முதன்மை பட்டியைத் திறக்கவும்
கிபி 600-இல் அரேபியா
அரேபியாவில் குறைசி மக்கள் வாழ்ந்த செங்கடலை ஒட்டிய ஹெஜாஸ் பிரதேசத்தின் (பச்சை நிறம்) ஜித்தா, மக்கா, மதீனா, தபூக் மற்றும் யாம்பு நகரங்கள்

குறைசி மக்கள் (Quraysh) (அரபு மொழி: قريش) அரேபிய தீபகற்பத்தில் குறிப்பாக செங்கடலை ஒட்டிய ஹெஜாஸ் பகுதிகளில் வாழ்ந்த அராபிய வணிக குலத்தினர் ஆவார். குறைசி இனக்குழுவின் பானு ஹசிம் (Banu Hashim) குலத்தில் முகமது நபி பிறந்தார்.[1][2]

இசுலாம் தோன்றுவதற்கு முன்னிருந்தே மெக்கா நகரம் மற்றும் அதனுள் அமைந்த காபா வழிபாட்டுத் தலம் குறைசி இன மக்களின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து இருந்தது.

குறைசி இனக்குழுவினர், கிபி 630-இல் இசுலாமில் சேரும் வரை, முகமது நபியையும், அவரது தோழர்களையும் கடுமையாக எதிர்த்தனர். முகமது நபிக்குப் பின்னர், குறைசி இன மக்களே ஒட்டுமொத்த இசுலாமியர்களின் கலீபாக்களாக இருந்தனர். அவைகள்: ராசிதீன் கலீபகம், (அபூபக்கர்), (உதுமான்) (661 – 750), உமையா கலீபகம் (முதலாம் முஆவியா) (661 – 750) மற்றும் அப்பாசியக் கலீபகம் (750–1258 & 1261–1517).

பொருளடக்கம்

வரலாறுதொகு

பதுருப் போர்தொகு

முதன்மைக் கட்டுரை: பதுருப் போர்

அரேபிய தீபகற்பத்தின் ஹெஜாஸ் பகுதியில் வாழும் குறைசிய இன மக்கள் இசுலாமை கடுமையாக எதிர்த்தனர். 17 மார்ச் 624 அன்று முகமது நபி தலைமையிலான இசுலாமியப் படைகளுக்கும், குறைசி படைகளுக்கும் பத்ரு எனுமிடத்தில் நடைபெற்ற போரில் குறைசி படையினர் தோற்றனர்.

மக்காவை குறைசியர்கள் இழத்தல்தொகு

முதன்மைக் கட்டுரை: மக்கா வெற்றி

முகமது நபி, 11 திசம்பர் 629 அன்று குறைசி இனத்தவர்களுக்கு எதிரான போரில் வெற்றி கொண்டு மக்காவை கைப்பற்றினார்.[3] இதன் பின்னர் குறைசிய இன மக்கள் அனைவரும் இசுலாமை ஏற்றனர்.

மேற்கோள்கள்தொகு

ஆதார நூற்பட்டியல்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறைசி_மக்கள்&oldid=2653467" இருந்து மீள்விக்கப்பட்டது