திரேசு (Thrace,[1], பண்டைக் கிரேக்கம்Θρᾴκη: Thráke; பல்கேரிய: Тракия; Trakiya, துருக்கியம்: Trakya) ஐரோப்பாவின் தென்கிழக்கிலுள்ள வரலாற்றுச் சிறப்புடைய புவியியற் பகுதி ஆகும். இதனைச் சூழ வடக்கில் பால்கன் மலைகளும் தெற்கில் ரோடோப் மலைகளும் ஏஜியன் கடலும், கிழக்கில் கருங்கடலும் மர்மரா கடலும் உள்ளன. இப்பகுதிகள் தற்காலத்தில் தென்கிழக்கு பல்காரியா, வடகிழக்கு கிரேக்கம், மற்றும் துருக்கியின் ஐரோப்பிய நிலப்பகுதியாக உள்ளன. இங்கிருந்த திரேசியர்கள் பண்டைக்கால இந்தோ ஐரோப்பிய மக்கள் ஆவர். திரேசியர்கள் ஐரோப்பாவின் நடு, கிழக்கு, தென்கிழக்கு பகுதிகளில் வாழ்ந்திருந்தனர்.

தற்காலத்தில் திரேசு பல்காரியா, கிரேக்க, துருக்கி நாடுகளின் அங்கமாக உள்ளது.
திரேசின் இயல்பான-புவியியல் எல்லைகள்: பால்கன் மலைத்தொடர், ரோடோப் மலைகள் மற்றும் பொசுபோரசு. ரோடோப் மலைகள் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன.
உரோமைப் பேரரசில் இருந்த திரேசு மாகாணம்

பண்டை வரலாறு

தொகு

திரேசின் மக்கள் தங்களை எவ்வாறாகவும் குறிப்பிட்டுக் கொள்ளவில்லை. இருப்பினும் இவர்களை திரேசியர்கள் என்றும் இப்பகுதியை திரேசு என்றும் கிரேக்கர்களே பெயரிட்டனர்.[2] திரேசியர்கள் பல பழங்குடி குழுக்களாக பிரிந்திருந்தனர். திரேசிய வீரர்கள் பெர்சிய படையில் பயன்படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது. அடுத்திருந்த நாட்டு அரசர் அலெக்சாந்தரின் படையில் பங்கேற்று தார்தனெல்சு நீரிணையைக் கடந்து பாரசீகப் பேரரசுடன் போரிட்டனர்.

திரேசியர்கள் பலவாறாகப் பிரிந்திருந்தமையால் ஓர் அரசியலமைப்பைக் கொண்டிருக்கவில்லை. மலை மக்களாகிய திரேசியர்கள் இயல்பான போர்வீரர்களாக இருந்தனர். சமவெளிப் பகுதிகளில் வாழ்ந்திருந்த திரேசியக் குழுக்கள் அமைதியை விரும்பினர்.

அலெக்சாந்தர் திரேசைக் கைப்பற்றியிருந்தார். பின்னர் இது விடுதலை பெற்றது. பல முயற்சிகளுக்குப் பிறகு மீண்டும் பொ.யு 46இல் குளோடியசு காலத்தில் உரோமானியர்களால் கைப்பற்றப்பட்டனர். உரோமானியர் ஆட்சியில் இது மாகாணமாகவும், பின்னர் நான்கு மாநிலங்களாகவும் பிரிக்கப்பட்டது. இறுதியில், பேரரசு அழிபட்டநிலையில் ஆயிரமாண்டுகளுக்கு சண்டைகளையும் ஆக்கிரமிப்புகளையும் திரேசு எதிர்கொண்டது. இதன் பின்னர் திரேசு என்றுமே தன்னாட்சி பெற்றதில்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. கிரேக்க மொழி: Θράκη, Thráki; துருக்கியம்: Trakya
  2. John Boardman, I.E.S. Edwards, E. Sollberger, and N.G.L. Hammond. 1992. The Cambridge Ancient History, vol 3, part 2: The Assyrian and Babylonian Empires and other states of the Near East, from the eighth to the sixth centuries BC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-22717-8 page 597: "We have no way of knowing what the Thracians called themselves and if indeed they had a common name...Thus the name of Thracians and that of their country were given by the Greeks to a group of tribes occupying the territory..."
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரேசு&oldid=2785807" இலிருந்து மீள்விக்கப்பட்டது