத் துங்குசுக்கா சிறுகோள் 1908 ஜூன் 30 இல் மோதிய நாளை வைத்து ஒவ்வோராண்டும் கொண்டாடப்படுகிறது.[7][8]

கண்டுபிடிப்பு தொகு

 
243 இடாவு அதன் நிலாவான டாக்டிலும். டாக்டில் தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோளின் நிலாவாகும்.

கியூசெப்பே பியாசி எனும் வானியலாளரே 1801 ஆம் ஆண்டில், முதன் முதலில் சிறுகோளைக் கண்டறிந்தார். அதன் பெயர் சீரெசு (குறுங்கோள்) ஆகும். இதுவே சிறுகோள்களில் மிகவும் பெரியது. இது முதலில் கோளாகவே கருதப்பட்டது.[9][10] ஆனால், இப்போது இது கோள்குறளியாகக் (குறுங்கோளாகக்)(dwarf planet) கருதப்படுகிறது.

வால்வெள்ளிகள், செண்டார்கள், சிறிய நெப்டியுனியக் கடப்புப் பொருள்கள் அடங்க, அனைத்து பிற சிறுகோள்களும் இப்போது சிறிய சூரியக் குடும்பப் பொருள்களாக வகைபடுத்தப்படுகின்றன. இதற்குப் பின்னர் விண்மீன் போன்ற ஒளிப்புள்ளிகளாகத் தோன்றும் பிற சிறுகோள்வட்டு அமையாத வான்பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவை அவற்றின் தோற்ற இயக்கங்களால் விண்மீன்களில் இருந்து வேறுபடுத்தப்பட்டன இதைவைத்து வானியலாளர் வில்லியம் எர்செல் விண்மீன்போலி அல்லது விண்மீன்போன்ற எனும் பொருள்வாய்ந்த "asteroid" எனும் ஆங்கிலச் சொல்லை அறிமுகப்படுத்தினார்.[11] இது கிரேக்கச் சொல்லான ἀστεροειδής, அல்லது ஆங்கிலத்தில் asteroeidēs என ஒலிக்கப்படும் 'விண்மீன்போன்ற, விண்மீன்வடிவ' எனும்பொருள் அமைந்த சொல் கொணரப்பட்டது. பண்டைய கிரேக்கத்தில் ἀστήρ astēr என்றால் 'விண்மீன், கோள்' எனப் பொருள்படும். இவற்றுக்கு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்னரைத் தொடக்க காலத்தில், சிறு எனும் முன்னடையில்லாமலே "asteroid" "planet" எனும் இருசொற்களுமே மாற்றிமாற்றி அறிவியல் நடைமுறையில் வழங்கப்பட்டு வந்தன. [note 1]

வரலாற்று முறைகள் தொகு

கடந்த இருநூற்றாண்டுகளில் சிறுகோள் கண்டுபிடிப்பு முறைகள் பேரளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

சர் வில்லியம் எர்செல் 1781 இல் வருணனைத் (யுரேனசைத்) திசியசு போடின் விதியால் கண்டுபிடித்ததால், பதினெட்டாம் நூற்றண்டின் கடைசி ஆண்டுகளில் பாரன் பிரான்சு சேவர் வான் சாக் என்பார் 24 வானியலாளர்களை அழைத்துச் சூரியனில் இருந்து 2.8 வானியல் அலகு தொலைவுக்குள் அமைய வாய்ப்புள்ள, கண்டுபிடிக்கத் தவறிய, கோள்களைத் தேடிக் கண்டுபிடிக்கச் சொன்னார். இதற்கு அந்தக் குறிப்பிட்ட ஓரைப் பட்டைக்குள் அமைந்த அனைத்து விண்மீன்களையுமே ஏற்கப்பட்ட மிக அருகிய மங்கலான பொலிவு வரை அட்டவணைப்படுத்திய வான்வரைபடம் தேவையாகும். இதை வரைந்த்தும், பிறகு, பின்வரும் இரவுகளில் இப்பட்டைக்குள் அமையும் இயங்கும் பொருள்களைத் தேடல் வேண்டும். கண்டுபிடிக்கத் தவறிய கோளின் இயக்கம் ஒரு மணி நேரத்தில் 30 நொடி வட்டவில்லாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. இதை நோக்கீட்டாளர்கள் எளிதாக கண்டறியலாம்.

