உலுக் பெக்
உலுக் பெக் (Ulugh Beg) என அழைக்கப்படும் மிர்சா முகம்மது தராகே பின் சாருக் (Mīrzā Muhammad Tāraghay bin Shāhrukh, பாரசீக மொழி: میرزا محمد تراغای بن شاہ رخ, மார்ச் 22, 1394, ஈரான் – அக்டோபர் 27, 1449, சமர்கந்து) என்பவர் தைமூரியப் பேரரசரும், வானியலாளரும், கணிதவியலாளரும், சுல்தானும் ஆவார்.[1] இவர் முக்கோணவியல், வடிவவியல் ஆகிய வானியல்-தொடர்புள்ள கணிதத்தில் இவரது ஆய்வுகள் அமைந்திருந்தன. 1424, 1429 ஆண்டுப் பகுதியில் இவர் உசுபெக்கிசுத்தானில் சமர்கந்துவில் வான்காணகம் ஒன்றைக் கட்டினார். இவர் கட்டிய வான்காணகம் பைசாஞ்சிய நகரப் புனித சொஃபியா கும்மட்டத்தைவிட உயரமானது. அது சூரியக் குத்துயரத்தை அளக்கும் சூரியக் கடிகை (குனோமொன்) ஒன்றையும் பெற்றிருந்தது. இது இசுலாமிய உலகில், குறிப்பாக மத்திய ஆசியாவில் மிகப் பெரிய வான்காணகமாக இருந்ததெனக் கருதப்படுகிறது.[2] சமர்கந்துவிலும் புகாராவிலும் உலுக் பெக் மத்ரசா (1417–1420) ஒன்றைக் கட்டினார். இதன் மூலம் நகரங்களை அவர் கலாசார, கல்வி மையங்களாக மாற்றினார்.[3]
உலுக் பெக் Ulugh Beg | |
---|---|
பிறப்பு | சுல்தானியா | மார்ச்சு 22, 1394
இறப்பு | அக்டோபர் 27, 1449 | (அகவை 55)
இனம் | துர்க்கியர் |
பணி | வானியல் வல்லுநர், கணிதவியலாளர், சுல்தான் |
அறியப்படுவது | முக்கோணவியல், கோளவுரு வடிவவியல் |
பட்டம் | மிர்சா |
உறவினர்கள் | தைமூர் பெக், சா ருக் பெக் |
இவர் வானாய்வில் ஈடுபட்டு கோள்களின் பட்டியல்களையும் விண்மீன் அட்டவணைகளையும் வெளியிட்டார். இவை தாலமியின் அட்டவணைகளைவிட சிறந்தவை. இவையே இப்பார்க்கசுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட புதிய அட்டவணைகளாகும். இவரது கோள்களின் பட்டியல்களும் அட்டவணைகளும் ஐரோப்பாவில் 1665இல் வெளியிடப்பட்டன.
இறப்பு
தொகுதனது தந்தை சார்க் மிர்சாவின் இறப்பைக் கேள்வியுற்ற உலுக் பெக் பால்க் நகர் (இன்றைய ஆப்கானித்தானில்) சென்றார். அங்கு அவர் தனது மருமகனும், சகோதரன் பைசன்கோரின் மகனுமான அலாவுதவுலா தைமூரியப் பேரரசின் ஆட்சிக்கு உரிமை கோரியது தெரிய வந்தது. அலாவுதவுலாவுடன் போர் புரிந்து அவனை வென்ற உலுக் பெக் ஏரத் சென்று 1448 இல் அந்நாட்டு மக்களைக் கொன்று குவித்தார். ஆனால், அலாவுதாவுலாவின் சகோதரன் அபுல்-காசிம் அலாவுதாவுலாவுக்கு உதவிக்கு வந்து உலுக் பெக்கை விரட்டினான். உலுக் பெக் பால்க் திரும்பிய பொழுது, அவரது மூத்த மகன் அப்துல்-லத்திப் மிர்சா அவருக்கு எதிராகக் கிளர்ச்சியில் இறங்கியதை அறிந்தார். இதனை அடுத்து மீண்டும் உள்நாட்டுப் போர் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளில் மக்கா செல்லும் வழியில் மூத்த மகனின் ஆணையின் படி அவர் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.[4] இறுதியாக, உலுக் பெக் அவரது மருமகன் அப்தல்லா மிர்சாவினால் (1450–1451) சிறப்பிக்கப்பட்டு, அவரது உடல் சமர்கந்துவில் உள்ள தைமூர் சமாதியில் வைக்கப்பட்டது. 1941 ஆம் ஆண்டில் இது தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
நினைவு
தொகுகுறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ B.F. Manz, "Tīmūr Lang", in Encyclopaedia of Islam, Online Edition, 2006
- ↑ Science in Islamic civilisation: proceedings of the international symposia: "Science institutions in Islamic civilisation", & "Science and technology in the Turkish and Islamic world" [1]
- ↑ The global built environment as a representation of realities: By author:A.J.J. Mekking [2]
- ↑ Stevens, John. The history of Persia. Containing, the lives and memorable actions of its kings from the first erecting of that monarchy to this time; an exact Description of all its Dominions; a curious Account of India, China, Tartary, Kermon, Arabia, Nixabur, and the Islands of Ceylon and Timor; as also of all Cities occasionally mention'd, as Schiras, Samarkand, Bokara, &c. Manners and Customs of those People, Persian Worshippers of Fire; Plants, Beasts, Product, and Trade. With many instructive and pleasant digressions, being remarkable Stories or Passages, occasionally occurring, as Strange Burials; Burning of the Dead; Liquors of several Countries; Hunting; Fishing; Practice of Physick; famous Physicians in the East; Actions of Tamerlan, &c. To which is added, an abridgment of the lives of the kings of Harmuz, or Ormuz. The Persian history written in Arabick, by Mirkond, a famous Eastern Author that of Ormuz, by Torunxa, King of that Island, both of them translated into Spanish, by Antony Teixeira, who liv'd several Years in Persia and India; and now render'd into English.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் உலுக் பெக் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- "Ulugh Beg". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.
- The observatory and memorial museum of Ulugbek
- Bukhara Ulugbek Madrasah
- Registan the heart of ancient Samarkand.
- Biography by School of Mathematics and Statistics University of St Andrews, Scotland பரணிடப்பட்டது 2004-08-30 at the வந்தவழி இயந்திரம்
- Legacy of Ulug Beg