பள்ளி நிறம்

பள்ளி நிறம் அல்லது நிறங்கள் (பல்கலைக்கழக வண்ணங்கள் அல்லது கல்லூரி வண்ணங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன School colors) என்பது ஒரு பள்ளியின் வகைக்குறி அடையாளத்தின் ஒரு பகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறங்கள் ஆகும். இவை கட்டிட அடையாளங்கள், வலைப்பக்கங்கள், சீருடைகள் மற்றும் விளையாட்டு அணிகளின் சீருடைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் பள்ளியினை விளம்பரப்படுத்தவும் மற்ற பள்ளிகளில் இருந்து வேறுபடுத்திக் காண்பிக்கவும் உதவலாம்.[1]

வடக்கு அலபாமா பல்கலைக்கழகத்தின் ( ஊதா மற்றும் தங்க நிறத்திலான) நிறங்களைக் காட்டுகிறது

பின்னணி தொகு

 
வாசிங்டன் பல்கலைக்கழகத்தின் பள்ளி நிறங்கள் (சிவப்பு மற்றும் பச்சை)

பள்ளி நிறங்களின் பாரம்பரியம் 1830 களில் இங்கிலாந்தில் தொடங்கியது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 1836 இல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்திற்கு எதிரான படகுப் போட்டிக்கு கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் நீல வண்ணத்தைத் தேர்ந்தெடுத்தது, [2] 1837 இல் ஈடன் பள்ளிக்கு எதிரான படகுப் போட்டியில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் பள்ளி இளஞ்சிவப்பு நிறத்தைப் பயன்படுத்தியது [3]

பல அமெரிக்கக் கல்லூரிகள் 1890 மற்றும் 1910 க்கு இடையில் பள்ளி வண்ணங்களை ஏற்றுக்கொண்டன. இவை பொதுவாகத் தனித்தன்மை வாய்ந்தவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன, பல நிறங்கள் மற்றும் வண்ணக் கலவைகள் பள்ளி நிறங்களாகத் தேர்வு செய்யப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் பல பொது ஆட்சிமுறைத் திருச்சபையின் உறுப்பினர் கல்லூரிகள் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் கருப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்களைப் பின்பற்றத் தொடங்கின. [4] சில அமெரிக்கப் பள்ளிகள், தேசபக்தியின் வெளிப்பாடாக, "சிவப்பு, வெள்ளை அல்லது நீலம்" என்ற தேசிய நிறங்களை ஏற்றுக்கொண்டன. [5]

விளையாட்டு தொகு

 
நிப்பான் ஸ்போர்ட் சயின்ஸ் யுனிவர்சிட்டி ரக்பி கால்பந்து சங்க வீரர்கள் வெளிர் மற்றும் அடர் நீல நிற சீருடைகளை அணிந்துள்ளனர்

பல்கலைக்கழக விளையாட்டு அணிகளை அடையாளம் காண வண்ணங்களின் பயன்பாடு 1836 ஆம் ஆண்டு ஆக்ஸசுபோர்டு மற்றும் கேம்பிரிட்ச்சுப் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடந்த இரண்டாவது படகு பந்தயத்தில் இருந்து தொடங்கியதாகக் கருதப்படுகிறது.[2] பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் தங்கள் விளையாட்டு மற்றும் பிற பல்கலைக்கழக முத்திரைகளுக்கு ஒரே மாதிரியான வண்ணங்களைப் பயன்படுத்தினாலும், கேம்பிரிட்ஜ் நீலம் என்பது பல்கலைக்கழகத்திற்கான துணை நிறத்தில் உள்ள பன்னிரண்டு வண்ணங்களில் ஒன்றாகும்,ஆனால் அவை அவற்றின் ஆறு முக்கிய நிறங்களில் ஒன்றல்ல. [6] நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் அதன் விளையாட்டு அணிகளுக்கு பச்சை மற்றும் தங்க வண்ணங்களைப் பயன்படுத்துகிறது, ஆனால் மீதமுள்ள பல்கலைக்கழகங்கள் நீலத்தைப் பயன்படுத்துகின்றன. [7] [8]

கல்வியாளர்கள் தொகு

 
எட்ஜ் ஹில் பல்கலைக்கழகத்திற்கான நிறங்கள் (ஊதா, தங்கம் மற்றும் பச்சை) ஆகியன கௌரவ பட்டதாரி சூ ஸ்மித்தின் பட்டையில் காணப்படுகின்றன

பல நிறுவனங்களின் சீருடைகளிலும் பள்ளி நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 1835 மற்றும் 1838 க்கு இடைப்பட்ட காலத்தில் இங்கிலாந்தில் உள்ள டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் இள ஊதா நிறம் பயன்படுத்தியதே பளிக்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முதல் நிறமாகக் கருதப்படுகிறது.[9]

பொதுவாகப் பயன்படுத்தப்படும் நிறங்கள் தொகு

  • கேம்பிரிட்ஜ் நீலம் - கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
  • கரோலினா நீலம் - வட கரோலினா பல்கலைக்கழகம்
  • கொலம்பியா நீலம் - கொலம்பியா பல்கலைக்கழகம்
  • டியூக் நீலம் - டியூக் பல்கலைக்கழகம்
  • ஈடன் நீலம் - ஈடன் பள்ளி
  • ஆக்ஸ்போர்டு நீலம் - ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
  • இள ஊதா நிறம் - டர்ஹாம் பல்கலைக்கழகம்
  • யேல் நீலம் - யேல் பல்கலைக்கழகம்

சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளி_நிறம்&oldid=3779523" இருந்து மீள்விக்கப்பட்டது