அபு சயித் மிர்சா

தைமூரியப் பேரரசின் சுல்தான் (1451-1469)

அபு சயித் மிர்சா (Chagatay/பாரசீக மொழி: ابو سعید میرزا‎; 1424 – 8 பெப்ரவரி 1469) என்பவர் பதினைந்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தைமூரிய பேரரசின் ஆட்சியாளராக இருந்தவர் ஆவார்.

அபு சயித் மிர்சா

தைமூரிய அரசமரபில் முக்கியத்துவம் இல்லாத இளவரசனாக பிறந்த இவர் சீக்கிரமே போரிட்டுக் கொண்டிருந்த உறவினர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். அடுத்து வந்த இரண்டு தசாப்தங்களில் தைமூரிய பேரரசின் பெரும்பாலான பகுதிகளை மீண்டும் ஒருங்கிணைத்தார். இவரது தாத்தாவின் தம்பியாகிய ஷாருக்கின் இறப்பிற்குப் பிறகு தைமூரிய பேரரசானது சிதறுண்டு இருந்தது. எனினும் தைமூரின் ஆட்சி காலத்தின் போது இருந்தவாரே பேரரசை மீண்டும் உருவாக்கும் அபு சயித்தின் நம்பிக்கையானது நிறைவேறவில்லை.[1] இதற்கு காரணம் மேற்கு ஈரானில் ஒரு படையெடுப்பின்போது இவர் கொல்லப்பட்டதே ஆகும்.

இந்தியாவில் முகலாயப் பேரரசை தோற்றுவித்த பாபரின் தாத்தா இந்த அபு சயித் ஆவார்.

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபு_சயித்_மிர்சா&oldid=3154779" இலிருந்து மீள்விக்கப்பட்டது