இரண்டாம் பீமன்

இரண்டாம் பீமன் (Bhima II) (கிபி 1178–1240), மேற்கிந்தியாவில் இருந்த கூரஜர தேசத்தை ஆண்ட சாளுக்கிய சோலங்கி குல மன்னர் ஆவார். இவரது ஆட்சியின் போது கூர்ஜர தேசத்தை (தற்கால குஜராத்) கோரி வம்சத்தவர், பராமரர்கள் மற்றும் தேவகிரி யாதவர்கள் தாக்கினர். இருப்பினும் மன்னர் இரண்டாம் பீமனின் படைத்தலைவர்களான அர்னோராஜா, லவணபிரசாத் மற்றும் விரதபாலன் ஆகியோர் போரிட்டு நாட்டை காத்தனர். பின்னர் இப்படைத்தலைவர்களின் வழித்தோன்றல்கள் வகேலா வம்சத்தை நிறுவினர்.

இரண்டாம் பீமன்
அபிநவ-சிறீதரராஜ சப்தமா-சக்கரவர்த்தி பால-நாராயணன்
கூர்ஜரம் மன்னர்
ஆட்சிக்காலம்கிபி 1178–1240
முன்னையவர்இரண்டாம் மூலராஜா
பின்னையவர்திரிபுவனபாலன்
துணைவர்லீலாதேவி மற்றும் சுமலதாதேவி
வம்சம்சாளுக்கிய சோலாங்கி
மதம்சமணம்
Map
இரண்டாம் பீமன் ஆட்சிக் காலத்திய கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்ட இடங்கள்[1]

மன்னர் இரண்டாம் பீமன் கும்லியில் நவ்லாகா கோவில், மியானியில் ஹர்சத் மாதா கோயில், துவாரகையில் ருக்மணி தேவி கோயில், பராதியாவில் இராம லெட்சுமண கோயில், பஞ்சமகாலில் சிவபெருமான் கோயிலையும் கட்டினார்.

இளமை வாழ்க்கை

தொகு

சாளுக்கிய சோலாங்கி குல மன்னரான அஜய்பாலாவின் மகன் இரண்டாம் பீமன் ஆவார். இவர் இவரது சகோதரர் இரண்டாம் மூலராஜாவிற்குப் பின் கூர்ஜர நாட்டின் மன்னராக இளம் வயதில் பதவியேற்றார். இவரது படைத்தலைவரான அர்னோராஜாவின் வாரிசுகள் வகேல வம்சத்தை நிறுவினார்கள்.[2]

பிணக்குகள்

தொகு

போசாளப் பேரரசரின் கல்வெட்டுக குறிப்புகளின் படி, இரண்டாம் வீர வல்லாளனை வென்று கூர்ஜர தேசத்தின் லாட பிரதேசத்தை கைப்பற்றி அந்நாட்டு மன்னர் முதலாம் பீமனை வென்றார்.

இரண்டாம் பீமனின் ஆட்சியின் போது 1189-இல் தேவகிரி யாதவப் பேரரசர் ஐந்தாம் பில்லம்மா குஜராத் மீது படையெடுத்ததாக முத்கி கல்வெட்டுக்கள் கூறுகிறது.

சக்கம்பாரியின் சகமானர்கள்

தொகு

இரண்டாம் பீமனின் ஆட்சிக்காலத்தின் போது, சாளுக்கியர்கள், கன்னோசி நாட்டை ஆண்ட சாகம்பரியின் சௌகான் மன்னரான மூன்றாம் பிரிதிவிராஜ் சௌகானுடன் நாகவுர் மற்று அபு மலைப் பகுதிகளில் போரிட்டனர்.

1178-இல் ஆப்கானித்தானின் கோரி வம்ச மன்னர் கோரி முகமது முதல் முறையாக குஜராத்தை முற்றுகையிட்டான். ஆனால் கோரி முகமது போரில் இரண்டாம் மூலராஜாவிடம் தோற்றுப்போனான்.[3]

