சந்தேலர்கள்

சந்தேலர்கள் (Chandela or Chandel) மத்திய இந்தியாவின் புந்தேல்கண்ட் பகுதியை ஆண்ட இராஜபுத்திர அரசகுலத்தை சேர்ந்தவர்கள்.[1] சந்தேலர்கள் புந்தேல்கண்ட் பகுதியை கி பி பத்தாம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டு முடிய, கஜுராஹோவில் கலிஞ்சர் மற்றும் மகோபா ஆகிய நகரங்களை தலைநகராகக் கொண்டு அரசாண்ட மன்னர்கள்.

சந்தேல வம்சம்
[[கூர்ஜர-பிரதிகார அரச குலம்|]]
பத்தாம் நூற்றாண்டு–பதிமூன்றாம் நூற்றாண்டு
தலைநகரம் கஜுராஹோ
கலிஞ்சர்
மகோபா
மொழி(கள்) சமஸ்கிருதம்
இந்துஸ்தானி மொழி
சமயம் இந்து
பௌத்தம்
சமணம்
அரசாங்கம் முடியாட்சி
ராஜா நன்னூகா
 -  1017–1029 வித்தியாதரன்
கீரத் பால் சிங் சந்தேல்
வரலாற்றுக் காலம் மத்தியகால இந்திய அரசுகள்
 -  உருவாக்கம் பத்தாம் நூற்றாண்டு
 -  குலைவு பதிமூன்றாம் நூற்றாண்டு
கஜுராஹோ கோயிலின் கட்டிடக்கலை
கஜுராஹோவில் மன்னர் லெட்சுமனவர்மன் கட்டிய இலக்குவன் கோயில்

சந்தேல மன்னர் வித்தியாதரன் ஆட்சிக் காலத்தில் கஜினி முகமது, இந்தியாவின் மீது படையெடுத்து கலிஞ்சர் கோட்டையை தாக்கினான்.

சந்தேலர் எனும் சொல்லிற்குப் பொருள் சந்திர குலத்தவர்கள் எனபதாகும்.[2] [3][4][5]

மன்னர் வித்தியாதரன் காலத்தில் (1017–29) கஜுராஹோவில் உள்ள கந்தாரிய மகாதேவர் கோயில் மற்றும் கலிஞ்சர் கோட்டை சிறப்புடன் விளங்கியது. [6]

வரலாறுதொகு

கி பி 10 முதல் 13-ஆம் நூற்றாண்டு முடிய மத்திய இந்தியாவின் புந்தேல்கண்ட் பகுதியை ஆண்ட சந்தேல ஆட்சியாளர்களின் முதல் தலைநகரம் கஜுராஹோ ஆகும். பின்னர் தலைநகரத்தை மகோபாவிற்கு மாற்றினர்.

கஜுரஹோ நகரத்தை தலைநகராகக் கொண்ட சந்தேல அரசு, கூர்ஜர-பிரதிகார பேரரசின் பகுதியாக இருந்தது.[7] கூர்ஜர-பிரதிகார பேரரசிற்கு திறை செலுத்தி ஆண்ட சந்தேல அரசை, நன்னூகா முதல் ஹம்மிரவர்மன் முடிய பல மன்னர்கள் ஆண்டனர். கூர்ஜர-பிரதிகார பேரரசு வீழ்ச்சையடைந்த பின்னர் தனியுரிமையுடன் சந்தேல அரசை ஆண்டனர். சந்தேல அரசர்களில் புகழ் பெற்ற மன்னர் வித்தியாதரன் (1017–1029) ஆவார்.

சந்தேல அரசின் நிறுவனர் நன்னுகா என்பவர் கஜுராஹோ நகரத்தை தலைநகராகக் கொண்டு புந்தேல்கண்ட் பகுதியை அரசாண்டார். [8]

சந்தேல ஆட்சியாளர்கள்தொகு

 • நன்னுகா, சந்தேல அரசின் நிறுவனர்
 • இராகில்யா
 • ஹர்சா (900–925)
 • யசோவர்மன் அல்லது இலட்சுமனவர்மன் (925–950) — கஜுரவோவில் இலக்குவன் கோயில் மற்றும் சதுர்புஜர் கோயில்களை கட்டியவர்
 • தங்கா (c. 950–1008) — கஜுராஹோவில் பார்சுவநாதர் மற்றும் விஸ்வநாதர் கோயில்களை கட்டியவர்.
 • கந்தா (1002–1017) — ஜெகதாம்பிகை மற்றும் சித்திரகுப்தர் கோயில்களை கட்டியவர்
 • வித்தியாதரண் (1017–29) — கஜுராஹோவில் கந்தாரிய மகாதேவர் கோயிலைக் கட்டியவர்)
 • விஜயபாலன் (1035–1045) – தலைநகரை கஜுராஹோவிலிருந்து மகோபாவிற்கு மாற்றியவர்
 • தேவவர்மன் – காலச்சூரிகளால் வெல்லப்பட்டவர்.
 • கீர்த்திவர்மன்
 • சல்லாக்சனவர்மன்
 • ஜெயவர்மன்
 • பிரிதிவிவர்மன்
 • மதனவர்மன் (1129–1163)[8]:22 – மதனசாகர் ஏரியை நிறுவியவர்
 • யசோவர்மன் (பரமார வம்சம்)|யசோவர்மன்]]
 • பரமார்த்தி (1165-1202)[8]:22 – இவன் படைத்தலைவர்கள் மூன்றாம் பிரிதிவிராஜ் சௌகானுடன் போரிட்டவர்கள்
 • திரைலோக்கியவர்மன்
 • இரண்டாம் வீரவர்மன் 1315 முடிய [8]:23
 • போஜவர்மன்
 • ஹம்மிரவர்மன்

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. http://www.mptourism.com/web/explore/destinations/khajurao.aspx
 2. HISTORY OF CHANDELS
 3. The Early Rulers of Khajurāho, Sisirkumar Mitra, Motilal Banarsidass Publ., 1977
 4. Kanhaiyalal Agrawal, Bharat ke Sanskritic Kendra Khajurao, McMillan, 1980
 5. Harihar Vitthal Trivedi, Inscriptions of the Paramaras, Chandellas, Kachchhapaghatas and Two Minor Dynasties, Archaeological Survey of India, 1991
 6. http://jabalpurcity.com/about/transportaion/[தொடர்பிழந்த இணைப்பு]
 7. Radhey Shyam Chaurasia, History of Ancient India: Earliest Times to 1000 A. D.
 8. 8.0 8.1 8.2 8.3 Sen, S.N., 2013, A Textbook of Medieval Indian History, Delhi: Primus Books, ISBN 9789380607344

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தேலர்கள்&oldid=3320263" இருந்து மீள்விக்கப்பட்டது