தோக்தமிசு-தைமூர் போர்

தோக்தமிசு-தைமூர் போர் என்பது 1386 ஆம் ஆண்டு முதல் 1395 ஆம் ஆண்டுவரை தங்க நாடோடிக் கூட்டத்தின் கானாகிய தோக்தமிசு மற்றும் தைமூரிய பேரரசை தோற்றுவித்த போர் பிரபு மற்றும் படையெடுப்பாளரான தைமூர் ஆகிய இருவருக்கும் இடையே நடைபெற்ற போர் ஆகும். இப்போர் காக்கேசிய மலைகள், துருக்கிஸ்தான் மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பகுதிகளில் நடைபெற்றது. ஆரம்பகால உருசிய சமஸ்தானங்களின் மீதான மங்கோலிய சக்தி வீழ்ச்சி அடைவதில், இரு மங்கோலிய ஆட்சியாளர்களுக்கு இடையே நடைபெற்ற இந்த யுத்தமானது முக்கிய பங்கு வகித்தது,

தோக்தமிசு தலைமையிலான தங்க நாடோடிக் கூட்டம் மற்றும் அதன் கிப்சாக் போர்வீரர்களை அமீர் தைமூர் தோற்கடித்தல்

விளைவுகள் தொகு

தெரெக் ஆற்று யுத்தத்தில் மோசமான தோல்வியை சந்தித்த தோக்தமிசு பதவியிலிருந்து விலக்கப்பட்டார். எடிகு பதவிக்கு வந்தார். உக்ரைனிய புல்வெளிக்கு தோக்தமிசு தப்பியோடினார். லித்துவேனியாவின் பெரிய டியூக்கான வைடவுடசிடம் உதவி கோரினார். 1399 ஆம் ஆண்டு இருவரின் இணைந்த படைகளை போர்க்களத்தில் தைமூரின் 2 தளபதிகளான கான் தெமுர் குத்லுக் மற்றும் எடிகு ஆகியோர் நொறுக்கி வெற்றி பெற்றனர். 1406 ஆம் ஆண்டின் போது எடிகுவின் ஆட்களால் சைபீரியாவில் தோக்தமிசு கொல்லப்பட்டார். பதிலுக்கு 13 வருடங்களுக்குப் பிறகு தோக்தமிசின் மகன்களில் ஒருவர் எடிகுவை கொன்றார். தங்க நாடோடிக் கூட்டமானது இந்தப் போரில் இருந்து மீளவில்லை. பதினைந்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அது சிறிய கானரசுகளாக சிதறுண்டது. அக்கானரசுகள்: கசன் கானரசு, நோகை நாடோடிக் கூட்டம், காசிம் கானரசு, கிரிமிய கானரசு மற்றும் அஸ்ட்ரகான் கானரசு. இவ்வாறாக உருசியாவில் இருந்த தாதர்-மங்கோலிய சக்தியானது பலவீனப்படுத்தப்பட்டது. குருதி தேய்ந்த மங்கோலிய படையெடுப்பை நினைவுபடுத்தும் சொற்களான உருசியா மீதான 'தாதர் நுகத்தடி' ஆனது உக்ரா ஆற்றில் பெரிய நிலைப்பாடு மூலம் தீர்க்கமாக அதிர வைக்கப்பட்டது. தங்க நாடோடிக் கூட்டத்தின் எஞ்சியவை 1502 ஆம் ஆண்டு கிரிமிய கானரசால் அழிக்கப்பட்டன. தங்க நாடோடிக் கூட்டம் வீழ்ந்த பிறகு தோன்றிய கானரசுகள் 1550கள் முதல் ஆரம்பகால 17ஆம் நூற்றாண்டு வரை மஸ்கோவிய உருசியாவால் அதனுடன் இணைத்துக் கொள்ளப்பட்டன. உதுமானியப் பாதுகாப்பின் கீழ் 1783 ஆம் ஆண்டுவரை விரும்பிய கிரிமிய கானரசானது எஞ்சியிருந்தது. கசக் கானரசானது பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை எஞ்சியிருந்தது. புகாரா கானரசு மற்றும் கிவா ஆகியவையும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை எஞ்சியிருந்தன.

உசாத்துணை தொகு

ஆதாரங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோக்தமிசு-தைமூர்_போர்&oldid=3151918" இலிருந்து மீள்விக்கப்பட்டது