மதனவர்மன்

செசகபுத்தியின் மன்னன்

மதனவர்மன் (Madanavarman) (ஆட்சிக் காலம் பொ.ச. 1128-1165 ) மத்திய இந்தியாவின் புந்தேல்கண்ட் பகுதியை ஆண்ட இராஜபுத்திர அரசகுலத்தை சேர்ந்த சந்தேல அரசனாவான். இவன் தனது தந்தை பிருத்விவர்மனுக்குப் பிறகு செசகபுக்தி பகுதியின் ஆட்சியாளரானான். அண்டை இராச்சியங்களை அடிபணியச் செய்ததன் மூலம் இவன் சந்தேல மகிமையை புத்துயிர் அளித்தான். மேலும் பல ஏரிகளையும் கோவில்களையும் நிர்மானித்தான்.

மதனவர்மன்
செசகபுக்தியின் அரசன்
ஆட்சிக்காலம்அண்மை. 1128–1165 பொ.ச.
முன்னையவர்பிரிதிவிவர்மன்
பின்னையவர்இரண்டாம் யசோவர்மன் அல்லது பரமார்தி
அரசமரபுசந்தேலர்கள்
தந்தைபிரிதிவிவர்மயசோவர்மன்

இராணுவ வாழ்க்கை தொகு

மதனவர்மனின் வாரிசுகளின் கல்வெட்டுகள் வழக்கமான புகழைப் பயன்படுத்தி இவனது இராணுவ சாதனைகளை விவரிக்கின்றன. ஆனால் எந்த குறிப்பிட்ட விவரங்களையும் வழங்கவில்லை. [1]

அண்டை நாடுகளுடனான உறவுகள் தொகு

மவூ கல்வெட்டு, சந்தேல மன்னன் மற்ற அனைத்து மன்னர்களையும் அடிபணியச் செய்ய மதனவர்மனின் மந்திரி கதாதரன் உதவி செய்ததாகக் கூறுகிறது. [2] மதனவர்மனின் பெயரைக் கேட்டு சேதி மன்னன் ஓடிவிட்டான். காசியின் அரசன் இவனுக்கு பயந்து நட்பாக இருந்தான். மால்வாவின் மன்னன் விரைவில் இவனுக்கு மரியாதை செலுத்தினர் என்று அக்கல்வெட்டுக் கூறுகிறது. இவை ஒரு அரசவைக் கவிஞரின் வெளிப்படையான மிகைப்படுத்தல்கள் என்றாலும், மதனவர்மன் இந்த ஆட்சியாளர்கள் மீது அரசியல் செல்வாக்கைச் செலுத்த முடிந்தது என்று தோன்றுகிறது. [3]

செயசிம்ம சித்தராசனுடனான மோதல் தொகு

கிருட்டிணன் கம்சனை தோற்கடித்தது போல், மதனவர்மன் குர்ஜர மன்னனை தோற்கடித்ததாக கலிஞ்சர் கல்வெட்டு கூறுகிறது. இங்கு குர்ஜரம் என்பது குசராத்தைக் குறிக்கிறது. மேலும் அதன் மன்னர் குசராத்தின் சோலாங்கி ஆட்சியாளர் செயசிம்ம சித்தராசனுடன் அடையாளம் காணப்படுகிறான். சோலாங்கியப் பேரரசும், சந்தேலப் பிரதேசமும் பரமாரப் பேரரசால் பிரிக்கப்பட்டன.[4]

நிருவாகம் தொகு

மதனவர்மனின் தந்தையிடம் பணியாற்றிய கற்றறிந்த பிராமணனான கதாதரன் என்பவன் இவனிடம் பிரதம அமைச்சராக இருந்துள்ளான். கதாதரனின் வேதங்கள் பற்றிய அறிவையும், தெட்டு கிராமத்திற்கு அருகில் ஒரு விட்டுணு கோவிலையும், ஒரு குளத்தையும் கட்டியது உட்பட கதாதரனின் தயாள செயல்களை மவூ கல்வெட்டு புகழ்கிறது. [5]

அஜயபாலன் என்பவன் மதனவர்மனின் சேனாதிபதியாக இருந்துள்ளான. பரமார்தியின் செம்ரா கல்வெட்டு சேனாபதி கில்கனனின் மகன் என்று இவனைப் பற்றிக் கூறுகிறது.

