சிலாவிக் மக்கள்

இசுலாவியர் (Slavic people) அல்லது சிலாவிக் என்னும் மக்கள் கிழக்கு ஐரோப்பாவில் வாழும் இந்திய-ஐரோப்பிய குடும்ப மொழிகள் சிலவற்றைப் பேசும் இனத்தினர். கிபி 6 ஆம் நூற்றாண்டில் இருந்து தங்கள் தாயகமாகிய கிழக்கு ஐரோப்பாவில் இருந்து கிழக்கு, நடு ஐரோப்பாவிலும் பால்க்கன் பகுதிகளுக்குப் பரவத் தொடங்கினர்[1]. பின்னர் பலரும் சைபீரியாவிலும்[2] நடு ஆசியாவிலும் குடியேறினர்[3].

இசுலாவிய இன மக்கள் பெரும்பான்மையாகவும் இசுலாவிய மொழி நாட்டு மொழியாகவும் உள்ள நாடுகள்

இசுலாவியர் வாழிடத்தைப் பொருத்து கீழ்க்காணுமாறு பகுப்பர்:

  • மேற்கு இசுலாவியர் (இவர்களுள் அடங்குவர்: செக் மக்கள், போலந்தியர், கசூபியர் (Kashubians), மொராவியர், இசுலோவாக்கியர் (Slovaks), இசைலேசியர் (Silesians), இசோர்பர் (Sorbs)),
  • கிழக்கு இசுலாவியர் (இவர்களுள் அடங்குவர் பெலாரூசியர், உருசியர், யுக்ரேனியர், உரூசினியர் (Rusyns)
  • தெற்கு இசுலாவியர் (இவர்களுள் அடங்குவர்: பாசினியர், பல்கேரியர், குரோட் மக்கள், மாசிடோனியர், மான்ட்டெனேகிரியர், செர்பியர், இசுலோவேனியர்)

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. "Geography and ethnic geography of the Balkans to 1500". Archived from the original on 2008-05-09. பார்க்கப்பட்ட நாள் 2009-06-30.
  2. "Russia — Coming In From the Cold?". Archived from the original on 2011-07-15. பார்க்கப்பட்ட நாள் 2009-06-30.
  3. Russians left behind in Central Asia
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலாவிக்_மக்கள்&oldid=3554242" இலிருந்து மீள்விக்கப்பட்டது