வெற்றிலை
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
வெற்றிலை Betel | |
---|---|
![]() | |
வெற்றிலை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | மெய்யிருவித்திலையி |
வரிசை: | மிளகு வரிசை |
குடும்பம்: | மிளகுக் குடும்பம் |
பேரினம்: | Piper |
இனம்: | P. betle |
இருசொற் பெயரீடு | |
Piper betle லி. |
வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். இது மலேசியாவில் தோன்றியதாகும். இச்செடி இந்தியா, இந்தோனேசியா ஆகிய பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. வயிற்றுக் கோளாறு நீக்க, கோழை இளக, ஜீரண சக்தி அதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது. தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், தேனி மாவட்டத்தில் சின்னமனூர்,கூடலூர் காவேரிக்கரையில் நாமக்கல் மாவட்டத்தில் பாண்டமங்கலம் வேலுர் மற்றும் பொத்தனுர் பகுதியிலும், கருர் மாவட்டம் புகழுர் பகுதியிலும், திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் பகுதியிலும் பணப்பயிராகப் பயிரிடப்படுகிறது. மதுரை அருகே சோழவந்தானில் பயிரிடப்படும் வெற்றிலைகளுக்கு நல்ல வரவேற்பு உண்டு. இப்பகுதிகளிலிருந்து வடமாநிலங்களுக்கு வியாபாரத்திற்காக பொதி ஊர்திகளிலும், தொடர் வண்டிகளிலும் அனுப்பி வைக்கப்படுகிறது.
பொதுவாக வெற்றிலையுடன் பாக்கு சேர்த்து மெல்வது ஒரு வழக்கம்.
கும்பகோணம் வெற்றிலை தொகு
- தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் கும்கோணத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள அய்யம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை, சுவாமிமலை, ஆவூர், திருவையாறு ஆகிய ஊர்களிலும் அதிகமாக பயிராகிறது.
- வெற்றிலைப் பயிருக்கு விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டி பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள்
- வெற்றிலை பயிராகும் நிலப்பகுதிக்கு வெற்றிலை கொடிக்கால் என்கிறார்கள். மிதமான தட்பவெப்பம், மண்வளம், தண்ணீர்வசதி உள்ள பகுதிகளில் வெற்றிலை பயிராகும்
- கருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள் ஆண்வெற்றிலைகள் என்றும், இளம்பச்சை வெற்றிலைகள் பெண்வெற்றிலைகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. வெற்றிலையில் பச்சை வெற்றிலை, வெள்ளை வெற்றிலை, கற்பூரவள்ளி என சில வகைகளை நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம் பகுதிகளில் பயிரிடப்படுகின்றன. இவற்றுள் கற்பூர வள்ளி வெற்றிலை வடமாநிலங்களுக்கு அதிகளவில் ஏற்பமதியாகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
- மருத்துவ குணங்கள் வெற்றிலைக்கு நிறைய உண்டு. உணவு செரிக்க, ரணங்கள் தீர பயன்படுத்துகிறார்கள்
- தமிழர்கள் வெற்றிலையை எல்லா மங்கள காரியங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்
பயிரிடலில் அகத்தி தொடர்பு தொகு
நெல் அறுவடை முடிந்த வயலைப் பக்குவப்படுத்தி, புரட்டாசி மாதத்தில் பட்டம் தயாரித்து அகத்தி விதைகளைப் பயிரிடுவர். கார்த்திகை மாதத்தில் அகத்தி செடிகள் சுமார் இரண்டு அல்லது மூன்று அடிகள் உயரத்தில் வளர்ந்திருக்கும் நிலையில் கொடிகளை நடுவர். சுமார் மூன்று கணுக்கள் உள்ள கொடிகளாக வெற்றிலைக் கொடிகளை வெட்டி வைத்துக்கொண்டு ஒரு கணு மண்ணில் புதையும் வகையில் நடுவர். 40 நாள்களுக்குப் பின்னர் வெற்றிலைக்கொடியை அருகிலுள்ள அகத்திச்செடியுடன் கோரையால் பிணைத்துக் கட்டுவர். வெற்றிலைக்கொடிக்கு அதிக வெயில் கூடாது. நிழல் பாங்கான பகுதி தான் அவசியம். மேலும் இலையுதிர் காலத்திலும் இலை உதிராதது அகத்தி. அதனால்தான் வெற்றிலை சாகுபடிக்கு நம் முன்னோர்கள் அகத்தியைத் தேர்வு செய்திருக்கின்றார்கள்.[1]
வெற்றிலையில் உள்ள சத்துக்கள் தொகு
- வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44.[சான்று தேவை]
- தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.[சான்று தேவை]
- வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.[சான்று தேவை]
மேலும் காண்க தொகு
படத்தொகுப்பு தொகு
-
சந்தையில் வெற்றிலை, பாக்கு விற்கும் இடம்
-
வெற்றிலைச்செடி
-
வெற்றிலை தோட்டம்
மேற்கோள்கள் தொகு
- ↑ எம். சங்கர், கும்பகோணம் கொழுந்து வெற்றிலை, தினமணி புத்தாண்டு மலர் 2015