நாகவுர் மாவட்டம்

இராசத்தானில் உள்ள மாவட்டம்

நாகவுர் மாவட்டம் (Nagaur District) மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் நாகவுர் ஆகும். இராஜஸ்தான் மாநிலத்தின் பகுதியில் அமைந்த இம்மாவட்டம் அஜ்மீர் கோட்டத்தில் உள்ளது. இராஜஸ்தான் மாநிலத்தில் வடமேற்கில் தார் பாலைவனத்தில் மார்வார் பிரதேசத்தில் நாகவுர் மாவட்டம் அமைந்துள்ளது

நாகவுர் மாவட்டம்
நாகவுர்மாவட்டத்தின் இடஅமைவு இராஜஸ்தான்
மாநிலம்இராஜஸ்தான், இந்தியா
நிர்வாக பிரிவுகள்அஜ்மீர் கோட்டம்
தலைமையகம்நாகவுர்
பரப்பு17,718 km2 (6,841 sq mi)
மக்கட்தொகை3,307,743 (2011)
மக்கள்தொகை அடர்த்தி187/km2 (480/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை19.26%
படிப்பறிவு62.80%
பாலின விகிதம்950
வட்டங்கள்11
அதிகாரப்பூர்வ இணையத்தளம்
இராஜஸ்தான் மாநிலத்தின் நாகவுர் மாவட்டம்; எண் 16

அமைவிடம்

தொகு

நாகவுர் மாவட்டத்தின் வடக்கில் சூரூ மாவட்டம், வடமேற்கில் பிகானேர் மாவட்டம், வடகிழக்கில் சீகர் மாவட்டம், கிழக்கில் ஜெய்ப்பூர் மாவட்டம், தென்கிழக்கில் அஜ்மீர் மாவட்டம், தெற்கில் பாலி மாவட்டம், மேற்கிலும், தென்மேற்கிலும் ஜோத்பூர் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.

இராஜஸ்தான் மாநிலத்தில் வடமேற்கில் தார் பாலைவனத்தில் மார்வார் பிரதேசத்தில் நாகவுர் மாவட்டம் அமைந்துள்ளது. இந்தியாவின் பெரிய உப்பு ஏரியான சாம்பார் ஏரி மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம்

தொகு

நாகவுர் மாவட்டம் நாகவுர், கின்விசார், ஜெயமால், மெர்தா, தேகானா, தித்வானா, லாட்வுன், பர்பத்சார், மக்ரானா, நவா, ரியான் பாரி என 11 வருவாய் வட்டங்களைக் கொண்டது. மேலும் 11 ஊராட்சி ஒன்றியங்களும் 1607 கிராமங்களையும் கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல்

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 3,307,743 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 80.74% மக்களும்; நகரப்புறங்களில் 19.26% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 19.20% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,696,325 ஆண்களும்; 1,611,418 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 950 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 17,718 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 187 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 62.80% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 77.17% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 47.82% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 507,176 ஆக உள்ளது. [1]

சமயம்

தொகு

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 2,833,443 (85.66 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 454,487 (13.74 %) ஆகவும்; சமண சமய மக்கள் தொகை 12,940 (0.39 %) ஆகவும்; சீக்கிய சமய, கிறித்தவ, பௌத்த சமய மக்கள் தொகை மிகக் குறைவாகவும் உள்ளது.

மொழிகள்

தொகு

இராஜஸ்தான் மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் இராச்சசுத்தானி, மார்வாரி போன்ற வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

புகழ் பெற்றவர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகவுர்_மாவட்டம்&oldid=3618163" இலிருந்து மீள்விக்கப்பட்டது