ஆர்வர்டு பல்கலைக்கழகம்

ஹார்வர்டு பல்கலைக்கழகம் (Harvard University) ஐக்கிய அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ளது, ஐவி லீக் குழுமத்தில் ஒன்றாக உள்ள இப்பல்கலைக்கழகம் உலகத்தின் மிக பிரபலமான தனியார் பல்கலைக்கழகமும் அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் பாரம்பரியமான பல்கலைக்கழகமும் ஆகும். ஜான் ஹார்வர்டு என்னும் மதகுரு ஒருவரால் 1639-ஆம் ஆண்டு இது தொடங்கப்பெற்றது. 1869 முதல் 1909-ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகத் தலைவராக விளங்கிய சார்லஸ் இலியாட் இதை உலகின் தலை சிறந்த ஆராய்ச்சி கல்லூரியாக உருவாக்கினார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நூலகம்தான் உலகத்திலேயே மிகவும் அதிக நூல்கள் கொண்ட கல்லூரி நூலகமாக விளங்குகிறது, மற்றும் பொது நூலக வரிசையில் நான்காவது பெரிய நூலகமாக விளங்குகிறது.

ஹார்வர்டு பல்கலைக்கழகம்
Harvard University
BOS 07 2011 Harvard two oldest buildings 2868.jpg
வகைதனியார்
உருவாக்கம்செப்டம்பர் 8, 1636(பழைய), செப்டம்பர் 18, 1636 (புதிய)
நிதிக் கொடை$40.9 பில்லியன்[1]
தலைவர்லாரன்ஸ் பகாவ் [2]
நிருவாகப் பணியாளர்
2,400 (மருத்துவம் சாராத), 10,400 (மருத்துவ)[3]
மாணவர்கள்20,970 (2019)[4]
பட்ட மாணவர்கள்6,755 (2019)[4]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்14,215 (2019)[4]
அமைவிடம்ஐக்கிய அமெரிக்கா காம்பிரிட்ஜு, மசாசுசெட்ஸ், அமெரிக்கா
வளாகம்நகர், 209 ஏக்கர்/85 ha
Colors     Crimson[3]
இணையதளம்harvard.edu
Memorial Hall at Harvard University.JPG

2019 கணக்கின்படி, உலகத்திலேயே அதிக நன்கொடை (40.9 பில்லியன் அமெரிக்க டாலர்) பெறும் கல்லூரிகளில் ஹார்வர்டு முதல் இடம் வகிக்கிறது. [1] இப் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் துறை தமிழ்மொழி வகுப்புகளை வழங்குகிறது. [5]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 "Harvard Endowment Returns 6.5 Percent for Fiscal Year 2019". பார்த்த நாள் 26 மார்ச், 2020.
  2. "Office of the President". பார்த்த நாள் 30 ஜூன், 2020.
  3. 3.0 3.1 "Harvard at a Glance". ஹார்வர்டு பல்கலைக்கழகம். பார்த்த நாள் திசம்பர் 26, 2019.
  4. 4.0 4.1 4.2 "Common Data Set 2019-2020". ஹார்வர்டு பல்கலைக்கழகம். பார்த்த நாள் 23 ஜூன் 2020.
  5. "Department of South Asian Studies". பார்த்த நாள் 30 ஜூன், 2020.