உருசிய மரபுவழித் திருச்சபை
உருசிய மரபுவழித் திருச்சபை (Russian Orthodox Church [ROC]; உருசியம்: Ру́сская правосла́вная це́рковь, ஒ.பெ Rússkaya Pravoslávnaya Tsérkov), மாஸ்கோ திருச்சபை உறைவிடம் எனவும் சட்டப்படி மாற்றீடாக அறியப்படும் (Moscow Patriarchate; உருசியம்: Моско́вский Патриарха́т, ஒ.பெ Moskóvskiy Patriarkhát),[4] என்பது தானே தலைமை வகிக்கும் கிழக்கு மரபுவழி திருச்சபைகளில் ஒன்றும் ஏனைய கிழக்கு மரபுவழி திருச்சபைகளுடன் முழு உறவு ஒன்றிப்பு கொண்டுள்ள திருச்சபை ஆகும்.
உருசிய மரபுவழித் திருச்சபை (மாஸ்கோ திருச்சபை உறைவிடம்) | |
---|---|
நிறுவனர் | அந்திரேயா, பெரிய விளாடிமிர் (988)[1] |
தற்சார்பு | 1448, மாஸ்கோ பகுதியில் நடைமுறை (de facto)[2] |
அங்கீகாரம் | 1589, கிறித்தவ ஒற்றுமை |
முதன்மை | முதலாம் கிரில், மாஸ்கோ திருச்சபை உறைவிடம் |
தலைமையகம் | டனிலோ மடாலயம், மாஸ்கோ, உருசியா |
மொழி | திருச்சபை இசுலோவோனிக் |
அங்கத்தினர் | உலகளவில் 150,000,000 பேர் பின்பற்றுகிறார்கள் (2011)[3] |
ஆயர்கள் | 368 |
குருக்கள் | 29,324 |
பங்குகள் | 30,675 |
துறவிகள் மடம் | 805 |
இணையததளம் | www.patriarchia.ru |
உருசிய மரபுவழித் திருச்சபை தற்போது சியார்சியா, ஆர்மீனியா நீங்கலான முன்னைய சோவியத் ஒன்றியத்தில் நீண்ட காலமாக இருந்தவர்களினதும், அவர்களின் இனப் பின்புலத்தை கருத்திற் கொள்ளாது, மரபுவழிக் கிறித்தவர்கள் மீது அதன் பிரத்தியேக அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. ஆயினும், இந்நிலைப்பாடு எசுத்தோனியா, மல்தோவா போன்ற நாடுகள் மட்டில் சர்ச்சைக்குரியதும், அதன் விளைவாக மரபுவழித் திருச்சபையின் அதிகார வரம்புகள் எசுத்தோனியா அப்போஸ்தலிக்க மரபுவழித் திருச்சபை, பெஸ்சரேபியவின் குருக்களின் தலைமைப்பீடம் ஆகியவற்றில் சமாந்தரமாகக் காணப்படுகின்றது. இது சீன மக்கள் குடியரசில் உள்ள மரபுவழிக் கிறித்தவர்கள், சப்பானிய மரபுவழித் திருச்சபை என்பனவற்றின் மீது சமய அதிகார உரிமையைச் செலுத்துகிறது. பெலருஸ், எசுத்தோனியா, லாத்வியா, மல்தோவா, உக்ரைன் ஆகியவற்றிலுள்ள உருசிய மரபுவழித் திருச்சபைக் கிளைகள் 1990 முதல் பல்வேறு அளவிலான சுய ஆட்சியைக் கொண்டுள்ளன.
உருசிய மரபுவழித் திருச்சபையும் அமெரிக்காவிலுள்ள மரபுவழித் திருச்சபையும் ஒன்றாகக் கருத முடியாது. உருசிய மறைபரப்புனர்கள் அலாஸ்காவில் (உருசியப் பேரரசின் பகுதியாக இருந்தபோது) 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சேவையாற்றியபோது வட அமெரிக்காவில் அமெரிக்காவிலுள்ள மரபுவழித் திருச்சபை இருந்தது.
அதேபோல், ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை தலைமையகமாகக் கொண்ட உருசியாவிற்கு வெளியேயுள்ள உருசிய மரபுவழித் திருச்சபையும் (வெளிநாட்டு உருசிய மரபுவழித் திருச்சபை எனவும் அழைக்கப்படுகிறது) உருசிய மரபுவழித் திருச்சபையும் ஒன்றாகக் கருத முடியாது. மாஸ்கோ திருச்சபை உறைவிடத்தை பொதுவுடமைவாத உருசியா அங்கிகரிக்க மறுத்த காரணத்தினால், வெளியே இருந்த உருசிய சமுகத்தினர்களால் 1920 களில் உருசியாவிற்கு வெளியேயுள்ள உருசிய மரபுவழித் திருச்சபை நிறுவப்பட்டது. இரண்டு திருச்சபைகளும் மே 17, 2007 அன்று அங்கீகரிக்கப்பட்டன. தற்போது, உருசியாவிற்கு வெளியேயுள்ள உருசிய மரபுவழித் திருச்சபை சுய ஆட்சியுள்ளதாகவுள்ளது.
