பெரிஷ்தா
பெரிஷ்தா (Firishta or Ferishta) (உருது: فرِشتہ), முழுப்பெயர்: முகமது காசிம் இந்த் ஷா (Muhammad Qasim Hindu Shah ) (உருது: مُحمّد قاسِم ہِندُو شاہ ), பாரசீக வரலாற்று அறிஞரும், தென்னிந்தியாவின் தக்காண சுல்தான்களின் அரசவைகளில் பணியாற்றிவரும் ஆவார். இவர் 1560-இல் பிறந்து 1620-இல் மறைந்தவர். [1]
பெரிஷ்தா | |
---|---|
பிறப்பு | 1560 |
இறப்பு | 1620 |
வாழ்க்கை
தொகுபாரசீகத்தின் கோலம் அலி இந்து ஷாவிற்கு 1560-இல் பிறந்தவர் பெரிஷ்தா. பெரிஷ்தா சிறுவனாக இருக்கையில் அவரது தந்தை, இந்தியாவின் அகமதுநகர் சுல்தானின் இளவரசருக்கு பாரசீக மொழி கற்றுத் தர இந்தியாவிற்கு வருகை தந்தார்.
1587-இல் பெரிஷ்தா அகமதுநகர் சுல்தான் முர்துஷா நிசாம் ஷாவின் மெய்க்காவல் படையில் சேர்ந்தார். அகமதுநகர் சுல்தானை அவரது மகனும், பட்டத்து இளவரசருமான மீரான் ஷா என்பவர் கொன்று ஆட்சி பீடம் ஏறினான். ஆனால் பெரிஷ்தா அவரிடம் பணி செய்யாது, 1589-இல் பிஜப்பூர் சுல்தான் இரண்டாம் இப்ராகிம் அடில் ஷாவின் அரசவையில் பணியில் சேர்ந்தார்.
1593-இல் இரண்டாம் இப்ராகிம் அடில் ஷா, பெரிஷ்தாவை இந்திய வரலாற்றையும், தக்காணச் சுல்தான்களின் வரலாற்றையும் எழுத பணித்தார்.
பெரிஷ்தாவின் எழுத்துக்களின் மேலோட்டப் பார்வை
தொகுபெரிஷ்தாவின் இந்திய வரலாற்று நூல்களின் தொகுப்பு தரிக்-இ-பெரிஷ்தா (Tarikh-i Firishta) மற்றும் குல்ஷன்-இ-இப்ராகிம் (Gulshan-i Ibrahim) என அழைக்கப்படுகிறது. இந்நூலில் முகவுரையில் வட இந்தியாவை ஆண்ட முகலாயருக்கு முந்தைய இந்துஸ்தானத்தின் சுருக்க வரலாற்றையும், அரேபியர்கள் கிழக்கில் இந்தியாவின் சிந்து பகுதிகளை வரை கைப்பற்றியதையும் விளக்கியுள்ளார். கேரளாவின் மலபார் கடற்கரை பகுதிகளில் அரேபியர்கள் நறுமணப் பொருட்களை கொள்முதல் செய்து மேற்கத்திய நாடுகளுக்கு வணிகம் செய்தததையும், இந்தியாவில் வாழ்ந்த இசுலாமிய சூபி ஞானிகளைக் குறித்தும் எழுதியுள்ளார். மேலும் இந்தியாவின் புவியியல், தட்பவெப்பம் குறித்தும், காஷ்மீர் இராச்சிய மன்னர் சிக்கந்தர் பட்சிகான் ஆட்சியில், இந்துக்களை கொடூரமாக நடத்தியது குறித்தும் எழுதியுள்ளார்.
தரீக்-இ-பெரிஷ்தாவில் கீழ்கண்ட நூல்கள் கீழ்கண்டவர்களின் வரலாறுகள் உள்ளது.:[2]
- காஜனவி & லாகூரின் மன்னர்கள்
- தில்லி சுல்தான்கள்
- தக்காண சுல்தான்கள்:
- குஜராத் சுல்தான்கள்
- மால்வா மன்னர்கள்
- காந்தேஷ் பிரதேச மன்னர்கள்
- வங்காளம் & பிகாரின் சுல்தான்கள்
- முல்தான் சுல்தான்கள்
- சிந்து நாட்டின் ஆட்சியாளர்கள்
- காஷ்மீர் இராச்சிய சுல்தான்கள்
- மலபார் கடற்கரை குறித்த பதிவுகள்
- இந்திய இசுலாமிய சூபி ஞானிகள்
- இந்தியாவின் புவியியல் & தட்பவெப்பம்
மரபுரிமைப் பேறுகள்
தொகு1768-இல் கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரி அலெக்சான்டர் டவ் பெரிஷ்தாவின் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். [3]
ஆதாரங்கள்
தொகு- Firishta, Muhammad Qasim Hindu Shah Astarabadi (1794). Ferishta's History of Dekkan..(Vol. 1). Jonathan Scott (trans.). John Stocksdale, London.
- Firishta, Muhammad Qasim Hindu Shah Astarabadi; Tr. by Jonathan Scott (1794). Ferishta's History of Dekkan..(Vol. 2). John Stocksdale, London.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Medieval Period". Government of Maharashtra. Archived from the original on May 28, 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-08-30.
- ↑ Elliot, Henry Miers. The History of India, As Told by Its Own Historians. BiblioBazaar. பார்க்கப்பட்ட நாள் 2009-02-20.
- ↑ Cynthia Talbot (2015). The Last Hindu Emperor: Prithviraj Cauhan and the Indian Past, 1200–2000. Cambridge University Press. p. 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781107118560.
- இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Ferishta, Mahommed Kasim". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 10. (1911). Cambridge University Press.
- Devare, T. N. A short history of Persian literature; at the Bahmani, the Adilshahi, and the Qutbshahi courts. Poona: S. Devare, 1961.