பீட்ரைசு போர்ப்சு மேன்சு
பீட்ரைசு போர்ப்சு மேன்சு என்பவர் மத்திய கிழக்கு மற்றும் நடு ஆசியாவைப் பற்றி எழுதும் ஒரு அமெரிக்க வரலாற்றாளர் ஆவார். இவர் நாடோடிகள் மற்றும் தைமூரிய அரசமரபின் வரலாற்றில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். இவர் தற்பொழுது மசாசுசெட்சு மாகாணத்திலுள்ள தப்ட்சு பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.[1] இவரது 1989 ஆம் ஆண்டு புத்தகமான த ரைஸ் அன்ட் ரூல் ஆஃப் டேமர்லேன் என்ற புத்தகமானது படையெடுப்பாளர் தைமூரின் வாழ்க்கையைப் பற்றிய மிகுந்த நம்பகத்தன்மை உடைய பதிப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.[2][3]
1970 ஆம் ஆண்டு இவர் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார். 1974 ஆம் ஆண்டு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் மத்திய கிழக்கு ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். பிறகு 1983ஆம் ஆண்டு மீண்டும் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில், உள் ஆசியா மற்றும் ஆல்தாய் சார்ந்த ஆய்வுகளில் முனைவர் பட்டம் பெற்றார்.[1]
உசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 "Beatrice Manz, chair". Tufts University. பார்க்கப்பட்ட நாள் 14 September 2014.
- ↑ Fragner, Bert (2000). "La Civiltà Timuride Come Fenomeno Internationale by Michele Bernardini". Iranian Studies 33 (3/4).
- ↑ Melville, Charles (April 2010). "Beatrice Forbes Manz, Power, Politics and Religion in Timurid Iran". Speculum 85 (2): 429–30. doi:10.1017/S0038713410000497. http://journals.cambridge.org/action/displayFulltext?type=1&fid=7574104&jid=SPC&volumeId=85&issueId=02&aid=7574096&bodyId=&membershipNumber=&societyETOCSession=.