முகமது இக்பால்

சர் முகமது இக்பால் (Muhammad Iqbal, உருது: محمد اقبال; நவம்பர் 9, 1877 – ஏப்ரல் 21, 1938) என்பவர் பிரித்தானிய இந்தியாவின் முஸ்லிம் கவிஞரும், இஸ்லாமிய மெய்யியலாளரும், அரசியல்வாதியும் ஆவார். உருது, அரபு, மற்றும் பாரசீக மொழிகளில் இவர் எழுதிய கவிதைகள் தற்காலத்தின் பெரும் இலக்கியப் படைப்புகளாகக் கருதப்படுகின்றன[1]. பிரித்தானிய இந்தியாவில் முஸ்லிம்களுக்கெனத் தனிநாடு கோரிய இவரது தூரநோக்கு பாகிஸ்தான் என்ற நாட்டைப் பின்னர் உருவாக்குவதற்கு ஊக்கமூட்டியது.

சர் அலாமா முகமது இக்பால்
காலம்தற்காலம்
பகுதிஇஸ்லாமிய மெய்யியல்
பள்ளிஇஸ்லாமிய மெய்யியல்
முக்கிய ஆர்வங்கள்
கவிதை, மெய்யியல்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
இரு-நாடுகள் கொள்கை
செல்வாக்குச் செலுத்தியோர்
செல்வாக்குக்கு உட்பட்டோர்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

விலை மதிக்க முடியாத படைப்புகளுக்கு சொந்தக்காரராக விளங்கிய அல்லாமா இக்பால் 1873 பிப்ரவரி 22 இல் பிறந்தார். பள்ளிப் பருவத்திலேயே எழுதுவதில் ஆர்வம் மிகுந்தவராக விளங்கியவர்.

மௌலானா அபுல் அலா மௌதுதியின் சந்திப்பு அல்லாமா இக்பாலின் சிந்தனையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் அவரது கவிதைப் பயணம் ஆன்மிக வெளிச்சம் மிகுந்த பாதையில் அமைந்தது. மாணவப் பருவத்திலேயே மிகவும் திறமையாகத் திகழ்ந்த இக்பால் இங்கிலாந்தில் சட்டம் பயிலும் மாணவராக இருந்தபோதும் கூட தனது எழுத்துப் பணியினைத் தொடர்ந்தார்.

இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும் தனது படிப்பை முடித்துக் கொண்ட இக்பால் சட்டத்துறையில் தொழிலை ஆரம்பித்தார். ஆனாலும் அரசியல், பொருளாதாரம், வரலாறு, மெய்யியல், மற்றும் சமயம் ஆகிய துறைகளிலேயே அவர் நிறைய எழுதினார்.

இக்பால் அவர்களால் எழுதப்பட்ட "சாரே ஜகான் சே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா ஹமாரா" என்று தொடங்கும் பாடல் 1947 ஆகஸ்ட்டில் ஆங்கிலேயர் விரட்டியடிக்கப்பட்டு இந்தியாவின் நாடாளுமன்றத்தில் முதன்முதலாக ஒலித்தது. மறைந்த நேரு அவர்களால் அதிகம் கையாளப்பட்ட பாடலும் இதுவாகும்.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_இக்பால்&oldid=3685129" இலிருந்து மீள்விக்கப்பட்டது