குவகாத்தி

அஸ்ஸாம் மாநிலத்தின் மிகப்பெரிய மாநகராட்சியும் வடகிழக்கு மாநிலங்களிலேயே மிகப்பெரிய நகரமாகும்
(கவுகாத்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குவகாத்தி (Guwahati, அசாமிய மொழி: গুৱাহাটী) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள காமரூப் மாவட்டத்தில் பெரிய நகரமாகும். பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் அமைந்துள்ள குவகாத்தி, வடகிழக்கு இந்தியாவில் மிக‌ப்பெரிய நகரமாக‌க் ‌க‌ருதப்‌ப‌டுகின்றது.[1] குவகாத்தியின் புறநகரில் இருக்கும் தேஜ்பூர் அஸ்ஸாம் மாநிலத்தின் தலைநகரமாகும். ஆனால் குவகாத்தி அசாமின் தலைநகராக சிலரால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.இருப்பினும் மாநிலத்திலேயே மிகப்பெரிய நகரம் இதுவே ஆகும். சுமார் 61 உறுப்பினர்கள் மாநகராட்சி சபைக்கு தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.

குவகாத்தி மாநகராட்சி
—  மாநகராட்சி  —
குவகாத்தி மாநகராட்சி
இருப்பிடம்: குவகாத்தி மாநகராட்சி
, அஸ்ஸாம்
அமைவிடம் 26°09′N 91°46′E / 26.15°N 91.77°E / 26.15; 91.77ஆள்கூறுகள்: 26°09′N 91°46′E / 26.15°N 91.77°E / 26.15; 91.77
நாடு  இந்தியா
மாநிலம் அஸ்ஸாம்
மாவட்டம் காம்ரூப்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
முதலமைச்சர் ஸர்பாநந்த ஸோநொவால்
மக்களவைத் தொகுதி குவகாத்தி மாநகராட்சி
மக்கள் தொகை 9,57,352 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


53 மீட்டர்கள் (174 ft)

இணையதளம் https://gmc.assam.gov.in

மக்கள்தொகை பரம்பல்தொகு

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, கவுகாதி மாநகராட்சியின் மக்கள்தொகை 9,57,352 ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 4,95,362 மற்றும் பெண்கள் 4,61,990 ஆகவுள்ளனர். சராசரி எழுத்தறிவு 94.24 % ஆகவுள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 84.74 %, இசுலாமியர்கள் 12.45 %, சமணர்கள் 0.96 %, கிறித்தவர்கள் 0.93 %, சீக்கியர்கள் 0.36 % மற்றவர்கள் 0.58% ஆகவுள்ளனர். [2]

காமாக்யா கோவில்தொகு

இங்கு நீலாச்சல் மலைகளில் உள்ள காமாக்யா கோவில் சக்தி பீடங்களில் தலைமையானதும் முக்கியமானதுமாகும். மேலும் இது வடகிழக்கு மாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற இந்துக் கோவிலாகும்.

வரலாறுதொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Guwahati
  2. Guwahati City Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவகாத்தி&oldid=3034015" இருந்து மீள்விக்கப்பட்டது