நாகவுர்
நாகவுர் (Nagaur), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் நாகவுர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரத்தில் நாகவுர் கோட்டை உள்ளது. நாகவுர் நகரம் மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூர் நகரத்திற்கு கிலோ மீட்டர் தொலைவிலும்; அகமதாபாத்திற்கு கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரம் ஜோத்பூர் மற்றும் பிகானேர் நகரங்களுக்கு இடையே தார் பாலைவனத்தில் அமைந்துள்ளது.
நாகவுர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 27°12′N 73°44′E / 27.2°N 73.73°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இராஜஸ்தான் |
மாவட்டம் | நாகவுர் |
தோற்றுவித்தவர் | நாக வம்ச சத்திரியர்கள் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | நாகவுர் நகராட்சி |
ஏற்றம் | 302 m (991 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,10,797 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி, இராஜஸ்தானி மொழி |
• வட்டார மொழி | மார்வாரி மொழி |
இந்தி மொழி | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 341001 |
வாகனப் பதிவு | RJ-21 |
இணையதளம் | http://nagaur.rajasthan.gov.in/ |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 42 வார்டுகளும், 18,301 வீடுகளும் கொண்ட நாகவுட் நகரத்தின் மக்கள் தொகை 105,218 ஆகும். அதில் ஆண்கள் 54,126 மற்றும் பெண்கள் 51,092 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 944 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 70.5% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 14,077 மற்றும் 192 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 63.33%, இசுலாமியர் 33.24%, சமணர்கள் 2.48%, கிறித்தவர்கள் மற்றும் பிறர் 0.76% ஆகவுள்ளனர்.[1]
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Khimsar
- Shital Kund Balaji Temple பரணிடப்பட்டது 2010-10-30 at the வந்தவழி இயந்திரம்
- Nagaur Fort