நவ்லாகா கோவில்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சூரியக் கோயில்

நவ்லாகா கோயில் (Navlakha Temple) என்பது இந்திய மாநிலமான குசராத்தில் கும்லி என்ற இடத்தில் அமைந்துள்ள பொ.ஊ. 12ஆம் நூற்றண்டைச் சேர்ந்த கோயிலாகும். இது ஜெத்வா ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது. [1]

நவ்லாகா கோயில், கும்லி
நவ்லாகா கோயில், கும்லி

வரலாறு

தொகு
 
இடிபாடுகளுடன் நவ்லாகா கோயில், 19 ஆம் நூற்றாண்டு (1876)

சூரியக் கடவுளான சூரிய தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குசராத்தின் பழமையான சூரியக் கோயிலாகும். இது 12ஆம் நூற்றாண்டில் ஜெத்வா ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது. [2] இது குசராத்தில் உள்ள கோயில்களிலேயே மிகப்பெரிய தளத்தை கொண்டுள்ளது, இது 45.72 x 30.48 மீ. நீளம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இதில் ஒரு அழகான நுழைவு வளைவு அல்லது கீர்த்தி தோரணம் இருந்தது. அது இப்போது அழிந்துவிட்டது. இங்கே, பிரம்மா, சாவித்திரி, சிவன், பார்வதி, இலட்சுமி நாராயணன் ஆகிய தெய்வங்களின் சிலைகளும் உள்ளன .

ஒன்பது லட்சம் செலவில் கட்டப்பட்டதால் இக்கோயிலுக்கு நவ்லாகா என்று பெயர் வந்தாகத் தெரிகிறது. இந்த கோயில் மாரு-குர்ஜாரா கட்டிடக்கலையில் (அல்லது சோலாங்கி பாணியில்) கட்டப்பட்டுள்ளது. [3]

பிரதான கோயிலுக்கு வெளியே கும்லி விநாயகர் கோயில் என்று அழைக்கப்படும் ஒரு [[பிள்ளையார் கோயில் உள்ளது. இந்த கோயில் 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது [4]

தற்போதைய நிலை

தொகு

இந்திய இந்தியத் தொல்லியல் ஆய்வகம் கோயிலை புனரமைப்பு செய்து, சுற்றுலா மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உருவாக்கியுள்ளது. [5]

மேற்கோள்கள்

தொகு
  1. Archaeology in India. Archaeological Survey of India. 1950. p. 101.
  2. Archaeology in India. Archaeological Survey of India. 1950. p. 101.Archaeology in India. Archaeological Survey of India. 1950. p. 101.
  3. Soundara Rajan, K. V. (2001). Concise Classified Dictionary of Hinduism By K. V. Soundara Rajan. p. 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170228578.
  4. Campbell 1881, ப. 440.
  5. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவ்லாகா_கோவில்&oldid=3956044" இலிருந்து மீள்விக்கப்பட்டது