ஜெய்ப்பூர் மாநகராட்சி

இது இந்தியாவின் பெருநகர மாநகராட்சிகளுல் மிகப்பெரிய மாநகராட்சி ஆகும்

செய்ப்பூர் மாநகராட்சி அல்லது ஜெய்ப்பூர் மாநகராட்சி இந்தியாவில் மேற்கு பகுதியான ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரத்தின் மாநகராட்சி ஆகும். ஜெய்ப்பூர் மாநகராட்சியானது மாநகரத்தின் குடிமை உள்கட்டமைப்பை பராமரிப்பது மற்றும் அதனுடன் தொடர்புடைய நிர்வாகக் கடமைகளைச் செய்வதற்கு பொறுப்பாகும். மாநகராட்சி மேயர் தலைமையில் உள்ளது. 250 வார்டுகள் உள்ளன மற்றும் ஒவ்வொரு வார்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரால் குறிப்பிடப்படுகின்றன. ஜெய்ப்பூர் மேம்பாட்டு ஆணையம் (ஜேடிஏ) ஜெய்ப்பூரின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுக்கு பொறுப்பான அரசு நிறுவனமாகும். ஜெய்ப்பூர் மாநகரமானது ஜெய்ப்பூர் மற்றும் ஜெய்ப்பூர் ரூரல் ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

Jaipur Municipal Corporation ஜெய்ப்பூர் பெருநகர மாநகராட்சி जयपुर नगर निगम
வகை
வகை
Local Authority
(Jaipur)
வரலாறு
தோற்றுவிப்பு1888[1]
தலைமை
Mayor of Jaipur (Greater)
Saumya Gurjar
10 November 2020 முதல்
Mayor of Jaipur (Heritage)
Munesh Gurjar since 10 November 2020
கட்டமைப்பு
உறுப்பினர்கள்250
அரசியல் குழுக்கள்
BJP
INC
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
2020
வலைத்தளம்
http://jaipurmc.org/

ஜெய்ப்பூர் மாநகராட்சி தொகு

ஜெய்ப்பூர் பெருநகர மாநகராட்சியைப் பற்றியத் தகவல்கள்
பரப்பளவு
467 ச. கிமீ
மக்கள் தொகை
2011 கணக்கெடுப்பின்படி 30,46,189
மாநகராட்சி மண்டலங்கள்
கிழக்கு மண்டலம் மேற்கு மண்டலம் தெற்கு மண்டலம் வடக்கு மண்டலம்
மாநகராட்சி வட்டங்கள்
250 வட்டங்கள்
இம்மன்றத்திற்காக அமைக்கபெற்ற நிலைக்குழுக்கள்
வரி மற்றும் நிதிக் குழு
பணிக்குழு
திட்டக் குழு
நல்வாழ்வுக் குழு
கல்விக் குழு
கணக்கிடுதல் குழு

மாநகராட்சி உறுப்பினர்கள் தொகு

தற்பொழுதய ஜெய்ப்பூர் பெருநகர மாநகராட்சி செயலாட்சியர்கள் மற்றும் உறுப்பினர்கள்
ஆணையர் மேயர் துணை மேயர் மாநகராட்சி உறுப்பினர்கள்
ஶ்ரீ யாக்யா மித்ரா சீல் தாபாய் பிரஜேஷ் குமார் 250

மக்கள் தொகை தொகு

2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஜெய்ப்பூர் நகரத்தின் மக்கள் தொகை 30,46,163 ஆகும். அதில் ஆண்கள் 16,03,125 ஆகவும்; பெண்கள் 14,43,038 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 3,87,354 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 900 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 83.33 % ஆகவுள்ளது.

மொத்த மக்கள் தொகையில் இந்து சமயத்தவர்கள் 23,73,384 (77.91%) ஆகவும்; இசுலாமியர்கள் 5,67,521 (18.63%) ஆகவும்; சமணர்கள் 71,846 (2.36%) ஆகவும்; சீக்கியர்கள் 17,787 (0.58%) ஆகவும்; கிறித்தவர்கள் 11,076 (0.36%) ஆகவும்; மற்றவர்கள் 15,649 (0.15%) ஆகவும் உள்ளனர். [2]

இந்நகரத்தில் இந்தி, ஆங்கிலம் மற்றும் வட்டார மொழிகள் பேசப்படுகிறது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "History of JMC" (PDF). jaipurmc.org. Archived from the original (PDF) on 2015-06-08. பார்க்கப்பட்ட நாள் 2015-08-24.
  2. Jaipur City Census 2011 data
  3. https://www.go.ogle.com/url?sa=t&source=web&rct=j&url=http://jaipurmc.org/&ved=2ahUKEwiM1qLah5_yAhXab30KHfTcALUQFnoECA8QAg&usg=AOvVaw0LRbfVtpEuXwIv_aMSueRo[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்ப்பூர்_மாநகராட்சி&oldid=3584816" இலிருந்து மீள்விக்கப்பட்டது