1190-ஆம் ஆண்டின் நடுவில் கோரி முகமது, கன்னோசி நாட்டை ஆண்ட சாகம்பரியின் சௌகான் மன்னரான பிரிதிவிராஜ் சௌகானை வென்றார். 4 பிப்ரவரி 1197 அன்று கோரி முகமதுவின் படைத்தலைவர் குத்புத்தீன் ஐபக்கின் படைகள், சாளுக்கிய சோலாங்கி குல மன்னரின் தலைநகரான பதான் நகரத்தை கைப்பற்றினர். இப்போரில் 50 ஆயிரம் குஜராத் படைவீரர்கள் கொல்லப்பட்டதாக 13-ஆம் நூற்றாண்டில் வரலாற்று ஆசிரியர் அசன் நிஜாமி குறித்துள்ளார். ஆனால் பதான் போரில் சாளுக்கிய சோலாங்கி வீரர்கள் 15,000 பேர் கொல்லப்பட்டதாகவும் 20,000 பேர் சிறை பிடிக்கப்பட்டதாகவும் 16-ஆம் நூற்றாண்டின் இசுலாமிய வரலாற்று ஆசிரியர் பெரிஷ்தாவின் குறிப்புகள் கூறுகிறது.[4]

பராமரர்கள்:சுபதாவர்மன்

தொகு

மால்வாவின் பரமாரப் பேரரசர் தனது இராச்சியத்தை சாளுக்கியர்கள் கைப்பற்றியது. பின் 12ம் நூற்றாண்டில் மீண்டும் பராமரர்கள் மால்வாவை மீட்டெடுத்தனர். கோரி முகமது சாளுக்கியர்கள் மீது போர் தொடுத்ததால், 1204-ஆம் ஆண்டில் லாட தேசப் பகுதிகளை மீண்டும் மால்வாவின் பராமர மன்னர் சுபதவர்மன் கைப்பற்றியதுடன் அல்லாமல் பதான் நகரத்தின் மீதும் போர் தொடுத்தான்.[5]

தேவகிரி யாதவர்கள்

தொகு

இரண்டாம் பீமனின் ஆட்சியின் போது, 1213-ஆம் ஆண்டில் கூர்ஜரத்தின் தெற்குப் பகுதியான லாட பிரதேசம் மீண்டும் தேவகிரி யாதவர்கள் தாக்கினர். அப்போது இரண்டாம் பீமன் சாளுக்கியர்களிடம் படை உதவி கேட்டார். பரமாரப் பேரரசின் மன்னர் சிங்கா தேவகிரி யாதவர்களை தோற்கடித்தார்.

சொந்த வாழ்க்கை

தொகு

இரண்டாம் பீமனுக்கு லீலாதேவி மற்றும் சுமலாதேவி இருந்தனர்.[26] லீலாதேவி 1205 காடி கல்வெட்டு மூலம் சான்றளிக்கப்பட்டபடி, இராணி லீலாதேவி ஜலோர் நாட்டின் சௌகான் வம்ச ஆட்சியாளரான சமரசிம்மாவின் மகள் ஆவார். இரண்டாம் பீமனுக்கு அபிநவ-சித்தராஜா, சப்தம-சக்ரவர்த்தி மற்றும் பால-நாராயணா என்ற பட்டங்களை இருந்தன. இரண்டு கல்வெட்டுகளின்படி, அவர் 1217 இல் சோமநாதர் கோயில் முன் மேகத்வானி என்ற மண்டபத்தை கட்டினார். பீமேஸ்வரா மற்றும் லீலேஸ்வரா கோவில்களை 1207இல் இராணி லீலாவதியின் சிறப்புக்காக அவரது பெயரால் நிறுவப்பட்ட நகரமான லீலாபுரத்தில் கட்டப்பட்டது. அவரது மற்றொரு ராணியான லவணபிரசாதாவின் மகள் சுமலாதேவியும் சுசாடி மானியத்தின்படி 1239 ஆண்டிற்கு முன்னர் சுமலேஸ்வரர் கோயிலைக் கட்டினார்.

கட்டிய கோயில்கள்

தொகு

இரண்டாம் பீமன் கும்லியில் நவ்லாகா கோவில், மியானியில் மியானியில் ஹர்சத் மாதா கோயில் பராதியாவில் இராம லெட்சுமணன் கோயில், துவாரகையில் ருக்மணி கோயில் நீலகண்ட பஞ்சமகாலில் மகாதேவர் கோயில்களை கட்டினார். கும்லி நவ்லாகா கோவில் அருகே கியான் படிக்கட்டுக் கிணற்றை நிறுவினார்.

இறுதிக் காலம்

தொகு

பீமனின் தளபதி லவணப்பிரசாத் மற்றும் அவரது மகன் விராதாவாலா ஆகியோர் வகேலா வம்சத்தை நிறுவினர், இது பீமனின் மரணத்திற்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத்தின் சாளுக்கியர்களை மாற்றியது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_பீமன்&oldid=4181629" இலிருந்து மீள்விக்கப்பட்டது