கிழக்கு மரபுவழி திருச்சபை

கிழக்கு மரபுவழித் திருச்சபை அல்லது மரபு வழுவா கீழைத் திருச்சபை (Eastern Orthodox Church) உலகில் இரண்டாவது பெரிய கிறிஸ்தவ சபையாகும். இச்சபையினர் இயேசுவாலும் அப்போஸ்தலர்களாலும் நிறுவப்பட்ட திருச்சபையின் உண்மையான தொடர்ச்சியாகத் தம்மைக் கருதுகின்றனர். இச்சபையில் ஆரம்பத்தில் இயற்றப்பட்ட சமயக் கோட்பாடுகளில் மாற்றங்கள் ஏற்கப்படுவதில்லை. இச்சமயக்கோட்பாடுகள் கி.பி. 4 தொடக்கம் 8 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற 7 புனித சங்கங்களில் இயற்றப்பட்டவையாகும். கத்தோலிக்க, ஒரியண்டல் திருச்சபைகள் இச்சபையிலிருந்து வெளியேறிய பகுதிகளாக கொள்ளப்படுகிறன. நாட்டுக்கு நாடு பிரிந்து காணப்பட்டாலும் (இரசிய கிழக்கு மரபுவழி திருச்சபை, சேர்பிய கிழக்கு மரபுவழி திருச்சபை...) அதிகாரபூர்வமாக நைசின் விசுவாச அறிக்கையின் படி தம்மை "ஒரே கத்தோலிக்க அப்போஸ்தலிக திருச்சபை" என அழைத்துக் கொள்கிறது. இச்சபைக்கு தனித் தலைவர் கிடையாது, மாறாக இது இன மற்றும் நாட்டு எல்லைகளை கருத்திற் கொண்டு அதிகார அலகுகளாகப் பிரிக்கப்பட்டுக் காணப்படுகிறது. ஒவ்வெரு அலகும் சினோட் எனப்படும் ஆயர்கள் சபையால் நிர்வகிக்கப்படுகிறது. சினோட்டில் எல்லா ஆயர்களும் சம அதிகாரம் கொண்டவர்களாகக் காணப்படுவதோடு மற்றைய ஆயரது அதிகாரங்களில் தலையிடுவதில்லை. மேலும் எப்போதாவது புனித சங்கமொன்றை கூட்ட வேண்டிய தேவை ஏற்பட்டால் கொன்சாந்தினோபிலின் ஆயர் "சமமானவரிடையே முதலாமவர்" என்ற பதவியை கொண்டிருப்பார்.(அதாவது புனித சங்கத்தில் தலைமைப் பதவியைக் கொண்டிருப்பார்)[1][2][3]

குறிப்புகள்

தொகு

பிறமொழிப் பெயர்களின் பட்டியல்

தொகு

இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆங்கிலப் பெயர்களின் பட்டியல். தமிழ் எழுத்துப்பெயர்ப்புகள் வெவ்வேறு விதமாக செய்யப்படலாம் என்பதைக் கருத்தில் கொள்க.

ஆங்கில பெயர் தமிழாக்கம்
Constantinople கான்ஸ்டாண்டிநோபுள்
Apostles அப்போஸ்தலர் அல்லது திருத்தூதர்

வெளி இணைப்புகள்

தொகு


மேற்கோள்கள்

தொகு
  1. "Eastern Orthodoxy – Worship and sacraments". Encyclopedia Britannica. பார்க்கப்பட்ட நாள் 13 April 2020.
  2. Fiske, Edward B. (3 July 1970). "Greek Orthodox Vote to Use Vernacular in Liturgy". The New York Times. https://www.nytimes.com/1970/07/03/archives/greek-orthodox-vote-to-use-vernacular-in-liturgy-greek-orthodox.html. 
  3. "Liturgy and archaic language | David T. Koyzis". First Things. 27 October 2009. பார்க்கப்பட்ட நாள் 13 April 2020.