வரவாறு
தொகுகீவ்வன் காலம்
தொகுஇப்போது உருசிய மரபுவழித் திருச்சபை என வளர்ந்துள்ள கிறித்தவ சமூகம், கருங்கடலின் வடக்கு கரையையொட்டிய கிரேக்க குடியேற்றங்கள், சீத்தியா (மத்திய ஐரோவாசியா பகுதிகள்) ஆகிய பகுதிகளுக்கு சென்றதாக நம்பப்படும் திருத்தூதர் அந்திரேயாவினால் நிறுவப்பட்டதாக பாரம்பரியமாக கூறப்பட்டு வருகிறது. பாரம்பரியக் கதை ஒன்றின்படி, கீவ்வின் மேலதிக பகுதி வரைக்கும் சென்று பாரிய கிறித்தவ நகரத்தின் உருவாக்கம் பற்றி முன்னறிவித்தார் என்று சொல்லப்படுகிறது.[5][6] கீவ்விலுள்ள புனித அந்திரேயா பேராலயம் அமைந்துள்ள இடத்தில்தான் அவர் சிலுவையில் அறையப்பட்டார் எனப்படுகிறது.
கி.பி முதலாம் நூற்றாண்டின் இறுதியில், கிழக்கு சிலாவிக் நிலங்கள் பைசாந்தியப் பேரரசின் கலாச்சார செல்வாக்கின் கீழ் வந்தது. 863–869 இல், பைசாந்தியத் துறவிகளும் கிரேக்க மசிதோனியாவிலிருந்தவர்களுமான புனித சிறிலும் புனித மெதோடியசும், முதன்முறையாக விவிலியத்தின் பகுதிகளை பண்டைய மசிதோனிய மொழிக்கு மொழிபெயர்த்தனர். இது கிழக்கு ஐரோப்பா, பால்கன் குடா, தென் உருசிய சிலாவிக் மக்களின் கிறித்தவ மயமாக்கலுக்கு பங்களிப்புச் செய்தது. முதலாவது கிறித்தவ ஆயர் கொண்தாந்திநோபிளிலிருந்து நொவ்கொரொட்டுக்கு இறைமுதுவர் போத்தியுஸ் அல்லது இறைமுதுவர் இக்னாட்டியஸ் மூலம் கி.பி. 866-867 காலப்பகுதியில் அனுப்பப்பட்டார்.
10 ஆம் நூற்றாண்டின் மத்தியில் கிறித்தவ சமூகம் கிவ் மக்களிடம் பைசாந்திய கிரேக்க குருக்களின் தலைமையின் கீழ் இருந்தபோது அஞ்ஞானி மதம் அப்பகுதிகளில் செல்வாக்குச் செலுத்தியது. முதலாவது கிவ்வின் ஆட்சியாளர் ஒல்கா 945 அல்லது 957 காலப்பகுதியில் கிறித்தவத்திற்கு மாறினார். அவருடைய பேரன் பெரிய விளாடிமிர் கீவ்வியன் ரூசை கிறித்தவ நாடாக மாற்றினார்.
இதன் விளைவாக கீவ்வின் முதலாம் விளாடிமிர் பைசாந்திய கிரேக்க முறை கிறித்தவத்தை அலுவலக ரீதியாக 988 இல் உள்வாங்கினார். இதுவே உத்தியோகபூர்வ உருசிய மரபுவழித் திருச்சபையின் பிறந்த நாளாகக் கருதப்படுகிறது. 1988 இல் திருச்சபை இதன் மில்லேனிய விழாவைக் கொண்டாடியது.
உசாத்துணை
தொகு- ↑ "Vladimir I – Russiapedia History and mythology Prominent Russians". பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச்சு 2015.
- ↑ "Primacy and Synodality from an Orthodox Perspective". பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச்சு 2015.
- ↑ Русская церковь объединяет свыше 150 млн. верующих в более чем 60 странах - митрополит Иларион Interfax.ru 2 மார்ச்சு 2011
- ↑ "I. Общие положения - Русская Православная Церковь". Archived from the original on 2015-06-26. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச்சு 2015.
- ↑ Damick, Andrew S. "Life of the Apostle Andrew". Chrysostom. Archived from the original on 2007-07-27. பார்க்கப்பட்ட நாள் 2007-06-25.
- ↑ Voronov, Theodore (2001-10-13). "The Baptism of Russia and Its Significance for Today". Orthodox. Clara. Archived from the original on 2007-04-18. பார்க்கப்பட்ட நாள் 2007-06-25.
வெளி இணைப்புகள்
தொகு- Russian Orthodox Church official website
- யூடியூபில் உருசிய மரபுவழித் திருச்சபை காணொளி
- Department for External Church Relations of the Russian Orthodox Church official website, in English
- Russian Orthodox Church Outside Russia official website
- Orthodox Church in America official website
- உருசிய மரபுவழித் திருச்சபை மூலங்கள்