முழு உறவு ஒன்றிப்பு

முழு உறவு ஒன்றிப்பு அல்லது முழுமையான ஒன்றியம் (full communion) என்பது கிறித்தவ இறையியலில் பல்வேறு திருச்சபைகளும் அமைப்புக்களும் குழுக்களும் ஒருவருகொருவர் மிகத்தேவையான கோட்பாடுகளை பகிரக் கொள்ளும் புரிந்துணர்வாகும்.[1][2][3]

கத்தோலிக்க, கிழக்கத்திய மரபுவழி மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகளில் ஒரே திருச்சபை அமைக்கின்ற கிறித்தவர்களிடையே மட்டுமே முழுமையான ஒன்றியம் இயலும் என நம்புகின்றன. சீர்திருத்த கிறித்தவர்களிடையே முழுமையான ஒன்றியம் என்பது தங்கள் தனித்தன்மையை முழுவதும் தக்கவைத்துக்கொண்டுள்ள பல கிறித்தவ சமயப் பிரிவுகளிடையே நிலவும் நடைமுறை ஒப்பந்தத்தை குறிக்க பயன்படும். ஒரு திருச்சபையினைச் சேர்ந்தவர் தங்களுடன் முழு உறவு ஒன்றிப்பில் உள்ள பிற திருச்சபைகளில் சென்று வழிபட அனுமதி உண்டு.

கத்தோலிக்கத் திருச்சபைதொகு

கத்தோலிக்கத் திருச்சபை முழுமையான உறவு ஒன்றிப்புக்கும் பகுதியான ஒன்றிப்புக்கும் வேறுபாடு காண்கிறது. கத்தோலிக்கத் திருச்சபையில் முழு உறவு ஒன்றிப்பு என்பது வழிபாட்டு முறைகளால் வேவ்வேறாகவோ, அல்லது ஒத்தோ இருக்கும் தனித் திருச்சபைகள் பலவும் உரோமைத் தலைமைக்குருவோடு இணைந்து செயல்படுவதைக் குறிக்கும். கத்தோலிக்க திருச்சபை சீர்திருத்தத் திருச்சபையினருடன் பகுதியான ஒன்றியம் மட்டுமே கொள்ளமுடியும் என நம்புகின்றனர். ஆயினும் இவர்களினும் மிக நெருக்கமான உறவு மரபுவழி சபைகளில் இருந்தாலும், அவையும் குறைவான உறவு ஒன்றிப்பாகவே கருதப்படுகின்றது.

மேலும் காண்கதொகு

சான்றுகோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முழு_உறவு_ஒன்றிப்பு&oldid=1793909" இருந்து மீள்விக்கப்பட்டது