அபூபக்கர்
அபூபக்கர் (ரலி) அப்துல்லாஹ் இப்னு அபூ குஹாஃபா (Abu Bakr Abdullah ibn Abi Quhafa) அல்லது Abū Bakr as-Șiddīq, அரபு: أبو بكر الصديق) அபூபக்ரு அஸ்-ஸித்தீக் என்ற புனைப்பெயரால் பொதுவாக அறியப்படுகிறார்[1]. முதன் முதலாக இஸ்லாம் சமயத்தை (மார்க்கத்தை ) தழுவியவர்களில் ஒருவராவார். மிகச்சிறந்த ஒழுக்கசீலரான இவர் முகம்மது நபியவர்களின் மரணத்திற்குப் பின்னர் முதல் கலிபாவாக பதவி வகித்தார்[2].[3]. இவர் காலத்தில் இஸ்லாமிய சமயம் அரேபிய நாட்டையும் தாண்டி பரவியது.
அபூபக்கர் أَبُو بَكْر | |||||
---|---|---|---|---|---|
Khalifat Rasul Allah Raḍiya Ilāhu ʿAnhū | |||||
![]() இசுதான்புல்லின் ஹேகியா சோபியாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அபூபக்கரின் பெயர் பொறிக்கப்பட்ட கையெழுத்து முத்திரை. | |||||
ராசிதீன் கலீபாவின் 1வது கலீபா | |||||
ஆட்சிக்காலம் | 8 ஜூன் 632 – 23 ஆகஸ்ட் 634 | ||||
முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது (முகம்மது நபி இஸ்லாமிய தீர்க்கதரிசியாக) | ||||
பின்னையவர் | உமறு இப்னு அல்-கத்தாப் | ||||
பிறப்பு | அப்துல்லாஹ் இப்னு அபீ குஹாஃபா அண். 573 மக்கா, ஹெஜாஸ், அரேபியா | ||||
இறப்பு | 23 ஆகத்து 63422 ஜும்தா அல்- தானி 13 ஹிஜ்ரி வருடம்) மதீனா, ஹெஜாஸ், ராசிதீன் கலீபாக்கள் | (அகவை 60)
(||||
புதைத்த இடம் | அல்-மஸ்ஜித் அந்-நபவி, மதீனா | ||||
துணைவர் |
| ||||
குழந்தைகளின் பெயர்கள் |
| ||||
| |||||
தந்தை | அபு குஹாஃபா | ||||
தாய் | உம் மல்-கைர் | ||||
சகோதரர்கள் | |||||
Sisters |
| ||||
பழங்குடியினம் | குறைசி மக்கள் (பானு தைம்) | ||||
மதம் | இசுலாம் | ||||
தொழில் | தொழிலதிபர், பொது நிர்வாகி, பொருளாதார நிபுணர் |
இளமை
தொகுஅபூகுஹாஃபா என்ற உஸ்மானுக்கும் சல்மா என்ற உம்முல் கைர் என்பவருக்கும் மகனாக அபூபக்கர் (ரலி) அவர்கள் மக்காவில் பிறந்தார்கள். அபூபக்கர் என்பது அவர்களின் புனைப் பெயராகும். இவர்களுக்கு பெற்றோர் வைத்த பெயர் அப்துல்லாஹ். [4]
நபி (ஸல்) அவர்கள் இறைச் செய்தியை மக்களுக்கு எடுத்துச் சொல்லிய போது வேறு எவரும் உண்மைப்படுத்தாத அளவிற்கு நபி (ஸல்) அவர்களை அதிகம் உண்மைப்படுத்தியதால் சித்தீக் (அதிகம் உண்மைப்படுத்துபவர்) என்ற புனைப் பெயரும் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு வழங்கப்பட்டது.
