சோலாங்கிப் பேரரசு
சோலாங்கி பேரரசு (Solanki dynasty) (ஆட்சிக்காலம்: பொ.ஊ. 950–1300), தற்கால குசராத்து மாநிலத்தின் பதான் நகரத்தை தலைநகராகக் கொண்டு சௌராட்டிர தீபகற்பம் மற்றும் தற்கால குசராத்தின் மேற்கு பகுதிகளை ஆண்டவர்கள். சோலாங்கிகள், சாளுக்கியர் குலத்தினரின் வழித்தோன்றல்கள் என்பர். பொ.ஊ. 1026இல் அலாவுதீன் கில்சியின் குஜராத் மீதான படையெடுப்புக்குப் பின் சோலாங்கிப் பேரரசு வீழ்ச்சி அடைந்தது.[1] பிரபாச பட்டினம் என்ற கடற்கரையில் உள்ள சோமநாதபுரம் கோயில் தரைமட்டமாக்கப்பட்டு, கோயில் செல்வங்கள் அலாவுதீன் கில்ஜியால் கொள்ளையடிக்கப்பட்டது.
சோலாங்கிப் பேரரசு | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பொ.ஊ. 960–பொ.ஊ. 1243 | |||||||||||
தலைநகரம் | அன்கில்வாட், தற்கால பதான், குஜராத் | ||||||||||
சமயம் | இந்து, சமணம் | ||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||
• 940-995 | மூலராஜன் | ||||||||||
• 996-1008 | சாமுண்டராஜன் | ||||||||||
• 1008 | வல்லபராஜன் | ||||||||||
• 1008-1022 | துர்லபராஜன் | ||||||||||
• 1022-1064 | முதலாம் பீமதேவன் | ||||||||||
• 1064-1092 | முதலாம் கர்ணதேவன் | ||||||||||
• 1092-1142 | ஜெயசிம்ம சித்தராஜன் | ||||||||||
• 1142-1171 | குமாரபாலன் | ||||||||||
• -1171-1175 | அஜய்பாலன் | ||||||||||
• 1175-1178 | இரண்டாம் மூலராஜன் | ||||||||||
• 1178-1240 | இரண்டாம் பீமன் | ||||||||||
• 1240-1244 | திரிபுவனபாலன் | ||||||||||
வரலாறு | |||||||||||
• தொடக்கம் | பொ.ஊ. 960 | ||||||||||
• முடிவு | பொ.ஊ. 1243 | ||||||||||
|
சோலாங்கி அரசர்களுக்குப் பின்னர் வந்த வகேலா குல அரசர்கள் 1243 முதல் 1304 முடிய 76 ஆண்டுகள் ஆண்டனர்.
சோலாங்கி குல ஆட்சி
தொகுமூலராஜன்
தொகுமூலராஜன் பொ.ஊ. 940 – 941 ஆண்டுகளில் சோலாங்கிப் பேரரசை பதான் நகரத்தை தலைநகராகக் கொண்டு, சோலாங்கிப் பேரரசை நிர்மாணித்தார். [1]
மூலராஜனுக்குப் பின் வந்த முதலாம் பீமதேவன் தன் குலக் கடவுளான சூரியனுக்கு, மதோரா நகரத்தில் சூரியன் கோயில் கட்டினான்
முதலாம் பீமதேவனின் மறைவிற்குப் பின், அவன் நினைவாக அவனது மனைவி உதயமதி மற்றும் மகன் இரண்டாம் பீமதேவன் இணைந்து பதான் நகரத்தில் அழகிய சிற்பங்களுடன், ஆயிரக்கணக்கான படிகளுடன் கூடிய படிக்கிணற்றை கட்டினார்கள்.
பீமதேவனுக்குப் வந்த முதலாம் கர்ணதேவன் பில் பழங்குடி இனத்தவர்களை வென்று கர்ணாவதி எனும் தற்கால அகமதாபாத் நகரை நிறுவினான். பீமதேவனுக்கும், ராணி மினாள்தேவிக்கும் பிறந்தவனே சித்தராஜன் ஜெய்சிங் ஆவார்.
சித்தராஜன் ஜெய்சிங்
தொகுகுஜராத்தை சித்தராஜன் ஜெய்சிங் 1094 முதல் 1144 வரை ஆண்டான். இவன் சோலாங்கிப் பேரரசை விரிவு படுத்தினான். சௌராட்டிர தீபகற்பம், கட்ச் மற்றும் மாளவம், ஜூனாகாத் பகுதிகளை கைப்பற்றி சோலங்கி குல பேரரசன் ஆனான்.
குமாரபாலன்
தொகுசித்தராஜன் ஜெய்சிங்கின் மகன் குமாரபாலன் 1143–1172 முடிய 29 ஆண்டுகள் சோலங்கி குலப் பேரரசனாக விளங்கினான். சமண சமய குருமார்களை ஆதரித்து, தீர்த்தங்கரர்களுக்கு தில்வாரா கோயில் எழுப்பினான். அலாவுதீன் கில்ஜியால் இடிக்கப்பட்ட சோமநாதபுரம் சிவன் கோயிலை மீண்டு கட்டி எழுப்பினான். இவனுடைய காலத்தில் குஜராத் செல்வச் செழிப்புடன் விளங்கியது.
முகமது கஜினிக்கு பின் குஜராத் மீது படையெடுத்து வந்த கோரி முகமதை விரட்டி அடித்தான்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. p. 28-29. ISBN 978-9-38060-734-4.