மதனவர்மன் தங்கம், வெள்ளி மற்றும் செம்பு நாணயங்களை வெளியிட்டான். அனுமன் உருவம் கொண்ட செப்புக் காசுகளையும் வெளியிட்டான். இந்த நாணயங்களில் "ஸ்ரீமான் மதன-வர்ம-தேவன்" என்று அவனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. [6]

பொதுப் பணிகள் தொகு

பரமலா-ராசோவின் கூற்றுப்படி, மதனவர்மன் ஏராளமான ஏரிகளையும் கோயில்களையும் உருவாக்கினான். இவன் பிராமணர்களுக்கு ஏராளமான தங்கம், நகைகள், குதிரைகள், யானைகளை பரிசாக அளித்தான் எனவும் தெரிகிறது. [7]

கலிஞ்சரிலும், அஜய்கரிலும் உள்ள கட்டிடங்கள் மதனைவர்மனைப் பற்றி கூறுகிறது. மகோபாவில் ஏரியைச் சுற்றி அமைந்துள்ள சிதிலமடைந்த சிவன் , விஷ்ணு கோயில்கள் இவருடையது என்று கூறப்படுகிறது. அகரில் (திகம்கர் மாவட்டம்) உள்ள மதனேச-சாகர-புரத்தி பாழடைந்த கோயிலும் இவனது பெயரைக் கொண்டுள்ளது. இவனது நினைவாக "மதன-சாகரம்" (அல்லது மதன் சாகர்) என பெயரிடப்பட்ட ஏரிகள் திகம்கர் மாவட்டத்தில் மகோபா, சதாரா, அகர்-நாராயண்புரம் பகுதியில் அமைந்துள்ளன. இவனால் நிறுவப்பட்ட கோயில்கள் இந்த ஏரிகளின் கரையில் ஒரு காலத்தில் அமைந்திருந்தன. பல இடங்கள் மதனவர்மனின் பெயரால் அழைக்கப்படுகின்றன. ஜான்சி மாவட்டத்தில் மதன்புரா, மகோபாவிற்கு அருகிலுள்ள மதன்கேரா ஆகியவை இதில் அடங்கும். [8]

அகர், கஜுராஹோ, மகோபா, பாபௌரா மற்றும் பிற இடங்களில் இவனது ஆட்சிக் காலத்திலிருந்த சமண தீர்த்தங்கரர்களின் பல உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. [9]

சொந்த வாழ்க்கை தொகு

மதனவர்மனின் பொ.ச.1192 ஆண்டு கல்வெட்டு, ஒன்று இப்போது பாரத் கலா பவனில் உள்ளது. அதில் மகாராணி (தலைமை ராணி) வல்கனா-தேவி, ரசனி லக்கமாதேவி , ரசனி சாந்தலா தேவி என இவனது மூன்று இராணிகளைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. [10]

கலிஞ்சர் கல்வெட்டு படி, பிரதாபவர்மன் இவனது இளைய சகோதரன் ஆவான். [11] இரண்டாம் யசோவர்மன் மதனவர்மனின் மகனாவான். இவனது பேரன் பரமார்திதேவன். யசோவர்மன் ஒருபோதும் ஆட்சி செய்யவில்லை அல்லது மிகக் குறுகிய காலத்திற்கு ஆட்சி செய்தான். மதனவர்மனுக்குப் பிறகு பரமார்தி ஆட்சி செய்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. [2]

சான்றுகள் தொகு

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதனவர்மன்&oldid=3592256" இலிருந்து மீள்விக்கப்பட்டது