மனைவியர்
தொகுஅபூபக்கர் (ரலி) அவர்களுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். அவர்கள்:
- 1.அப்துல் உஸ்ஸாவின் மகள் கதீலா
- 2.ஆமிருடைய மகள் உம்மு ரூமான்
- 3.உமைஸுடைய மகள் அஸ்மா
- 4.ஹாரீஜாவுடைய மகள் ஹபீபா
- 3.உமைஸுடைய மகள் அஸ்மா
- 2.ஆமிருடைய மகள் உம்மு ரூமான்
இவர்களில் கதீலாவைத் தவிர்த்து ஏனைய மூவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். கதீலா இஸ்லாத்தை ஏற்றாரா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
குழந்தைகள்
தொகுஇந்நால்வரின் மூலம் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகளும், மூன்று பெண் குழந்தைகளும் என மொத்தம் ஆறு குழந்தைகள் பிறந்தன. அவர்கள் அப்துல்லாஹ் இப்னு அபூபக்கர் (ரலி), அப்துர் ரஹ்மான்(ரலி), முஹம்மத், ஆயிஷா பின்த் அபூபக்கர் (ரலி), அஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி), உம்மு குல்சூம் பின்த் அபூபக்கர் (ரலி) ஆகியோராவர். இவர்கள் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவினார்கள்.
சந்தித்த போர்கள்
தொகுமுகம்மது நபியின் காலத்தில் இவர் உஹத் போர், அகழ்ப்போர், பனூ குரைஜா போர், கைபர் போர், ஹூனைன் போர், தாயிப் முற்றுகை, மக்கா வெற்றி போன்ற போர்களில் போரிட்டதோடு அதற்காக தமது செல்வத்தையும் வாரி வழங்கினார். இவர் காலத்தில் இசுலாமிய சமயம் அரேபியநாட்டையும் தாண்டிப் பரவியது.
ஆட்சிக்காலம்
தொகுஇவர் கிபி 632 முதல் கிபி 634 வரை இரண்டு ஆண்டு காலம் ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக்காலத்தில் பைசாந்தியப் பேரரசு முறியடிக்கப்பட்டது. அரசியல் மற்றும் நிர்வாகங்கள் சீரமைக்கப்பட்டது. மேலும் ஆங்காங்கே தோன்றிய பொய்தூதர்களும் முறியடிக்கப்பட்டனர்.
மேலும் முகம்மது நபியின் ஹதீஸ்கள் தொகுக்கும் பணியும் இவரது ஆட்சிக்காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. கிபி 634-ம் ஆண்டு மரணமடைந்த இவர், தனக்குப்பிறகு உமரை அடுத்த கலிபாவாக நியமித்தார்.
குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ [1], from islam4theworld
- ↑ Ahmad, Abdul Basit, 2001, "Abu Bakr Siddiq : The First Caliph of Islam , DS Publications பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9960-86114-7
- ↑ [2], from Encyclopædia Britannica
- ↑ அல்இஸாபா பாகம் : 2 பக்கம் : 1088
நூல் ஆதாரங்கள்
தொகு- Fitzpatrick, Coeli; Walker, Adam Hani (2014). Muhammad in History, Thought, and Culture - An Encyclopedia of the Prophet of God. Bloomsbury Publishing. ISBN 9781610691789.
- Walker, Adam, Abu Bakr al-Siddiq, in Muhammad in History, Thought, and Culture - An Encyclopedia of the Prophet of God (2 vols.), edited by C. Fitzpatrick and A. Walker, Santa Barbara, ABC-Clio, 2014.
- Rogerson, Barnaby (4 November 2010), The Heirs of the Prophet Muhammad - And the Roots of the Sunni-Shia Schism, Little, Brown Book Group, ISBN 978-0-74-812470-1
- Rogerson, Barnaby (2008), The Heirs of Muhammad - Islam's First Century and the Origins of the Sunni-Shia Split, Overlook, ISBN 978-1-59-020022-3
- Madelung, Wilferd (15 October 1998), The Succession to Muhammad - A Study of the Early Caliphate, கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம், ISBN 978-0-52-164696-3
- Huthayfa, Abu (2013), Abu Bakr - The First Caliph, Al Qasim, ISBN 9780958172035
- Hathaway, Jane (2015). "Amīr al-ḥajj". The Encyclopedia of Islam, THREE. BRILL Online.
- Abū Bakr Muslim caliph, in Encyclopædia Britannica Online, by The Editors of Encyclopædia Britannica, Yamini Chauhan, Aakanksha Gaur, Gloria Lotha, Noah Tesch and Amy Tikkanen
- "Al-Saḳīfa". Encyclopaedia of Islam (Second). (2022). Brill Reference Online.