நார்மன் இராபர்ட் போகுசன்
பிரித்தானிய வானியலாளர்
நார்மன் இராபர்ட் போகுசன் (Norman Robert Pogson), இ பே து (CIE) (23 மார்ச்சு 1829 – 23ஜூன் 1891) ஓர் ஆங்கிலேய வானியலாளர் ஆவார். இவர் இந்தியாவில் சென்னை வான்காணகத்தில் பணிபுரிந்தார். இவர் பல சிறுகோள்களைக் கண்டுபிடித்துள்ளார்;வால்வெள்ளிகளின் நோக்கீடுகளை மேற்கொண்டுள்ளார். இவர் உடுக்கண பருமைகளுக்கான கணிதவியல் அளவுகோலை உருவாக்கியுள்ளார். இது போகுசன் விகிதம் அல்லது தோற்றநிலைப் பருமைகளின் விகிதம் என வழங்கப்படுகிறது. இது இரு தொடர்நிலைப் பருமைகளின் விகிதமாகும். இது நூறு எனும் எண்ணின் ஐந்தாம் வருக்க மூலமாக (~2.512) அமைகிறது.[1]
நார்மன் இராபர்ட் போகுசன் <> Norman Robert Pogson | |
---|---|
பிறப்பு | நாட்டிங்காம், இங்கிலாந்து | 23 மார்ச்சு 1829
இறப்பு | 23 சூன் 1891 சென்னை, இந்தியா | (அகவை 62)
தேசியம் | ஆங்கிலேயர் |
துறை | வானியல் |
விருதுகள் | இலாலண்டே பரிசு (1856) |
தகைமைகள்
தொகுஇவருக்கு 1879 ஜனவரியில் இந்தியப் பேரரசுத் துணைவர் ஆணை வழங்கப்பட்டது.[2]
இவரது நினைவாகப் பெயரிடப்பட்ட வான்பொருட்கள்:
- குறுங்கோள் 1830 போகுசன்
- நிலாவின் போகுசன் குழிப்பள்ளம்
- குறுங்கோள் 42 இசிசு இவரது மகள் எலிசபத் இசிசு போகுசன்
நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Vibart, Henry Meredith (1885–1900). "Pogson, Norman Robert". Dictionary of National Biography. London: Smith, Elder & Co.
- ↑ Reddy, V.; Snedegar, K.; Balasubramanian, R. K. (2007). "Scaling the magnitude: the fall and rise of N. R. Pogson". Journal of the British Astronomical Association 117 (5): 237–245. Bibcode: 2007JBAA..117..237R.
வெளி இணைப்புகள்
தொகு- On Pogson's contributions
- Pogson, Norman Robert in libraries (WorldCat catalog)