 
முதல் குறுங்கோள் படிமம்: (சசீரெசுவும், வெசுட்டாவும்) செவ்வாயில் இருந்து கியூரியாசிட்டி தரையூர்தியால் பார்க்கப்பட்ட காட்சி, (20 ஏப்பிரல் 2014).

முதல் வான்பொருள், சீரெசு, இந்தக் குழு உறுப்பினர் எவராலும் கண்டறியப்படவில்லை. ஆனால் அது தற்செயலாக, சிசிலியில் உள்ள பலெர்மோ வான்காணக இயக்குநராகிய கியூசெப்பே பியாசியால் 1801 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் தாரசு விண்மீன்குழுவில் விண்மீன்போன்ற புதிய வான்பொருளைக் கண்டார். பின் அதன் இடப்பெயர்ச்சியைப் பல இரவுகளாகக் கண்காணித்தார். அதே ஆண்டில் பிறகு, கார்ல் பிரீடுரிக் காசு இந்த நோக்கிடுகளைப் பயன்படுத்தி, இந்த அறியப்படாத பொருளின் வட்டணையைக் கணக்கிட்டார். இது செவ்வாயின் வட்டணைக்கும் வியாழனின் வட்டணைக்கும் இடையில் அமைவதைக் கண்டுபிடித்தார். கியூசெப்பே பியாசி இதற்கு உரோம வேளாண்கடவுளான சீரெசுவின் பெயரை இட்டார்.

பிற மூன்று குறுங்கோள்களான (2 பல்லசுவும் 3 யூனோவும் 4 வெசுட்டாவும்) அடுத்த சில ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் வெசுட்டா 1807 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்த எட்டு ஆண்டுகள் தேட்ட்த்தில் புதிய குறுங்கோள் ஏதும் கிடைக்காமல் போகவே, அனைவரும் மேலும் தொடர்ந்து தேடுவதை நிறுத்திக்கொண்டனர்.

என்றாலும், கார்ல் உலூத்விக் என்கே 1830 இல் தொடங்கி, தொடர்ந்தும் குறுங்கோள் வேட்டையில் ஈடுபட்டார். பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் கடந்த 38 ஆண்டுகளில் முதன்முதலாக, 5 அசுட்டிரேயியாவைக் கண்டுபிடித்தார். அடுத்த இரண்டாண்டுகட்குள், இவர் 6 கெபேவைக் கண்டுபிடித்தார். இதற்குப் பிறகு, பல வானியலாளர்கள் இத்தேடலில் கலந்துகொண்டனர். எனவே 1945 ஐத் தவிர, ஒவ்வோராண்டும் குறைந்தது ஒரு குறுங்கோளாவது கண்டுபிடிக்கப்பட்டது.. இக்காலக் குறுங்கோள் வேட்டையாளர்களாக ஜான் இரசல் இந்த், அன்னிபேல் தெ கசுபாரிசு, கார்ல் தியோடோர் இராபர்ட் உலூதர், எர்மன் மேயர் சாலமன் கோல்டுசுமித், ழீன் சாகோர்னாக், ஜேம்சு பெர்கூசன், நார்மன் இராபர்ட் போகுசன், எர்னெசுட்டு வில்கெல்ம் இலெபெரச்ட் டெம்பெல், ஜேம்சு கிரைகு வாட்சன், கிறித்தியான் என்றிச் பிரீடுரிக் பீட்டர்சு, அல்போன்சு உலூயிசு நிகோலசு போரெலி, யோகான் பாலிசா, பவுல் என்றி, பிராசுபர் என்றி எனும் என்றி உடன்பிறப்புகள், ஆகத்தே சார்லோயிசு ஆகியோரைக் குறிப்பிடலாம்.

