மொகுலிசுதான்

சகதாயி கானரசில் இருந்து பிரிந்த ஒரு மங்கோலியக் கானரசு

மொகுலிசுதான் (முகலாயசுதான், மொகுல் கானரசு[2]) (பாரசீகம்: مغولستان) என்பது சகதாயி கானரசில் இருந்து பிரிந்த ஒரு மங்கோலியக் கானரசு ஆகும். இது நடு ஆசியா மற்றும் கிழக்கு ஆசியாவின் எல்லையில் தெங்கிரி தக்கு மலைத்தொடருக்கு வடக்கே அமைந்திருந்த ஒரு வரலாற்றுப் புவியியல் பகுதி ஆகும். இது கிழக்குச் சகதாயி கானரசு (எளிய சீனம்: 东察合台汗国; மரபுவழிச் சீனம்: 東察合台汗國; பின்யின்: தோங் சகேதை கங்குவோ) என்றும் அழைக்கப்பட்டது. இந்தக் கானரசின் பகுதிகள் தற்போது கசக்கசுத்தான், கிர்கிசுத்தான் மற்றும் சீனாவின் வடமேற்கு சிஞ்சியாங் ஆகியவற்றின் பகுதிகளாக உள்ளது. இக்கானரசு பெயரளவிற்கு மேற்குறிப்பிட்ட பகுதிகளை 14ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை ஆட்சி செய்தது. இந்தக் கானரசு சகதாயி கானரசின் தொடர்ச்சியா, ஒரு சுதந்திரமான கானரசா அல்லது சீனாவின் மிங் அரசமரபுக்குக் கப்பம் கட்டிய ஒரு கானரசா என்பதில் குழப்பம் உள்ளது.

மொகுலிசுதான்
கிழக்கு சகதாயி கானரசு
Моголистан
மொகோலிசுதான்
  • 1347–1462 (முழுவதும்)
  • 1462–1705 (மேற்கு)
  • 1462–1680s (கிழக்கு)
1490இல் மொகுலிசுதானின் (கிழக்கு சகதாயி கானரசின்) அமைவிடம்
1490இல் மொகுலிசுதானின் (கிழக்கு சகதாயி கானரசின்) அமைவிடம்
நிலைசகதாயி கானரசின் பிரிவு
தலைநகரம்அல்மலிக்
பேசப்படும் மொழிகள்
  • நடு மங்கோலியம் (ஆரம்ப காலம்) [1]
  • சகாடை
சமயம்
தெங்கிரி மதம், பிறகு சன்னி இசுலாம்
அரசாங்கம்முடியாட்சி
கான் 
• 1347–1363
துக்லுக் தைமூர்
• 1363–1368
இலியாசு கோசா
• 1429–1462
இரண்டாம் எசுன் புகா
வரலாற்று சகாப்தம்நடுக்காலத்தின் பிற்பகுதி
• மொகுலிசுதானின் உருவாக்கம்
1347
• மொகுலிசுதான் இரண்டு பகுதிகளாகப் பிரிகிறது
1462
முந்தையது
பின்னையது
சகதாயி கானரசு
குமுல் கானரசு
எர்கந்து கானரசு
துருபன் கானரசு
தற்போதைய பகுதிகள்

14ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியின் ஆரம்பத்திலிருந்து இலி ஆற்றுப்பகுதியில் சகதையின் குடும்ப உறுப்பினர் ஒருவரால் தலைமை தாங்கப்பட்ட ஒரு நாடோடிப் பழங்குடியினக் கூட்டமைப்பு வடிவிலான ஒரு புதிய கானரசு உருவானது. எனவே இது சகதாயி கானரசின் தொடர்ச்சி எனக் கருதப்பட்டது. ஆனால் இது மொகுல் கானரசு என்றும் குறிப்பிடப்பட்டது.[3]

உண்மையில் உள்ளூர் அதிகாரமானது உள்ளூர் மங்கோலிய துக்லத்துகள் அல்லது சூபி நக்சுபந்திகளால் தத்தமது பாலைவனச்சோலையில் செலுத்தப்பட்டது. சீன வர்த்தகத்தால் ஆட்சியாளர்கள் பெரும் செல்வத்தை அனுபவித்தபோதிலும், அடிக்கடி ஏற்பட்ட உள்நாட்டுப் போர், முந்தைய சகதாயி கானரசின் மேற்குப் பகுதியில் இருந்து உருவான தைமூரியப் பேரரசின் படையெடுப்புகள் ஆகியவற்றால் பாதிப்புக்கு உள்ளானது. சுதந்திர மனநிலை கொண்ட கான்கள் தங்களது சொந்த ஆட்சி அமைப்புகளை கஷ்கர் மற்றும் துருபன் போன்ற நகரங்களில் உருவாக்கினர். இறுதியாக இந்த அரசு கிர்கிசு, கசக், மற்றும் ஒயிரட்களால் வெல்லப்பட்டது. கிழக்குப் பகுதியில், 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சுங்கர் கானரசால் வெல்லப்படும் வரை எர்கந்து கானரசு தொடர்ந்து நீடித்தது.

உசாத்துணை

தொகு
  1. Григорьев А. П. (1978). Монгольская дипломатика XIII-XV вв: чингизидские жалованные грамоты. Ленинград: Изд-во Ленинградкого университета. p. 12.
  2. Kim, p. 290; n.1 discusses the various names used for this khanate. In addition, Timurid authors pejoratively called the Moghuls Jatah, or "worthless people." Elias, p. 75
  3. Kim, p. 290; n.1 discusses the various names used for this khanate. In addition, Timurid authors pejoratively called the Moghuls Jatah, or "worthless people." Elias, p. 75
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொகுலிசுதான்&oldid=3173770" இலிருந்து மீள்விக்கப்பட்டது