இரண்டாம் வீர வல்லாளன்

இரண்டாம் வீர வல்லாளன் ( கன்னடத்தில் : ವೀರ ಬಲ್ಲಾಳ 2) (ஆட்சிக் காலம் 1173-1220 ) என்பவன் போசாள மன்னர்களுள் மிகவும் குறிப்பிடத் தக்க மன்னனவான். தேவகிரி யாதவர்கள் , தெற்கு கலச்சூரி , மதுரை பாண்டியர்கள், மேலைச் சாளுக்கியர் ஆகியோருக்கு எதிரான அவனது வெற்றிகள் குறிப்பிடத்தக்கது. வலுவிழக்கும் நிலையில் இருந்த சோழர்களுக்கு உதவியாகப் போசாளர்கள் கைதூக்கிவிட்டனர். [1] இவன் மகன் இளவரசன் இரண்டாம் வீர நரசிம்மன் போரிலும் , ஆட்சியிலும் தனது தந்தைக்கு ஆதரவாக இருந்தான்

சோழருடன் உறவு தொகு

இவனது பட்டத்தரசி உமாதேவியும், இவனது மற்றொரு அரசியான சோழமாதேவியும் சோழ இளவரசிகளாவர். இவனது மகள் சோமளதேவியை சோழ மன்னனான மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு மணம் செய்வித்தான்.

குறிப்புகள் தொகு

  1. Chopra, P.N.; Ravindran, T.K.; Subrahmanian, N (2003) [2003]. History of South India (Ancient, Medieval and Modern) Part 1. New Delhi: Chand Publications. ISBN 81-219-0153-7.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_வீர_வல்லாளன்&oldid=2712097" இலிருந்து மீள்விக்கப்பட்டது