மேக்சு வுல்ஃப் என்பார் 1891இல் முன்னோடியாக குறுங்கோள்களைக் கண்டுபிடிக்கும் வானொளிப்படவியலை அறிமுகப்படுத்தினார். இம்முறைய்ல் ஒளிப்பட்த்தட்டில் குறுங்கோள்களின் இயக்கம் வெண்கீறைகளாக அமையும். பழைய கட்புல நோக்கீட்டு முறையை விட இது குறுங்கோள்களின் கண்டுபிடிப்பு வீதத்தை வியப்புறும் வகையில் கூட்டியது: வுல்ஃப் மட்டுமே 323 புரூசியாவில் தொடங்கி 248 குறுங்கோள்களைக் கண்டுபிடித்தார். மேலும் அதுவரையில் ஏறத்தாழ, 300 குறுங்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இவற்றுக்கு மேலும் பல இருக்க வாய்ப்பிருந்தாலுக் அவை வானப் புழுக்கள் எனக்கொண்டு வானியலாளர்கள் அவற்றின் கண்டுபிடிப்பில் ஆர்வம் கொள்லவில்லை.[12] இச்சொற்றொடரைக் கூறியவர் எடுவார்டு சூயசு ஆவார் எனக் கருதப்படுகிறது.[13] [14] மேலும் ஒரு நூற்றாண்டு கழிந்தபிறகும், சில ஆயிரம் குறுங்கோள்களே கண்டுபிடிக்கப்பட்டு எண்ணும் பெயரும் இடப்பட்டுள்ளன.

1900 களின் முறைகளும் புத்தியல் கால அறிக்கைகளும் தொகு

குறுங்கோள்களின் கண்டுபிடிப்பு 1998 வரை நான்கு படிநிலை நிகழ்வால் கண்ட்றியப்பட்டன: முதலில் வானின் ஒருபகுதி அகல்புலத் தொலைநோக்கியால் ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டன. இவை வான்வரைபடங்கள் எனவும் அழைக்கப்பட்டன. இவை ஒருமணி நேர இடைவெளிகளில் எடுக்கப்பட்டன. பல நாட்கள் தொடர்ந்து இதுபோல ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டன. இரண்டாம் படிநிலையாக, ஒரே வான்பகுதி சார்ந்த இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட ஒளிப்படங்கள் ஒரு பருநோக்கியால் நோக்கப்பட்டன. சூரியனை வட்டணையில் சுற்றிவரும் எந்த வொரு வான்பொருளும் தொடர்ந்த இரு ஒளிப்படங்களில் சற்றே நகர்ந்திருக்கம். பருநோக்கியில் அந்த வான்பொருளின் தோற்றம் விண்மீன்களின் பின்னணியில் மெல்ல மிதப்பதுபோல அமையும். மூன்றாம் படிநிலையாக, அப்படி நகரும் வான்பொருள் இனங்காணப்படும். பின்னர் அர்ஹன் இருப்பு துல்லியமாக, இலக்கவியல் நுண்ணோக்கியால் அளக்கப்படும். இந்த வான்பொருளின் இருப்பு விண்மீன் இருப்புகள் சார்ந்து அளக்கப்படும்.[15]

முதல் மூன்று படிநிலைகள் மட்டுமே குறுங்கோள் கண்டுபிடிப்பை முழுமையாக்கி உறுதிபடுத்தாது: நோக்கீட்டாளர் ஒப்ர் ஒதுக்கீட்டைட்த்தை மட்டுமே கண்டுள்ளார். இதற்கு தற்காலிகமாக, கண்டுபிடித்த ஆண்டையும் அரைமாத கண்டுபிப்பு கடிதத்தையும் இறுதியாக கண்டுபிடிப்பின் வரிசைமுறை எண்ணையும் வைத்து ஒரு பெயரீடு தரப்படும் (எ. கா.: 1998 FJ|74).

கடைசிப் படிநிலையாக, இதன் இருப்புகளும் நோக்கீட்டு நேரமும் சிறுகோள் மையத்துக்கு அனுப்ப்ப்படும். அங்கு ஒற்றை வட்டணையில் தரப்பட்ட முந்தiyய ஒதுக்கீட்டிடங்களுடன் ஒப்பிட்டு கணினி நிரல்கள் அவற்ரில் எந்த இருப்பில் இந்த புது இருப்பை வைப்பது என்பதைத் தீர்மானிக்கும்.அப்போது இதற்கு ஓர் அட்டவணை எண் தரப்படும். பின்னர் இந்த வான்பொருளின் வட்டணையைக் கணக்கிட்டு, இந்த வான்பொருளுக்குப் பெயரிடும் உரிமை பன்னாட்டு வானியல் ஒன்றிய ஒப்புதலுடன் கண்டுபிடிப்பாளருக்கு வழங்கப்படும்.

