பால்கன் குடா
பால்கன் குடா அல்லது பால்கன் தீபகற்பம் (Balkan Penninsula) ஐரோப்பாவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு குடா பகுதி. புவியியல் வரையறையில் பால்கன் குடாவென்றும் புவி அரசியல், பண்பாட்டு வரையறையில் பால்கன் பகுதிகள் (The Balkans) என்றும் இப்பகுதி வழங்கப்படுகிறது. இப்பகுதி தென்கிழக்கு ஐரோப்பா என்றும் வழங்கப்படுகிறது. இது தெற்கு ஐரோப்பாவின் அங்கமாகும். பல்கேரியா நாட்டிலிருந்து செர்பியா நாடுவரை பரவி காணப்படும் பால்கன் மலைத்தொடரின் பெயரே இதற்கும் வழங்கப்படலாயிற்று. “பால்கன்” என்ற சொல்லுக்கு துருக்கி மொழியில் காடுகள் சூழந்த மலைத்தொடர் என்று பொருள். பண்டைய கிரேக்கத்தில் இப்பகுதி ஹீமஸ் குடா என்று அழைக்கப்பட்டது. பால்கன் பகுதியின் புவியியல் எல்லைகள்: தெற்கில் மத்திய தரைக்கடல், தென் கிழக்கில் ஏஜியன் கடல், வட கிழக்கில் கருங்கடல், வட மேற்கில் ஏட்ரியாட்டிக் கடல், தென்மேற்கில் அயோனியன் கடல், வடக்கில் சோக்கா-கிருக்கா ஆறு-சாவா ஆறு
இப்பகுதியிலுள்ள நாடுகள்:
- அல்பேனியா
- பொசுனியா எர்செகோவினா
- பல்கேரியா
- குரோவாசியா (சவா நகருக்கும் குபா அற்றுக்கும் கீழான பகுதி)
- கிரேக்க நாடு
- மொண்டெனேகுரோ
- செர்பியா (சவா நகருக்கும் டானுபே அற்றுக்கும் கீழான பகுதி)
- மாக்கடோனியக் குடியரசு
- துருக்கி (3% நிலப்பரப்பு மட்டும். ஏனைய பகுதிகள் ஆசியாவில் உள்ளன)[1][2][3]
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Gray, Colin S.; Sloan, Geoffrey (2014). Geopolitics, Geography and Strategy. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781135265021. பார்க்கப்பட்ட நாள் 10 November 2014.
- ↑ "Balkans". Encyclopædia Britannica.
- ↑ Richard T. Schaefer (2008). Encyclopedia of Race, Ethnicity, and Society. Sage. p. 129. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4129-2694-2.