கணினிவழி முறைகள் தொகு

 
2004 FH மையப்புள்ளியாகவும் வரிசைநிரலாக அமையும் ஒளிவீச்சு நகர்வு செயற்கோளாகவும் அமைதல்.

குறிப்புகள் தொகு

  1. எடுத்துக்காட்டாக Annual of Scientific Discovery for 1871, page 316, reads "Professor J. Watson has been awarded by the Paris Academy of Sciences, the astronomical prize, Lalande foundation, for the discovery of eight new asteroids in one year. The planet Lydia (No. 110), discovered by M. Borelly at the Marseilles Observatory [...] M. Borelly had previously discovered two planets bearing the numbers 91 and 99 in the system of asteroids revolving between Mars and Jupiter".

மேற்கோள்கள் தொகு

  1. "Asteroids". NASA – Jet Propulsion Laboratory. பார்க்கப்பட்ட நாள் 13 September 2010.
  2. "What is the difference between an asteroid and a comet?". Cool Cosmos. Infrared Processing and Analysis Center. பார்க்கப்பட்ட நாள் 13 August 2016.
  3. Rubin, Alan E.; Grossman, Jeffrey N. (February 2010). "Meteorite and meteoroid: new comprehensive definitions". Meteoritics and Planetary Science. doi:10.1111/j.1945-5100.2009.01009.x. Bibcode: 2010M&PS...45..114R. 
  4. "What is the difference between asteroids and meteorites?". Universe Today: Space and Astronomy News. Universe Today. பார்க்கப்பட்ட நாள் 13 August 2016.
  5. "Closest Flyby of Large Asteroid to be Naked-Eye Visible". Space.com. February 4, 2005.
  6. "Provisional Designations], Minor Planet Center". Minor Planet Center. March 26, 2016.
  7. "United Nations General Assembly proclaims 30 June as International Asteroid Day, United Nations Press Release". UNOOSA. 7 December 2016.
  8. "United Nations General Assembly International cooperation in the peaceful uses of outer space Resolution, United Nations Resolution". United Nations. 6 December 2016.
  9. "The Final IAU Resolution on the Definition of "Planet" Ready for Voting". IAU. 24 August 2006. பார்க்கப்பட்ட நாள் 2 March 2007.
  10. For example, the Annual of Scientific Discovery for 1871, page 316, reads "Professor J. Watson has been awarded by the Paris Academy of Sciences, the astronomical prize, Lalande foundation, for the discovery of eight new asteroids in one year. The planet Lydia (No. 110), discovered by M. Borelly at the Marseilles Observatory [...] M. Borelly had previously discovered two planets bearing the numbers 91 and 99 in the system of asteroids revolving between Mars and Jupiter".
  11. In an oral presentation ("HAD Meeting with DPS, Denver, October 2013 - Abstracts of Papers". Archived from the original on 1 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 14 October 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)), Clifford Cunningham presented his finding that the word has been coined by Charles Burney, Jr., the son of a friend of Herschel, see "Local expert reveals who really coined the word 'asteroid'". South Florida Sun-Sentinel. 8 October 2013. Archived from the original on 30 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 10 October 2013.. See also Wall, Mike (10 January 2011). "Who Really Invented the Word 'Asteroid' for Space Rocks?". SPACE.com. பார்க்கப்பட்ட நாள் 10 October 2013.
  12. Friedman, Lou. "Vermin of the Sky". The Planetary Society.
  13. Hale, George E. (1916). "Address at the semi-centennial of the Dearborn Observatory: Some Reflections on the Progress of Astrophysics". Popular Astronomy. Vol. 24. pp. 550–558, at p 555. Bibcode:1916PA.....24..550H.
  14. Seares, Frederick H. (1930). "Address of the Retiring President of the Society in Awarding the Bruce Medal to Professor Max Wolf". Publ. Astr. Soc. Pacific 42: 5–22, at p 10. doi:10.1086/123986. Bibcode: 1930PASP...42....5S. 
  15. Chapman, Mary G. (17 May 1992). "Carolyn Shoemaker, Planetary Astronomer and Most Successful 'Comet Hunter' To Date". USGS. பார்க்கப்பட்ட நாள் 15 April 2008.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுகோள்&oldid=3802927" இலிருந்து மீள்விக்கப்பட்டது